ஹிந்து சமய அறநிலையத் துறையின் முறைகேடுகள் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் சூ மோட்டோ உத்தரவை அமல்படுத்த வலுக்கிறது கோரிக்கை
தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து ஆலயங்களில் இதுவரை நிகழ்ந்த அறங்காவலர்கள் நியமனத்தில்
நடந்துள்ள பெரிய ஊழல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவு படி ஆளுநர் கவனத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவு சார்பில் கொண்டு வரப்பட்டது. தர்மகர்த்தா அல்லது அவரது சார்ந்த வழிபடும் தெய்வத்தின் பாதுகாவலர் என்பதால் அறங்காவலர் என்பது கோவிலில் மிக முக்கியமான பதவியாகும். தமிழ்நாட்டில் 99 சதவீதத்துக்கும் அதிகமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.
அதனால் செயல் அலுவலர்களின் கொள்ளை மற்றும் ஊழல் அதிகரிக்க காரணமாக உள்ளது, மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை (HR & CE) மூலம் மாநில அரசு பராமரிப்பு செய்து பாதுகாப்பு செய்து வரும் கோவில்களின் அனைத்து விவகாரங்களையும் நேரடியாக நிர்வகித்து வருகிறது,
இது ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 26 க்கு எதிரானது மற்றும் ஹிந்துக்களின் மத விவகாரங்களை நிர்வகிக்கும் அடிப்படை உரிமைகளையும் மீறுகிறது. கோவில்களின் நிர்வாகத்தில் ஹிந்து சமய சமூகம் ஈடுபடுவதை அகற்றுவதே இதன் நோக்கமாகும்.
ஆனால் ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE ன் இந்த சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக பல கோவில் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் காரணமாக, சமீபத்திய முடிவுகளுக்காக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் பல விபரங்கள் வெளிவந்த நிலையில் அதிர்ச்சியடைந்தது .
அதில் ஸ்கீம் போடப்பட்ட பல தேவஸ்தான கோவில் சரியாக நடக்காமல் ஆவணங்களை மறைப்பதற்கு அறநிலையத் துறை காரணமாக அமைந்தது, அதன் மூலம் பல அறங்காவலர்கள் இல்லாமல் கோவில்கள் தொடர்பான எந்த முக்கிய முடிவையும் ஹிந்து சமய அறநிலையத் துறை HR&CE அல்லது தமிழ்நாடு அரசாங்கம் எடுக்க முடியாதென்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாகவே தீர்ப்பில் கூறியுள்ளது.
(உதாரணமாக: நந்தவனம் மற்றும் நிலங்கள் சட்ட விரோதமாக நடந்த ஆக்கிரமிப்பு, ஆலயத்தில் சுவாமிகளுக்கு அணிவிக்கும் நகைகளில் உள்ள தங்கம் உருக்குதல், ஹிந்து கோவில் நிதியில் புதிய கல்லூரிகள் திறப்பது போன்றவையும் அதில் அடங்கும்).
நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறை HR&CE, அறங்காவலர் பதவிகளை முற்றிலும் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் நிரப்ப அவசர அவசரமாக முயற்சிக்கிறது.
கறைபடியாத சாதனையும், கடவுள் பக்தியும் கொண்ட பக்தியுள்ளவர்களை நியமிப்பதற்குப் பதிலாக, ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE, அரசியல் கட்சி சார்புடையவர்களை, மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள், மற்றும் மாற்று மதம் தழுவிய நிலையில் அதை மறைத்து புனை சுருட்டுப் பெயர் கொண்ட பலர் கோவில் நலனில் அக்கறை இல்லாத கடவுள் பக்தி இல்லாமல் வாழும் ஊழல்வாதிகளை,
அறங்காவலர்களாக நியமனம் செய்து கொள்ளையடித்து பணம் சம்பாதிக்க நினைக்கும் நபர்களை நியமிக்க ஹிந்து சமய அறநிலையத் துறை முயல்கிறது.
அறங்காவலர் நியமனச் செயல்பாட்டிலுள்ள சில குறைபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அதில் முதலாவதாக: குறைபாடுள்ள விண்ணப்பப் படிவம்: ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE சார்பில் இதுவரை விநியோகித்த விண்ணப்பப் படிவத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் விண்ணப்பப் படிவத்தை மாற்றியமைப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஏற்றுக்கொண்டது. இரண்டாவதாக:
செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை இல்லாதது: ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE க்கு பிரத்யேக இணையதளம் உள்ளது, ஆனால் அறங்காவலர்கள் நியமனம் செய்வது தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எதுவுமில்லை . ஹிந்து சமய அறநிலையத் துறை HR&CE அலுவலகங்கள் தேர்வு செயல்முறை பற்றிய விவரங்களை மற்றும் விதிமுறைகள் எதுவும் வழங்கவில்லை.
மூன்றாவதாக: அநியாயமான தகுதி நீக்க விதிமுறை கோவிலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்று விண்ணப்பதாரர் உறுதிமொழி அளிக்க வேண்டும். எனவே, கோவிலின் நலனைக் காக்க வழக்கு தொடர்ந்த ஒருவர், இந்த விதிமுறையின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். அறங்காவலர் பதவிக்கு தகுதி நீக்கம் செய்ய கோவில்கள் பற்றி அக்கறை கொண்ட அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய ஹிந்து சமய அறநிலையத் துறை HR&CE விரும்புகிறது. இது வெளிப்பார்வைக்கு அநீதியானது, எனவே இது ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் 14 வது பிரிவை மீறுகிறது.
நான்காவதாக: அறங்காவலர்களுக்கான சம்பள விவரங்கள் அறிவிக்கப்படவில்லை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் WP 574 /. 2015 சூ மோட்டோ வழக்கில் வந்த தீர்ப்பின்படி, பாரா 53 ல் அறங்காவலர்களுக்கு கோயிலின் வருமானத்திற்கு ஏற்ப நிலையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். என அறநிலையத் துறை HR & CE அதன் அறிவிப்புகளில் அறங்காவலர்களின் சம்பள விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை எனவும்.
ஐந்தாவதாக: அரசியல் நியமனம் : சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் WP 574 /2015 சூ மோட்டோ வழக்கில் தீர்ப்பின்படி, பாரா 55 மற்றும் 63 ல், அரசியல் பின்னணி உள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்கக் கூடாது. ஹிந்து சமய அறநிலையத் துறை HR &CE இதை தகுதியிழப்பு என வெளிப்படுத்த வில்லை. தங்கள் படிவங்களைச் சமர்பிக்கக் கடைசித் தேதியில் பல்வேறு ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE அலுவலகங்களுக்குச் சென்ற கட்சிக்காரர்கள் ஏராளம். கோவிலை இடிப்பதில் திமுகவினர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அறங்காவலர் பதவிகளையும் ஆளும் திமுகவினரைக் கொண்டு நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளதால்
ஹிந்து கோவில்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE யின் புறக்கணிப்பு மற்றும் ஊழலால் மறைத்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. தெய்வத்திற்கு விசுவாசமான மற்றும் அரசியல் சாராமல் அல்லது பிற சுயநலன்களுக்கு அடிபணியாத வலுவான நேர்மையான அறங்காவலர்கள் தான் நமக்குத் தேவை. அறங்காவலர் தேர்வு செயல் முறை சட்டம் சார்ந்த நிலை இருக்க வேண்டும் மற்றும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். -விளம்பரம்-
-விளம்பரம்-சரியான விண்ணப்பப் படிவத்தை மறு வெளியீடு செய்து, செயல்முறையை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றுவதன் மூலம் செயல்முறையை மீண்டும் தொடங்குவதே இப்போது செய்ய வேண்டிய சரியான விஷயம் என்று உயர்நீதிமன்றம் சார்பில் நம்புகிறோம். 100,000 க்கும் மேற்பட்ட அறங்காவலர் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதால், அறங்காவலர்களை நியமிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தின் நீதிபதி, மற்றும் முக்கிய தேவஸ்தான மடாதிபதி மற்றும் ஆதீனங்கள் மற்றும் மடங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அறங்காவலர்கள் மதம் சார்ந்து பங்களிப்பு பணி செய்கிறார்கள் மற்றும் அறங்காவலர்களை நியமிக்க அரசாங்கம் சார்ந்த அல்லது ஹிந்து சமய அறநிலையத் துறை HR & CE திறமையற்றது. -விளம்பரம்-
இந்த முக்கியமான பிரச்சினையை தயவு கூர்ந்து கவனித்து, தவறான நபர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேற்கோள் காட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆளுநர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் 225 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் பல தீர்வுகள் வந்துள்ளது.
ஆளுநருக்கு ஒரு நகலுடன் ஹிந்து சமய அறநிலையத் துறையின் HRCE கமிஷனருக்கு அனுப்புமாறு அறிவுறுத்தி கீழ் கண்ட மின்னஞ்சல் மின் அஞ்சல் முகவரிக்கு govtam@nic.in commr.hrce@tn.gov.in மாவட்டம் வாரியாக அனுப்பியுள்ளது.
கருத்துகள்