ஹிஸ்புல்லா உளவு படை மையம் தரைமட்டமானது நள்ளிரவில் இஸ்ரேல் தாக்குதல் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இப்போது தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று தினம் இரவு நடந்த வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் உளவுப் பிரிவு தலைமையகம் தாக்கப்பட்டது. ஹிஸ்புல்லாவின் இரண்டாம் தலைவராகக் கருதப்பட்ட சஃபிதீன் என்பவர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தாக தகவல் வெளியானது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் மீது ஒரு பக்கம் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரமாக நடத்திய நிலையில், அடுத்த கட்டமாக ஹிஸ்புல்லா மீது தனது பார்வையைத் திருப்பியது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்கிய இலக்குகளைக் கண்டறிந்து குறிவைத்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. உளவுப் படை: நேற்றிரவு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள பல இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதில் குறிப்பாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உளவுத்துறைத் தலைமையகத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் புலனாய்வுப் பிரிவின் மிக மூத்த ஹிஸ்புல்லா அதிகாரியான முகமது அனிசியைக் கொன்றதாக இஸ்ரேல் கூறியது. ஏற்கனவே கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாகக் கருதப்படும் மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி ஹஷேம் சஃபிதீன் என்பவரும் இதில் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி இருப்பினும், இந்தத் தகவலை இன்னும் இஸ்ரேலும் உறுதி செய்யவில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பும் இது குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பல சர்வதேச ஊடகங்களில் இந்தத் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ளபடி வியாழன் நள்ளிரவில் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரகசிய சுரங்கத்தில் ஹிஸ்புல்லா அதிகாரிகளின் கூட்டத்தில் சஃபிதீன் கலந்து கொண்ட நிலையில், இதில் அவர் கொல்லப்பட்டார். லெபனான் நாட்டில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இது தான் மிக பெரியது என்றும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. இந்தத் தாக்குதலில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
நஸ்ரல்லா இருந்த போதே ஹிஸ்புல்லாவின் இரண்டாம் தலைவராக சஃபிதீன் பார்க்கப்பட்டார். நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்ற நிலையில், சஃபிதீன் கட்டுப்பாட்டில் மொத்தமாக ஹிஸ்புல்லா அமைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவரையும் கொன்றுள்ளது இஸ்ரேல்.
2017ஆம் ஆண்டில் அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் தான் ஹஷேம் சஃபிதீன். ஹிஸ்புல்லா அரசியல் விவகாரங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ள சஃபிதீன், ஹிஸ்புல்லா ஜிஹாத் கவுன்சிலில் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த ஜிஹாத் குழு தான் ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் ஆட்சியுடன் நேரடியாகவே உறவுகளைக் கொண்ட ஒரு தலைவரா சஃபிதீன் கருதப்படுகிறார்.
நேற்றிரவு பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இது ஹிஸ்புல்லாவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியாகும். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் சொல்லி சில மணி நேரத்தில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்ட பின்னர்
இஸ்ரேலைக் குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளைத் தகர்க்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் 80 சதவீதம் ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கைத் தாக்கி உள்ளதாகவே உலகப் போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி போரைக் கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில். இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது. அது உலகப்போரையே உருவாக்கும் நிலை தான் தற்போது தெரிகிறது.
கருத்துகள்