இஸ்லாமிய ஆதிக்கத்தின் கொடுமைகள் நிறைந்த ஆட்சியிலிருந்து தப்பித்து அவர்களது பழமையான பன்னாட்டு நம்பிக்கையைக் காப்பதற்கு
இந்தியாவுக்கு குடியேறிய "பார்சி இனத்தவர்களின் மூதாதையர்களைப் பற்றி அறிய இந்தியாவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பார்சி இனக் குழு மக்கள் வாழும் நிலையில் கலப்புத் திருமணம் செய்தவர்களை ஏற்காதவர்கள்.
பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டில் ஈரானில் இஸ்லாமியர்களால் ஏற்பட்ட தொல்லைகளால் மேற்கு இந்தியாவில் மஹாராஷ்டிரா குஜராத் எனக் குடிபெயர்ந்த ஈரானிய ஜோரோஸ்ட்ரியன்ஸின் குழுவே இன்றைய பார்சியர்களின் வழித்தோன்றலாகும் நீண்டகாலம் வாழ்ந்திருக்கும் பார்சிகளிடமிருந்து மிகவும் அண்மையில் இங்கு குடிபெயர்ந்த இரண்டு சிறிய இந்திய-ஜோரோஸ்ட்ரிய சமுதாயங்களை வழிநடத்தும் ஈரானியர்கள் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றனர்.பார்சி அல்லது பார்சீ என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டு பெரிய ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தினரைக்க் குறிப்பதாகும்.
இவர்களின் புனித நூல் அவெத்தா. தொடக்கத்தில் பார்சி எனும் சொல்லைப் பண்டைய பெர்சியர்கள் தங்களைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர். 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கிழக்கு இந்திய நிறுவனத்தின் மத குருவான ஹெண்ரி லார்டு பார்சி இனத்தவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்ததை "மனச்சான்றின் விடுதலை" எனக் குறிப்பிட்டுகிறார். ஆனால் அதே சமயம் "வணிகம் மற்றும் விற்பனைப் பொருள்களில் இந்தியக் கடற்கரைகளில் எல்லை வர்த்தகர்களாகவும்" அவர்கள் வருகை தந்தனர்" எனக் குறிப்பிட்டுள்ளார் இஸ்லாமிய ஆதிக்கம் செலுத்திய கோட்டைகளிலிருந்து வர்த்தகம் செய்த போது அரேபியர்கள்
இஸ்லாமியர் அல்லாத உயர் இனத்தவர்களை சமயம் சார்ந்த தொல்லைகளை அளித்ததன் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த ஒரு காரணம் மட்டுமே நாடு கடந்த குடியேற்றத்திற்கு காரணம் என்பது ஏற்புடையதல்ல .தொல்லைகளின் காரணமாக இந்த புலம் பெயர்ந்த குடியேற்றமானது பார்சி இனத்தவர்கள் தங்களைத் தாங்களே
ஊக்கப்படுத்தியவர்த்தகத்திற்கு புதிய இடங்களை திறப்பது தேவையான இடங்கள் தேடியது மற்றும் ஜோரோஸ்ட்ரிய சமுதாயத்தை விரிவுபடுத்த விரும்பியது போன்ற இரண்டு காரணிகளும் இஸ்லாமியர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களுக்கு விடுதலையளித்ததன் காரணமாக அவர்கள் குஜராத்தில் குடியேறுவதற்கு முடிவெடுத்தனர்".நான் எனது நாட்டை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்தியா ஏராளமான ஜோரோஸ்ட்ரியர்களை கொண்டுள்ளது.
அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலிருந்தாலும் அறப்பணி மற்றும் மனித நேயம் போன்ற பண்புகளில் நிகரற்று சிறந்து விளங்குகின்றனர்" என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். பிராமணர்களை விடவும் மூளை வளர்ச்சி பலம் கொண்ட அறிவாற்றல் நிறைந்தவர்கள்
பார்சி இனத்தவர்களின் உழைப்பு பம்பாய் தற்போது மும்பை நகரம் மற்றும் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயர் சூட்டப்பட்ட நாரிமன் பாயின்ட் போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க இடங்களின் முகங்களை மாற்றியது. பெரோசெஷாஹ் மேத்தா , தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா போன்றோர் இந்திய சுதந்திர இயக்கத்திலிருந்த பார்சியர்கள் ஆவர்.
அறிவியல் மற்றும் தொழிதுறைகளிலும் பாரிசிகள் சிறந்து விளங்குகின்றனர், குறிப்பாக இயற்பியல் வல்லுநர் ஹோமி பாபாவைக் குறிப்பிடலாம். மேலும் டாட்டா, கோத்ரேஜ் மற்றும் வாடியா ஆகியோர் தொழில்துறை பார்சியக் குடும்பங்கள் ஆவர். ஃப்ரெட்டி மெர்குரி, இசையமைப்பாளர் கைகோஸ்ரு ஷபுர்ஜி சோராப்ஜி மற்றும் இசைக்குழு இயக்குனர் ஜுபின் மேத்தா ஆகியோர் இசையில் சிறந்து விளங்கிய பார்சி இனத்தவர்கள்.
எழுத்தாளர் மற்றும் புகைப்படக்கலைஞர் சோனி டாராபோரெவாலா; நூலாசிரியர்கள் ரோஹிண்டன் மிஸ்ட்ரி, பிரடஸ் கங்கா, பாகிஸ்தானி எழுத்தாளர் பாப்சி சித்வா, அர்டஷிர் வாகில் மற்றும் பாகிஸ்தானி புலன்விசாரணை செய்தியாளர் அர்டஷிர் கவ்வஸ்ஜி ஆகிய பார்சி இனத்தவர்கள் கலைசார்ந்த ஆய்வுகள் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஆவர். இந்திய இராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மெனெக்ஷா பார்சி இனத்தவர் ஆவார். சட்டம் அறிந்த வல்லுநர் பாலி நாரிமன் உள்ளிட்ட புகழ் பெற்ற பார்சி இனத்தவர்கள் புகழுடன் கலந்த வாழ்க்கை முறையை விட கழுகுக்கு இரையாகும் பார்ஸி பண்பாடு. பலரை வியக்க வைக்கும் நிலையில்
ரத்தன் டாடாவும் கழுகுக்கு இரையாவாரா? என்ற விவாதம் குறித்து ஒரு சிறு பார்வை.
1000 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய மெசபடோமியா நாகரிகம் கலந்த பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரானிலிருந்து, மங்கோலிய செங்கிஸ்கான் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட பல குழுக்கள், பல திசைகளிலும் பயணமாயினர்.
அப்படிப் பயணமான ஒரு குழு குஜராத்தின் அன்றைய மன்னன் ஜாதவ் ராணாவிடம் அவரது சமஸ்தானத்தின் குடியுரிமை கேட்டது. அவரோ இங்கு குடியிருக்க இயலாது என மறுத்தான். அந்தக் குழுவின் தலைவனுக்கு பால் அனுப்பி வைத்து, நாங்கள் பால் போன்றவர்கள் இதில் உங்களால் எப்படி இணைய முடியும் என்றாராம் மன்னர். பாரசீகத்திலிருந்து வந்த அக்குழுவின் தலைவரோ, பாலில் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்து, இப்படி இணையலாமே என்றாராம். இப்படியான நிலையில்
குஜராத்தில் அந்தக் குழுவினர் வந்து தங்கி விட்டனர். இன்றளவும் அவர்கள் தங்களை இந்தியரென்று அழைத்துக் கொள்வதில்லை. பாரசீகத்திலிருந்து வந்ததால் பார்ஸிகள் என்றே அறியப்படுகின்றனர். ஜொராஷ்டிரம் அவர்கள் மதம்.
ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய வடக்கு ஈரானில் பிறந்தவர். இவர் தனது 40-வது வயதில் வட கிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்பவரைச் சந்தித்து, தனது மதக்கோட்பாடுகளை அவருக்கு விளக்கி, மன்னரை தனது சமயத்துக்கு மாற்றினார். இதன் காரணமாக, ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக வளர்ந்திருக்கிறது.
உலகில் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார். அவரது பெயர் 'அஹூரா மாஜ்டா'' என்கிறார் ஜொராஸ்டார். அதன்பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த உலகில் தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ரா மைன்யு.
நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம் தான் இந்த பூமி. இதில் நன்மை எது தீமை எது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே என்பது அவரது கருத்து.
வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு நீரின் முக்கியத்துவம் தெரியும். நீரைப் போற்றுவார்கள். குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் நெருப்பைப் போற்றுவார்கள். பார்ஸிகளின் வழிபாடு நெருப்போடு தொடர்புடையது.
நெருப்பையே வழிபடுவார்கள். ஈரானிலிருந்து எடுத்து வந்த நெருப்பை வைத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உட்வாடா பகுதியில் குடியேறிய பார்ஸிகள் நெருப்புக் கோவில் ஒன்றைக் கட்டினார்கள். அந்த நெருப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 1795 ஆம் ஆண்டில் பார்ஸியின் ஒரு சிறு கூட்டம் இராயபுரத்தில் குடியேறியது. அங்கும் ஒரு நெருப்புக் கோவில் கட்டினார்கள். இன்று வரை அந்தக் கோவிலிலும் ஈரானிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் 1,50,000 பேர் வாழ்கிறார்கள். சென்னையில் 300 குடும்பங்கள் இருக்கிறது.
1885 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய தாதாபாய் நௌரோஜி முதல் தொழிலதிபர்கள் டாட்டா, வாடியா, கோத்ரெஜ் வரை பார்சிகள் தான். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தியும் பார்ஸி தான். இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பார்ஸிகள் தான்.
ரத்தன் டாடா உள்ளிட்ட பலர் பாரசீகத்திலிருந்து இங்கு வந்து குஜராத்தில் குடியேறிய இனம் என்பதால் பார்ஸி எனப் பெயர். பார்ஸி சமூகத்தின் நடைமுறை வித்தியாசமானது.
பார்ஸிகள் தங்கள் இனத்துக்குள்ளேயே மண உறவு கொள்ளக்கூடியவர்கள். பார்ஸி இனப்பெண்ணைத் தவிர வேறு சமயத்தைச் சேர்ந்தவரை மண உறவு கொள்ள அனுமதியில்லை. இது மிகவும் மதம் சார்ந்த கண்டிப்பான உத்தரவு.
பார்ஸி ஆணோ, பெண்ணோ வேறு யாரையும் திருமணம் செய்தால், பார்ஸிகளின் வழிபாடு, சடங்குகள் மற்றும் சமூகத்திலிருந்தே முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். டாடா குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல.
டாடா வாரிசுகள் இவர்கள்.
1.ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (1839 - 1904). டாடா நிறுவனத்தை நிறுவியவர். குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரியில் பிறந்தவர். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
2.இரத்தன்ஜி தாதாபாய் டாடா ( 1856-1926) ஆர். டி. டாடா என சுருக்கமாக அழைக்கப்பட்டார். டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
3.நேவல் ஹார்முஜி டாடா (1904 -1989) இரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் வளர்ப்பு மகன்.
3.ஜே. ஆர். டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1904 -1993). இந்திய விமானப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர்.
4.ரத்தன் நேவல் டாட்டா (1937-2024) தற்போது காலமானார். நேவல் ஹார்முஜி டாடாவின் மகன்.
ஆர். டி. டாடா எனும் இரண்டாவதாக உள்ளவர் ஒரு பிரெஞ்சு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதை பார்ஸி சமூகம் ஏற்கவில்லை. அந்தப் பெண்ணை பார்ஸியாக மதம் மாற்ற ஏற்பாடு செய்தார் ஆர். டி. டாடா. அதையும் பார்ஸிகள் ஏற்கவில்லை.
இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஆர். டி. டாடா. பார்ஸிகள் சார்பாக பார்ஸி பஞ்சாயத்து எனும் அமைப்பு வாதிட்டது. ஆர். டி. டாடாவிற்கு எதிராக நீதிமன்றம் அப்போது தீர்ப்பு கூறியது. எனவே ஆர். டி. டாடாவின் குடும்பத்தை பார்ஸிகள் மதம் மற்றும் சடங்குகள் ரீதியாக ஒதுக்கி வைத்தனர்.
எனவே தான் தற்போது இறந்த ரத்தன் டாடாவின் தந்தையான நேவல் ஹார்முஜி டாடாவை வளர்ப்பு மகனாக அறிவித்தார். ஆர். டி. டாடா.
பார்ஸிகள் இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. கழுகுக்கு இரையாக வைக்கிறார்கள். இறந்த உடலைக் கொண்டு போய் வைக்கும் கட்டிடத்திற்கு "டாக்மா" அல்லது "டவர் ஆப் சைலன்ஸ்" எனப்பெயர். இதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம்.
புதைத்தால் மண் மாசுபடும். எரித்தால் காற்று மாசுபடும். நதியில் உடலை விட்டால் நீர் மாசுபடும். பூமியை மாசுபடுத்தக்கூடாது என்பதால் கழுகுக்கு உணவாகத் தந்துவிடுகிறோம் என்கிறார்கள். ஆனால் இது பாலைவனம் வழியாக அலைந்து திரியும் நாடோடிகளின் பழமையான பாலைவனச் சடங்கு என்பதே மானுடவியலாளர்களின் கருத்து.
இறந்தவரின் உடலை வெள்ளைத் துணியால் சுற்றிய பிறகு அதை யாரும் தொடக்கூடாது. உடலை வெளியே எடுத்து வரும் போது ஒரு நாய் மட்டுமே பார்க்கவேண்டும். நாய் மரணத்தின் தூதுவன் என்பது பார்ஸிகளின் நம்பிக்கை. அதன் பிறகு உடலை உயர்ந்த கட்டிடமாக உள்ள "டவர் ஆப் சைலன்ஸ்"-ல் வைப்பார்கள்.
மும்பையில் பார்ஸிகளின் இறந்த உடலை வைக்கும் "டவர் ஆப் சைலன்ஸ்" உள்ளது. இறுதிச்சடங்கு செய்பவர்கள் என பார்ஸிகளுக்குள் வெளி உலகத் தொடர்பில்லாத சிலர் உள்ளனர். அவர்களே இந்தப் பணியை செய்கிறார்கள்.
"டவர் ஆப் சைலன்ஸ்"ஸில் வைத்த பிறகு கழுகுகள் தின்றது போக மீதமுள்ள பாகத்தை அகற்றி விடுவார்கள். ஒரு ஆண்டுகள் உடல் அங்கேயே இருக்கும். விரைவில் உடல் அழிய இப்போது சூரியக் கண்ணாடி பயன்படுத்துகிறார்கள்.
பார்ஸிகள் பிராமணியப் பண்பாட்டு முறைகளை எப்போதும் ஏற்பதில்லை என்பது தனி வரலாறு.
பண்பாடுகள் பலவிதம் பார்ஸிகள் அதில் தனிவிதம் ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி தெற்கு குஜராத்தின் பரூச்சிலிருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்த குஜராத் பார்சி குடும்பத்தில் பிறந்தார். ஜவகர்லால் நேரு மகளான இந்திரா மற்றும் ஃபெரோஸ் ஆகியோர் இங்கிலாந்திலிருந்த போது, இருவரும் . மார்ச் 1942 ஆம் ஆண்டில், ஹிந்து சமயச்சடங்குகளின் படி இருவரும் திருமணம் செய்தனர். ஒரு வழியாக பார்சி களின் வாரிசுகளும் இந்திய வரலாற்றில் ஆட்சி செய்த பெருமை கொண்டனர்
கருத்துகள்