தேனி மாவட்டம் கம்பம் வட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே செலுத்தும் வீட்டுவரிக்கு பெயர் மாற்றம் செய்து ரசிது வழங்க ரூபாய். எட்டாயிரம் லஞ்சமாக வாங்கிய ஊராட்சிச் செயலாளர் சந்திரசேகர் கைது.
தேனி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாரில் ஊராட்சிச் செயலாளர் சந்திரசேகரை, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பொறி வைத்துப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சம் பெற்ற கையுடன் சிக்கிய ஊராட்சிச் செயலாளரை நீண்ட நேரம் விசாரணை நடத்தியதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
தேனி மாவட்டம் கம்பம் வட்டம் சுருளிப்பட்டி சாவடித் தெருவில் வசித்துவரும் 73 வயதாகும் சிவானந்தன் விவசாயி அவரது வீட்டுக்கு வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்து. அதற்காக 6 மாதங்களுக்கு முன் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு சுருளிப்பட்டி ஊராட்சி செயலாளர் சந்திரசேகரிடம் வீட்டுவரி பெயர் மாற்றத்துக்கு ஆதாரங்கள் இணைந்து மனு அளித்துள்ளார். அப்போது வீட்டு வரி முன் பாக்கி ரூபாய்.600 செலுத்தாமல் இருப்பதாக ஊராட்சிச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதையடுத்து விவசாயி சிவானந்தன் அந்த பணத்தை அலுவலக ஊழியரிடம் கொடுத்து விட்டு வந்தாராம். ஆனால் அதன் பின்னரும் வீட்டு வரி பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயி சிவானந்தன் கடந்த மாதம் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவை விசாரித்து, வீட்டுவரி பெயர் மாற்றம் செய்யும் படி சுருளிப்பட்டி ஊராட்சி செயலாளர் சந்திரசேகருக்கு, கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயபிரகாஷ் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அதன் பின்பும் பெயர் மாற்றம் செய்யாமல் ஊராட்சி செயலாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் சிவானந்தன் மீண்டும் சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று. அங்கு ஊராட்சி செயலாளர் சந்திரசேகர், வீட்டுவரி பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதற்கு பேரம் பேசி, கடைசியில் சிவானந்தன் ரூபாய்.8 ஆயிரம் தருவதாக கூறிவிட்டு வந்திருக்கிறார். எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாதவர்
தேனி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததன் பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரராஜன், ஆய்வாளர் ஜெயப்பிரியா மற்றும் குழுவினர் ஊராட்சிச் செயலாளரை பொறி வைத்துப் பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.8 ஆயிரத்திற்கான நோட்டுக்களை அரசு தரப்பில் சாட்சிகளுடன் விவசாயி சிவானந்தன் கொண்டு வந்த பணத்தை திருப்பிக் கொடுத்து அனுப்பினர். அங்கு வந்து சந்திரசேகரை பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். அவரிடமிருந்த இரசாயனம் தடவிய பணத்தைக் கைப்பற்றிய பின்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அலுவலகத்தில் வைத்து சந்திரசேகரிடம் நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் பதிவு செய்த FIR படி சந்திரசேகரைக் கைது செய்தனர். கம்பம் பகுதியில் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சிச் செயலாளர் கைதான சம்பவம் அப்பகுதியில் ஊழல் செய்து வரும் அரசு பணியாளர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது, அழிக்க முடியாத கரையாக இந்த பிரச்சனை இருக்கும். எனவே லஞ்சம் வாங்காமல் சேவை செய்வதே தற்போதைய நிலையில் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் நல்ல வாய்ப்பாகும். அதேநேரம் லஞ்ச ஊழலில் கைதாகும் ஊழியர்கள் மீதான வழக்கை ஓராண்டில் நடத்தி முடிக்க அரசு உத்தரவிடும் பட்சத்தில், லஞ்சம் வாங்குவோருக்கு பயம் அதிகரிக்கும். எனவே இதற்காக அரசு சட்டம் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள போதும் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உரிய நியமனம் இன்றி வலுவிழந்து உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. கர்நாடக மாநிலத்தில் அந்த மாநிலத்தில் உள்ள முன்னாள் இன்னாள் முதலமைச்சர்கள் மீதே நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில் உள்ள லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் மாத்திரம் சரியான படி செயல்பட வைக்கும் நிலையில் அரசு செயல்படவில்லை என சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசும் நிலை உள்ளது.
கருத்துகள்