திமுக தலைவர் காலஞ்சென்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (வயது 82) இன்று பெங்களூரில் காலமானார்.
ஏற்கனவே காலம்சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன் பிறந்த சகோதரர்,
திமுகவினருக்காக நடத்தப்படும் கட்சி இதழ் முரசொலி நாளிதழ் அதன் ஆசிரியராக நீண்டகாலம் முரசொலி செல்வம் இருந்து வந்தார் அவரது தாய்மாமன் மு கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்து பெங்களூரில் வசித்தார் இவர்களுக்கு எழிலரசி ஜோதிமணி என்ற இரண்டு மகள்கள் உண்டு. அண்ணா திமுக ஆட்சியில் உரிமை மீறல் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டசபைக் கூண்டில் ஏறி நின்றி தமது வாதங்களை முன் வைத்தவர் முரசொலி செல்வம்.
பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் ஆதாரமான கட்டுரைகளை எழுதியவர். கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் மாநகரில் சதாசிதவம் நகரில் வசித்த முரசொலி செல்வம், இன்று முரசொலி நாளிதழுக்காக குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த போது
மாரடைப்பால் பாதிக்கப்பட்டதையடுத்து பெங்களூர் எஸ்.ஆர். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலமானார். கலைஞர் மருமகன் எனும் குடும்ப உறவின் பின்னணியையும் தாண்டி திமுகவின் அறிவார்ந்த சொத்தாகக் திகழ்ந்தவர் முரசொலி செல்வம்.
முரசொலி நாளிதழ் 80 ஆண்டுகளைக் கடந்த தனது பயணத்தில் எதிர் கொண்ட நெருக்கடிகளை, தாக்குதல்களை, கைது நடவடிக்கைகளை தொகுத்து 'முரசொலி - சில - நினைவுகள்' என எழுதினார். இதழியல் துறையில் துணிவுடன் செயல்பட ஆர்வமுள்ளவர்களுக்கு அது மிகச் சிறந்த கையேடு ஆகும். தனது 82 வயதிலும் கொள்கை உறுதிமிக்க பத்திரிகையாளராக செயல்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் இளையவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளையும் உற்றுக் கவனித்து, அவற்றை முரசொலியில் வெளியிடச் செய்து ஊக்கப்படுத்தியவர்.
50 ஆண்டுகால அரசியல் நிகழ்வுகள் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக தெளிவுபடுத்தக் கூடியவர். அவரது உடல் பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. முரசொலி செல்வத்தின் மறைவு மூத்த திமுகவினரை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
கருத்துகள்