கொடிக்கம்பம் மின் கம்பியின் மீது உரசியதால் இரவு மின்சாரம் தாக்கியதில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மரணம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பணி செய்து வந்த காவல்துறை உதவி ஆய்வாளர்
சரவணன் இரவுப் பணியில் இரும்புக் கம்பத்தை தொட்ட போது மின் கம்பியின் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில். அரசினர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து சரவணனின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூபாய்.25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் சரவணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரவணன் (வயது 36) என்பவர் இன்று (அக்டோபர்.31) நல்லிரவில் சுமார் 1 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின் போது கீழே விழுந்து கிடந்த இருப்புக் கொடிகள் கம்பத்தை மின்சார லைன் செல்லும் உள்ள இடத்தில் உயர்த்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உதவி ஆய்வாளர் சரவணனின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். உதவி ஆய்வாளர் சரவணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல் அமமுக சார்பில் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்
கருத்துகள்