மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் என மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி தலைமைக் காவலருடன், பெண் ஒருவரும் கைது .தென்காசி மாவட்டம் வி.கே.புதூரைச் சேர்ந்தவர் முருகராஜ் (வயது 41).
இவர் திருநெல்வேலி மாநகரக் காவல்துறையில் இரயில்வே சந்திப்புக் காவல்நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியிலுள்ளது. அங்கு தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த வளர்மதி (வயது 40) என்ற பெண் முருகராஜுக்கு பழக்கமானார்.. ஒருகட்டத்தில் வளர்மதியும், முருகராஜூம் நெருக்கமானார்கள்.. பிறகு வளர்மதிக்கு திருநெல்வேலியில் வாடகை வீடும் கொடுத்தார் முருகராஜ்.
ஆனால், இருவருக்கும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை வந்தது. அதற்காக வளர்மதி மாவட்ட வருவாய் அலுவலர் எனச் பலரிடம் சொல்லி, பண மோசடியில் இறங்கினார் நிலத்துக்கு பட்டாவும், இளைஞர்களுக்கு அரசு வேலையும் வாங்கித்தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார்.. பணம் அதிகமாகவே அந்த மோசடியை அதிகமாகச் செய்து வந்திருக்கிறது இந்த இருவர் கோஷ்டி
மோசடியில் இவர்களிடம் சிக்கியவர் மதுரை ஒத்தக்கடை பகுதி நில வர்த்தகர் சசிகுமார் (வயது 40) அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க வேண்டும் என வளர்மதியை அணுகிதற்கு வளர்மதி, ரூபாய்.10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வாங்கியுளதாகவும் ஆனால் பல மாதங்கள் ஆகியும் பட்டா வாங்கித் தராமல் இருந்த நிலையில் தான் கொடுத்த பணத்தை வளர்மதியிடம் சசிகுமார் கேட்டுள்ளார். பணத்தையும் தராமல் முருகராஜிடம் விஷயத்தை சொல்லி உடனே முருகராஜ் ரூபாய்.10 லட்சத்திற்கான காசோலையை சசிகுமாருக்குத் தந்துள்ளார். ஆனால், அது வங்கியில் பணம் செலுத்தாமல் பவுன்ஸ் ஆகி விடவே. அதன் பின்னர் பிறகுதான், 2 பேர் மீதும் சசிக்குமாருக்கு சந்தேகம் வலுத்தது. அப்போது வளர்மதி குறித்து அலுவலகத்தில் விசாரித்த போது, அவர் மாவட்ட வருவாய் அலுவலர் இல்லை என்பது தெரிந்தது. தலைமைக் காவலர் முருகராஜுடன் சேர்ந்து அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த முருகராஜ் திருநெல்வேலி சந்திப்புக் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.. இறுதியில், வளர்மதி மற்றும் முருகராஜ் இருவரும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரிந்தது.. இப்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
கருத்துகள்