முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சதீஸ்கரில் போலியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை நடத்தியவர்கள் பிடிபட்டனர்

போலியான காவல்துறை அலுவலர்கள், போலியான சி.பி.ஐ., அலுவலர்கள், போலியான அமலாக்கத்துறை அலுவலர்கள் பற்றி இதுவரை பல தகவல்கள் நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில்


காவல்துறை அலுவலர் எனக் கூறி ஆன்லைனில் மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகமாக நடந்து வரும் நிலையில். சத்தீஷ்கர் மாநிலத்தில் ஒரு கும்பல் போலியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையைத் துவங்கி நடத்தியது தான் மோசடியில் உச்சம்.

சத்தீஷ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் சபோரா  கிராமத்தில் இந்த போலியான வங்கிக் கிளை திறக்கப்பட்டுச் செயல்பட்டு வந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக வங்கிக் கிளை செயல்படுவது குறித்து அருகிலுள்ள தப்ரா கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளருக்குத் தகவல் கிடைத்தது. உடன் தமக்குத் தெரியாமல் எப்படி புதிய கிளை உருவானதென்று அவருக்குச் சந்தேகம் வரவே அது தொடர்பான உயர் அலுவலர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கும் அது குறித்துத் சரியாகத் தெரியாததனால், அது குறித்து வங்கி உயர் அலுவலர்கள் நடத்திய விசாரணையில் சபோரா கிராமத்தில் செயல்படும் வங்கிக் கிளை போலியானது எனத் தெரிந்து. உடனே காவல்துறை மற்றும் எஸ்.பி.ஐ., வங்கி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிளைக்கு நேரில்  சென்ற போது ஒரு வங்கிக் கிளை எப்படி இருக்க வேண்டுமோ அதே போன்று மிகவும் பொருத்தமாக அமைத்திருந்தனர். பணம் செலுத்தும் கௌண்டர், அறிவிப்புப் பலகை என அனைத்தும் சரியாகச் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கிளை மேலாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவரிடம் விசாரித்த போது வங்கிக் கிளை எண் கூட அறிந்திருக்கவில்லை.


அங்கு பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பணி நியமன உத்தரவு கொடுத்துள்ளனர். பணி நியமன உத்தரவு கூட அசலாகவே இருந்தது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி கூட கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. (தானா சேர்ந்த கூட்டம் திரைப்படக் கதை போல) ரேகா சாஹு, மந்திர் தாஸ் மற்றும் பங்கஜ் உட்பட 4 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தனர் வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் தலா ரூ.2 லட்சம் முதல் 6 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர். வேலையில்லாதவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை ஒரே நாளில் இக்கிராமத்திற்கு வந்திருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் எஸ்.பி.ஐ., வங்கி பணம் வசூலிக்கும் மையத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தார். அவர் திடீரென வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வங்கிக்குச் சென்று வங்கியில் பணியாற்றியவர்களிடம் வங்கிக் கிளை எண் உட்பட சில தகவல்களைக் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர்கள் சரியாகப் பதில் தரவில்லை. தெரிந்தால் தானே சொல்வதற்கு, இதனால் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அது குறித்து அருகிலுள்ள தப்ரா ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்குத் தகவல் கொடுத்தார். வங்கி செயல்பட்ட அலுவலகத்தை மோசடி கும்பல், மாதம் 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். போலியான கிளையில் பணம் கட்டி வேலைக்குச் சேர்ந்திருந்த சங்கீதா என்பவர் கூறுகையில், "எனக்கு வேலை கொடுக்க 5 லட்சம் கேட்டார்கள். ஆனால் என்னிடம் அந்த அளவுக்குப் பணமில்லை என்று சொன்னேன். எனவே என்னிடம் ரூபாய்.2.5 லட்சத்தை வாங்கிக் கொண்டு மாதம் 30 முதல் 35 ஆயிரம் வரை சம்பளம் கொடுப்பதாகக் கூறி வேலைக்குச் சேர்த்தனர்'' என்றார். தங்களது வீட்டிலிருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் கட்டி அவர் போலவே 6 பேர் வேலைக்குச் சேர்ந்திருந்தனர். போலியான வங்கி தொடங்கப்பட்டு 10 நாட்களில் பிடிபட்டதால் பொதுமக்கள் வங்கியில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்யாமல் இருந்தனர். அதிக நாள்கள் போலியான கிளை செயல்பட்டிருந்தால் பெரிய அளவில் பணமோசடிகள் நடந்திருக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு...