பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் லிமிடெட் நிறுவனத்தை மேன்கைண்ட் பார்மா லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த ஒப்புதல்
பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் லிமிடெட் நிறுவனத்தை மேன்கைண்ட் பார்மா லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் லிமிடெட் நிறுவனத்தை மேன்கைண்ட் பார்மா லிமிடெட் நிறுவனம் வாங்குவதற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேன்கைண்ட் பார்மா பொதுப் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். பல்வேறு கடுமையான மற்றும் நாள்பட்ட சிகிச்சை பகுதிகளில் பல்வேறு வகையான மருந்துகளுக்கான ஃபார்முலாக்கள் உருவாக்குவது, ஆணுறைகள், அவசரக் கருத்தடைகள், கர்ப்ப பரிசோதனைகள், வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டாசிட்கள், முகப்பரு எதிர்ப்பு தயாரிப்புகள் போன்ற பல நுகர்வோர் சுகாதார தயாரிப்புகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
பாரத் சீரம்ஸ் மற்றும் தடுப்பூசிகள் லிமிடெட் , அதன் துணை நிறுவனங்களுடன் சேர்ந்து, ஆராய்ச்சி, மேம்பாடு, உரிமம், உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.
கருத்துகள்