இரண்டு நாட்கள் முன் கன்னியாகுமரியில் ஆர் எஸ் எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததால் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அரசியல் ரீதியாக தெரிவிக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதியாக பொறுப்பு வழங்கப்பட்டது தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த நிலையில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது கட்சியின் கோட்பாடுகள், சட்டத்திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கியக் காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே. எடப்பாடி கே.பழனிசாமியின் இந்த அறிவிப்பால் மூத்த நிர்வாகிகள் கலக்கம். ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதைக் காட்டிலும் அவர்கள் தான் இவருடன் தேடி வந்து நெருக்கம் காட்டுவதாக உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கும் நிலையில் தளவாய்சுந்தரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் RSS நடத்தும் ஊர்வலத்தை துவங்கி வைத்தார் அதேபோல் தான் "சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்பதற்காக RSS ஊர்வலத்தை துவங்கி வைத்தேன்" என்று சொல்வதும் தவறு என கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
கட்சியில் உள்ள பலர் இதற்கு அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கியிருக்க வேண்டும், மேலும் வழக்கமாக இதுபோன்ற நீக்கம் குறித்த அறிவிப்பில் "கழக த்தொண்டர்கள் யாரும் இவரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது" என்ற குறிப்பு இருக்கும் ஆனால் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் அப்படி ஏதும் இல்லை. விசாரணை நடத்தி விளக்கம் பெற வேண்டும் என்பதால் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக விடுத்திருக்கிறார். இந்த நடைமுறை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பேசிய பழைய நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமிக்கு கடைப்பிடிக்கப்படவில்லையே.
அன்றைக்கு தொண்டர்கள் மனநிலை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக இருந்தது, அதிமுகவில் பொதுச்செயலாளர் ஜெ ஜெயலலிதா நிலைப்பாடு மற்றும் பொதுக்குழுத் தீர்மானம் பாஜக வேண்டாம் என்பது, அதை தான் அன்று அவர் வலியுறுத்தினார் அந்தக் காலகட்டத்தில் அதிமுக பாஜகவுடன் இணைந்து பயணிக்கும் என்ற எந்தவிதமான அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் இல்லை. அப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பேசினார் என்ற ஒற்றை காரணத்திற்காக அடிப்படை உறுப்பினர் உட்பட அணைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக அவரை நீக்கினார்கள்.
ஆனால் இன்று வழக்கறிஞர் தளவாய்சுந்தரம் மாற்று சித்தாந்தம் கொண்ட அமைப்பு ஊர்வலத்தை துவங்கி வைத்திருக்கிறார். அதற்கு யாரும் பாஜக அடிமை கட்சி என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் தற்காலிகமாக விடுவித்துள்ளார்கள். இது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே தெரிகிறது என பலரும் பேசும் நிலை.
கருத்துகள்