சென்னையில் தங்கி பணிபுரிந்து வரும் வெளியூர்வாசிகள், தீபாவளிப் பண்டிகைக்காக அவர்கள் சொந்த ஊர்களுக்கு .
நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அங்கு இணைய வழி சேவை பாதிக்கப்பட்டது. பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். நள்ளிரவிலும் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பேருந்துகள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்த போக்கு வரத்துத் துறை பல அடிப்படை ஊழல்கள் காரணமாக மந்த நிலை இருந்தது
ஆனால் ரயில் போக்குவரத்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து காரைக்குடி வழி நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. செல்லும் சிறப்பு காரைக்குடிக்கு ரயில் மாலை 4 மணிக்கும்,
நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் மதியம் 3.45 மணிக்கும் புறப்படும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசு. தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை வசிக்கும் மக்கள் தொகை 60 சதவீதம் வெளியேறிய நிலையில் சென்னை போக்குவரத்து சுலபமாக மாறியுள்ளது.சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் இன்று அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 5.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் சென்று அடையும்.
அதாவது, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்துார், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், பரங்கிபேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிராப்பள்ளி சென்று சேரும்.
தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிராப்பள்ளிக்கு சிறப்பு ரயில்(06157) இயக்கப்படும். எழும்பூரிலிருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், வழியாக திருச்சிராப்பள்ளி க்கு சிறப்பு ரயில்(06155) இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்- கோயம்புத்தூர்
சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் போத்தனூருக்கு சிறப்பு ரயில் (06159) இயக்கப்பட உள்ளது திருச்சிராப்பள்ளி - தாம்பரம் சிறப்பு ரயில்
நாளை அக்டோபர்மாதம்.31ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்றிரவு 8.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
சாத் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது அதிகரித்து வரும் பயணிகளின் போக்குவரத்திற்கு ஏற்ப இந்திய ரயில்வே 7,296 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. கடந்த ஆண்டு இயக்கப்பட்ட 4,500 சிறப்பு ரயில்களை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். RPF பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் ரயில்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட நுழைவு உட்பட, பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் ரயில்வே செயல்படுத்தியுள்ளது.
சாத் மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது அதிகரித்து வரும் பயணிகளின் போக்குவரத்திற்கு ஏற்ப இந்திய ரயில்வே 7,296 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. கடந்த ஆண்டு இயக்கப்பட்ட 4,500 சிறப்பு ரயில்களை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். RPF பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் ரயில்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட நுழைவு உட்பட, பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் ரயில்வே செயல்படுத்தியுள்ளது.
கருத்துகள்