முன்னாள் அமைச்சர் மருமகள் தீப்பிடித்து கருகிச் சாவு
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கல்வித்துறை ஊழல் சம்பந்தப்பட்டவர் பாலக்கோடு கே.பி.அன்பழகன். இவர் தற்போது ஐந்தாவது முறையாக பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதிமுகவில், அமைப்பு செயலாளர், தருமபுரி மாவட்டச் செயலாளர் பதவி வகிப்பவர், காரிமங்கலம் பக்கம் அள்ளி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.
அன்பழகனுக்கு சந்திரமோகன், சசிமோகன் இரண்டு மகன்கள், இளைய மகன் சந்திரமோகனுக்கு சென்னை மனோகரன் மகள் பூர்ணிமாவுக்கும் 2019 ஆம் ஆண்டில் திருப்பதியில் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி மருமகள் பூர்ணிமா வீட்டில் விளக்கு ஏற்றிய போது, ஆடையில் தீப்பிடித்ததில், அவருக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுறது, உடனடியாக பூர்ணிமாவை பக்கத்திலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது, சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் சந்தேகத்துக்குரியதா இல்லையா என்பதை R D O விசாரணை முடிவில் தெரியும். திருமணமாகி நான்கு ஆண்டுகளாவதால் ஆர் டி ஓ விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
கருத்துகள்