முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறப்போர் இயக்கம் சார்பில் அமைச்சர் இராஜகண்ணப்பன் மீது நில மோசடிக் குற்றச்சாட்டு

அறப்போர் இயக்கம் சார்பில் அமைச்சர் இராஜகண்ணப்பன் சம்பந்தப்பட்ட நில மோசடி குறித்த புகார் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள்


சந்திப்பில் தகவல் அமைச்சர் இராஜகண்ணப்பன் மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அமைச்சர் இராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மூலமாக ரூபாய் 411 கோடி  மதிப்புள்ள ஐந்து ஏக்கர் சென்னை ஜிஎஸ்டி சாலையிலுள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக தகவல். அதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம்



இன்று புகாராக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை,  முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலாளர்,  வருவாய்த் துறை அமைச்சர், மற்றும் வருவாய் துறைச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த அரசு  நிலம் உடனடியாக மீட்கப்பட்டு அமைச்சர் திரு ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து பொது ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்தனர். 


இந்த அரசு நிலம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே BSNL அலுவலகத்திற்கு அடுத்ததாக உள்ளது  பரங்கிமலை கிராமம் சர்வே எண் 1353 எண் 12, GST சாலையில் அமைந்துள்ள நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறையின்  பதிவேடுகள் நகல் புகாருடன் இணைத்துள்ளனர்.




சர்வே எண் 1353 என்பது 4 ஏக்கர் 31,378 சதுர அடி பரப்பளவிலும் மற்றும் சர்வே எண் 1352 என்பது 12964 சதுர அடி பரப்பளவிலும் உள்ளது. இவை இரண்டும் அரசு புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில்  உள்ள ஆவண ஆதாரங்களை புகாருடன் இணைத்துள்ளனர்.




2015  ஆம் ஆண்டில் ஆலந்தூர் வருவாய் வட்டாட்சியர் சென்னை தெற்கு இணை 2 சார் பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில் சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்களென்றும் இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து வருவாய் வட்டாட்சியருக்கு  அறிக்கை அனுப்பும் படி கேட்ட நிலையில். பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் சிலருக்கு குத்தகைக்கு கொடுத்து பிறகு சுதந்திரமடைந்ததும் இந்த நிலங்கள் செட்டில்மென்ட் பதிவேட்டில் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்ததாக தெரிவித்தனர்.




டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக இருப்பவர்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு ,திவாகர் மற்றும் திலீப் குமார். மேலும் இவர்கள் மூவரும் தான் இந்த நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களாவர்.




சர்வே எண் 1353 மற்றும் சர்வே எண்  1352 நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம்  1991 ஆம் ஆண்டு முதல் முதல் 2018 ஆம் ஆண்டு வரை வரை பல பத்திரபதிவுகளைச் செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரப்பதிவு செய்ததற்கான ஆதாரங்களை புகாருடன் இணைத்து இருக்கிறது அறப்போர் இயக்கம். 1990 ஆம் ஆண்டுகளில் காதியா பெயரில் இருந்த




இந்த டெக்கான்  ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட்  ராஜகண்ணப்பனின் மகன்கள் பெயருக்கு மாறுகிறது. 20 ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுகவில் மாறிமாறி அமைச்சராக உள்ள இராஜ கண்ணப்பனின் மூன்று மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள்.

முக்கியமாக 2015- ஆம் ஆண்டில் ஆலந்தூர் வருவாய் வட்டாட்சியர் இந்த சர்வே எண்ணில் எந்தவிதமான பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று தெரிவித்த பின் மற்றும் இதற்கு முன்பாக பதிவு செய்தவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற பின்னர் அந்த பத்திரப்பதிவுகள் எதுவும் இன்றுவரை ரத்து செய்யவில்லை. இந்தக் கடிதத்திற்குப் பிறகும் கூட 2018 ஆம் ஆண்டில் இந்த நிலத்தை ஏழு லட்சத்திற்கு அடமானத்தில் இருந்து மீட்டது போல் டெக்கான் ஃபன் ஐலண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் லிமிடெட் பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது.                 Deccan's Fun Island & Hotels Ltd. (DFIHL) என்பது இந்தியாவில் 10 செப்டம்பர் 1990 ஆம் தேதியில் இணைக்கப்பட்ட ஒரு பொது வரையறுக்கப்பட்ட இந்திய அரசு சாரா நிறுவனம், 34 ஆண்டுகளும் ஒரு மாதம்  கடந்த வரலாறுள்ளது.  பதிவு அலுவலகம் சென்னை 600016, நிறுவனம் நிலை செயலில் உள்ளது, 31 மார்ச் 2023 ஆம் ஆண்டு வரை அதன் வருடாந்திர ரிட்டர்ன்கள் மற்றும் நிதி அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளது.  ரூபாய். 2.50 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் மற்றும் ரூபாய். 2.41 மில்லியன் செலுத்தப்பட்ட மூலதனம் கொண்ட பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். மொத்தம் ரூபாய் 0.70 எம்.  இதில் பிரபு கண்ணப்பன் , கண்ணப்பன் திலீப்குமார் , மற்றும் கண்ணப்பன் திவாகர் ஆகியோர் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். இதற்கு CIN/LLPINU55101TN1990PLC019626. நிறுவன எண்.019626. நிறுவனத்தின் வகைப்பாடு பப்ளிக் லிமிடெட் இந்திய அரசு சாரா நிறுவனம். இணைக்கப்பட்ட தேதி 10 செப்டம்பர் 1990 AGM தேதி 30 செப்டம்பர் 2023

இருப்பு நிலைக் குறிப்பின் தேதி. 31 மார்ச் 2023 பட்டியல் நிலை பட்டியலிடப்படாதது ROC குறியீடு

ரோக் சென்னை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (Mca) படி, Deccan'S Fun Island & Hotels Ltd. இன் பதிவு செய்யப்பட்ட முகவரி 12 GST சாலை, மதராஸ்ட். தாமஸ் மவுண்ட் இந்தியா, சென்னை 600016, தமிழ்நாடு ஆகும். இந்தப் பத்திரப்பதிவில் அமைச்சர் ராஜகன்னப்பனின் மகன்கள் தான் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள்  மற்றும் இயக்குனர்கள்.


கடந்த ஆண்டு 1352 சர்வே எண்ணில் உள்ள 12984 சதுர அடி நிலம்  மீட்கப்பட்டதாக தாலுகா அலுவலகத்தில் வெளியே வட்டாட்சியர் பல்லாவரம் பலகை வைத்துள்ளார்.  ஆனால் அதற்கு அருகிலேயே உள்ள கிட்டத்தட்ட 4.75 ஏக்கர் அளவிற்கு அமைச்சர் இராஜ கண்ணப்பனின் மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சர்வே எண் 1353 அரசு நிலங்களை  இன்று வரை மீட்கவில்லை.

அரசு வழிகாட்டி மதிப்பு படி இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1 சதுரடிக்கு ரூபாய் 11000 ஆகும். எனவே 205618 சதுரடி நிலத்தின் மதிப்பு ரூபாய் 226 கோடி ஆகும். இந்த இடத்தில் சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 1 சதுரடிக்கு ரூபாய் 20000 ஆகும்.  இதன் படி இன்றைய மதிப்பு ரூபாய் 411 கோடி ஆகும் என அறப்போர் சார்பில்  கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் அமைச்சர் இராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அறிவதாகவும்,  அமைச்சர் ராஜ கண்ணப்பன்  தன் மகன்கள் அவர்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும் எனவும் அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளது. எனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்த அலுவலர்கள் போன்றோர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கேட்டுள்ளது.


அதன் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயராம் வெங்கடேசன் ஒருங்கிணைப்பாளர் அறப்போர் இயக்கம் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். ஆனால் அதில் பத்திரிகையாளர்கள் கேட்க மறந்து போன கேள்விகள் பல உண்டு ! இந்த இடம் வருவாய்த் துறை ஆவணங்கள் படி அரசு நிலம் எப்போதிலிருந்து அதற்கு 19 B Notification 13 Published அ-  பதிவேடு எவ்வாறு உள்ளது, மற்றும் ரீ செட்டில்மென்ட் மற்றும் செட்டில்மென்ட் பதிவேட்டில் எப்படி உள்ளது, மற்றும் OSR மேலும் IFR ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்ததா இதன் டைட்டிலில் யார் பெயர் உள்ளது போன்ற விபரங்கள் அறப்போர் இயக்கத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரப்படவில்லை ஆகவே இந்த நிலம் குறித்து SF- 1, SF-1A ,SF-7, அல்லது SLR நகல் பார்த்தால் மட்டுமே இது அரசு நிலம் என்று அறிய முடியும் அதோடு இல்லாமல் இராஜகண்ணப்பன் ஏற்கனவே மின்சாரம் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை மற்றும் இரும்பு எஃகு கனிமவளம், போக்குவரத்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவியை வகித்து சட்டம் படித்த வழக்கறிஞருமாவார், நிலம் என்பது சிவில் விவகாரம் தொடர்பானது, இதை எல்லாம் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த நிலையில். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில்  18 மாதங்களில் மொத்தம் வந்த 21660 புகார்களில், வெறும் 45 புகார்களை தான் முதல் கட்ட விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ளது. ஆனால் இந்த 18 மாதங்களில் இந்த துறைக்கு மட்டும் 135 கோடி மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஊழல்களை விசாரிக்காமல் புகார்களை தலைக்கு வைத்து தூங்குவதால் மேலும் மேலும் மக்கள் பணம் கோடிக்கணக்கில் கொள்ளை போகிறது.அறப்போர் இயக்கம் கூறும் குற்றச்சாட்டுகள் படி இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ 411 கோடி மதிப்புள்ள நிலமாகும்.


அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தத்தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மகன்கள் பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சொத்துக்களை சேர்த்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலத்தை உடனடியாக அரசு மீட்க வேண்டும் எனவும் அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்வது சட்டவிரோதமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் செய்து வந்துள்ளதாகவும். அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரது மகன்கள் மற்றும் இதை மீட்டெடுக்காத வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்த பதிவாளர்கள்  மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரிக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்தாலும் ஆனால் இவர்கள் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது நிரூபிக்க வேண்டிய இடத்தில் அறப்போர் இயக்கம் உள்ளதுஒரு கோமாளி அரண்மணைக்குள் நுழைந்தால் அவன் இராஜாவாக முடியாது, மாறாக அரண்மனை சர்க்கஸ் கூடாரமாக மாறும்”. இது துருக்கியப் பழமொழி இதுதான் இன்றைய ஊழல் ஒழிப்புப் போராளிகளாகக் காட்டிக்கொள்ப வர்கள் நிலை, அதில் தான் தமிழ்நாடு அரசியலும். பல ஊழல் வழக்குகள் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தாவில் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலை உள்ளது, இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டும் தான், ஆனால் கர்நாடகா மாநிலத்தில் சிறப்பாகவே செயல்படுகிறது. காரணம் ஒரே சீரான லோக்பால் சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தத் தவறியதேயாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...