புதிய திசையாகவும், புதிய விசையாகவும் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய் முழக்கம்.
மாற்று அரசியல் பேசி வருபவரை யெல்லாம் உள் வாங்கிச் செரித்து, அல்லது உடன் வைத்து அழித்து. அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள்.
லஞ்சம்,ஊழல், லாவண்யம், அதிகார மமதை, குடும்ப அரசியலென அனைத்தையும் நிறுவனமயப்படுத்தி வைத்திருப்பவர்களின் மீது இளம் தலைமுறையினர் கடும் கோபத்தில், அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நடிகர் விஜயின் கட்சி மாநாடு சாட்சி,
மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் திரண்டு வந்திருக்கும் இளைஞர்படை திராவிடக் கட்சிகளுக்குச் சவாலாக இருக்குமென்றே தோன்றுகிறது.
ஆனால் எம்ஜிஆர் பின்னால் வந்த அனுபவம் மிக்க இரண்டாம் கட்டத் தலைவர்களான பத்துக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவம் நிறைந்த தலைவர்கள் இவருடன் மேடைக்கு வரவில்லை, இருந்தாலும் புஸ்ஸி ஆனந்தை மறைமுகமாக ஆலோசனை மூலம் இயக்கும் வாஜ்பாய் அரசின் முன்னால் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் என்பதே பலர் அறியாத உண்மை,
த. வெ. க. மாநாட்டிற்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து திகிலேற்படுகிறது. மூன்று மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கப்போகிற நிகழ்சிக்கு காலை ஆறு மணியிலிருந்தே குடும்ப விழா போல வரத் துவங்கி விட்டார்கள் மக்கள்
மக்கள் மன்றம் அலை அது சமுத்திரம். பெருந்திரளான மக்கள் விஜய் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்க சென்றுள்ளதைக்காண முடிந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உணவு ஏற்பாடுகள் வெளியில் செய்திருந்தாலும், மிக்சர் ரொட்டி தண்ணீர் என ஒரு பையில் வழங்கிய போதும் அது யானைப் பசிக்கு சோளப் பொறி கிடைத்தது போலாகிவிட்டது. மிகப் பெரிய அளவில் மக்கள் வருகிற இடத்தில் டிபன் சாப்பிட அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் அலைவதாக தொலைகாட்சி சேனல்கள் கேமராவோடு அவர்கள் பின்பாக அலைகின்றன.
ஒரு தரமும் தகுதியும் நிறைந்த பத்திரிகையாளர்கள் என்ற நிலை காலத்தால் மறைத்து போய் கட்டிடங்கள் கட்டுமானப் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பது போல உள்ள கார்ப்பரேட் HR கள் வந்த காரணத்தால் பல தகுதி இல்லாத நபர்கள் செய்தியாளர் என சேகரிக்கும் நிலையில் இந்த மக்கள் விரும்பாத தேவை இல்லாத விபரங்கள் அநாகரீகம் என்பதை அறியாமல் கண்டதையும் தருவது தான்
மறுபுறம், சிறு,சிறு சாப்பாட்டுக் கடைகளை காவல்துறையினர் மாநாடு நடக்கும் சுற்றுவட்டாரத்தில் இருந்து விரட்டும் காட்சிகளும் பார்க்க நேர்ந்தது.
வெள்ளரிக் காய் விற்பவர்கள், பழச்சாறு விற்பவர்கள், தண்ணீர் பாக்கெட், சிறு,சிறு திண்பண்டம் விற்பவர்களை விரட்டி அடித்தனர். அப்படி இருந்தும் கூடிய கூட்டம் குறையவில்லை, அவர்கள் தான் இந்த இடத்தில் ஆபத்பாந்தவர்கள்!
மாலை நான்கு மணி வரை வெயிலை எதிர்கொள்ளவும், இரவு வரை பசியைத் தாக்குப் பிடிக்கவும் இவர்களும் அங்கு அவசியம் என்பதை காவல் துறையினர் அறியவில்லை. மெரினா கடற்கரையில் சிறு வியாபாரிகளை விமான சாகசங்கள் நிகழ்வின் போது இப்படித் தான் விரட்டி அடித்தார்கள். அதில் ஐந்து உயிர்கள் பலியாயின.
இந்த எளிய சிறு வியாபாரிகளை காவல்துறையினர் ஒழுங்குபடுத்தி இடம் ஏற்படுத்தித் தந்திருந்தால், அது அவர்களுக்கு புண்ணியமாகப் போகும். ஆனால் பாவத்தை அல்லவா சேர்த்துள்ளார்,
ரொம்ப கறார் தன்மை காட்டினால், அது தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தான் கெட்ட பெயரை உருவாக்கியது. நடிகர் விஜய் பேசும் போது காவிப் பிண்ணனியில் கருப்புப் போர் யானை கால்களைத் தூக்கும் காட்சி Back Possession. அரசியல் எதார்த்த நிலையை உணர்த்தியது. வயதான மூத்த தலைவர் செஞ்சி இராமச்சந்திரன் நன்றி கூறப் பட வேண்டியவர் மாற்று அரசியல் - எக்ஸ்ட்ரா லக்கேஜ்ஜா நான் வரலை- என மைய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் மீது ஒரு தாக்குதல் அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயசமா? என திராவிட மாடல்னு ஏமாற்றுவது - அண்டர் கிரவுண்ட் டீலிங். என திமுகவின் மீதான தாக்குதல். பின்னர் நேரம் நகர நகர மெல்ல அடுத்த ஐந்து இடங்களுக்குள் நுழைந்த தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயர் டிரெண்டிங்கில் வேகம் எடுத்து முன்னே செல்ல ஆரம்பித்தது. கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயர் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 வருட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பாதிக்கபடாத ஒரே கட்சி திமுக. பாதிக்கபடாத ஒரே குடும்பம் கலைஞர் குடும்பம்.
பினராயி விஜயன் குடும்பம் முதல் மம்தா பானர்ஜி வரை பாதிக்கப்பட்டார்கள், சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ், குமாரசாமி என இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கூட கனிமொழி மீது நடவடிக்கை . ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கனிமொழிக்கு நெஞ்சார்ந்து பிறந்த நாள் வாழ்த்து எனச் சொல்லி அசத்தினார்.
ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் இதுவரை ஊழல் நடவடிக்கைகள் மீதோ மற்றும் ஒரு சிறு கீரல் கூட விழவில்லை என்பது குறிப்பிடதக்கது..!
இத்தனைக்கும் BSNL வழக்கு முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது. ஆனால் அதைத் தொடக்கூடவில்லை கடந்த பத்து வருடமாக.
இதில் இவர்கள் எதிரிகளாம். அதை தமிழர்கள் நம்ப வேண்டுமாம். என பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பகிரங்கமாகவே விமர்சனங்கள் முன் வைக்கும் நிலையில், அதில் தற்போது நடிகர் விஜயும் சேர்ந்துள்ளார். திராவிடமும் தமிழ் தேசியமும் தவெகவின் இரு கண்கள் -
சதுப்புநிலங்கள் மீட்கப்படும் -தவெக"மக்கள் விரோத ஆட்சியைத் திராவிட மாடல் ஆட்சின்னு மக்களை ஏமாத்துறீங்க, அதனால உங்களை எதிர்க்குறவங்களுக்கு வேற கலர் பூசுற `மோடி மஸ்தான்' வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம்." -திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மைச் சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநலக் கூட்டம் தான் நமது அடுத்த எதிரி எனப் போட்டுடைத்த நிலையில் ஒரு ஒப்புக்காக நடிகர் விஜய் திராவிட அரசியல் இல்லாத தமிழ் அரசியல் நிலை எடுக்கக் காரணம்
பிஜேபியும் திமுகவும் ஒரே புள்ளியில் இணைந்து ஒரே மாதிரியான அரசியல் செய்யும் கட்சிகளாகத் தான் மக்களுக்குத் தெரிகிறது.
திமுகவிற்கும் பிஜேபி க்கும் திரைமறைவில் ஒரு வலுவான அழுத்தமான 'தொடர்புண்டு எனப் பலர் பேசும் நிலையில்
பிஜேபியைக் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்ற காரணத்திற்காக திமுகவை ஆதரிக்கும் 'ஆட்களும்', திமுகவைக் கடுமையாக எதிர்க்கிறது என்று பிஜேபிக்கு ஆதரவளிக்கும் ஆட்களும் தான்,
இந்த இரண்டு கட்சிகளும் விரித்த வலையில் வீழ்ந்த விட்டில் பூச்சிகள். பரிதாபம் தான் பட முடியும். என இது அரசியல் அறிந்தவர்களின் பார்வையில். பிரதமர் வரவேற்பு விமான நிலையத்தில்
முதன் முதலில் வெள்ளைக்குடையை இங்கு தான் நாம் பார்த்தோம். அதுவும் கடந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் களம் தவெக புதிய பரிமாணத்தை சூடிய பழைய எம்ஜிஆர் கொள்கையை தூக்கிச் சுமக்கும் விபரம் இதோ:- மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்ற தனி அடையாளங்களுக்குள் மனித சமுதாயத்தைச் சுருக்காமல் தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களின் தனி மனித, சமூக பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது த.வெ.க.,வின் குறிக்கோள் ஆகும் ஜனநாயகம் ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சா்ந்த இனம், மதம், மொழி, ஜாதி பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது. ஆட்சி அதிகாரம் சட்டம், நீதி, அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தி வெகுஜன மக்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது
சமதர்ம சமூக நீதி விகிதாச்சார இட பங்கீடு உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஜாதி முழுவதும் ஒழிக்கும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்ர வழங்குவது த.வெ.க.,வின் சமதர்ம சமூக நீதியாகும்
சமத்துவம் ஜாதி, மதம், இனம், நிறம், மொழி பொருளாதாரம், வர்க்கம், பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள், பெண்கள்.3 ஆம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மக்களுக்கு சமமானவர்களே.
மதசார்பற்ற, தனிப்பட்ட மதநம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும், மத நம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி நிர்வாகம் தான் நம்முடைய மதசார்பின்மை கொள்கை. மாநில தன்னாட்சி உரிமையே அந்தந்த மக்களின் தலையாய உரிமை. மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது என்பது த.வெ.க.,வின் தன்னாட்சிக் கொள்கை.
தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழிகா கொள்கையை த.வெ.க., பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி.தமிழே வழக்காடு மொழி. தமிழே வழிபாட்டு மொழி. தமிழ் வழிக் கொள்கைக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறை எந்த துறையிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தைக் கொண்டு வருவோம். மதம், இனம், மொழி, வர்க்க பேதம் அற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது எல்லாருக்குமான அடிப்படை உரிமை. சுற்றுச்சூழல் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.
பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை
மனித குலத்தின் உடல் மன குணநலனுக்கு கேடாக அமையும் வகையில் பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது.
பழமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல்படியாகும்.
இயற்கை வள பாதுகாப்பு சூழலியல் மற்றும் கால நிலை நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு ஊறு வகுக்காத பகுதி சார் மாநிலம் வளர்ச்சி பரவலாக்கம்.
மது போதையில்லா தமிழகம் உற்பத்தித் திறன், உடல், மற்றும் மன நலனை கெடுக்கும் சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல் அடிப்படை கொள்கைகளாகும்.
தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழி என்பது உறுதி செய்யப்படும்
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி பள்ளி ஒன்று உருவாக்கப்படும்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகல்விக்கான தரம் உயர்த்தப்படும். தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு என தனியாக பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
பணியாளர்களின உடைகள் நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை.
மற்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வளக் கொள்ளையை தடுக்க சிறப்புச் சட்டம்
மண்டல வாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயலிழந்து உள்ளது அந்த அமைப்பு சீரமைக்கப்படும்.
வன விலங்குகள், பறவைகள் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும்.
போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும். அகங்காரம் இல்லாமல் அலங்காரம் இல்லாமல் மென்மையாக உடனடியாகச் சொல்ல விரும்பிய கருத்தை எடுத்துரைத்த நடிகர் விஜய்: முக்கியமான
.அரசியலின் தங்கள் கொள்கைகள் என்ன கோட்பாடுகள் என்ன மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன என முத்தாய்ப்பாக முழுவதுமாக சிறப்பாக எடுத்துரைத்த த வெ க தலைவர் நடிகர் விஜய்.
எதிர்பார்த்ததை விட நல்ல சிறப்பான பேச்சு.
நடிகர் விஜய்க்கு இத்தனை அழகாக கருத்தியல்களைப் பேச வருமா? என அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் வியப்பு. இயல்பான மேடைப்பேச்சு.
இளம் வயதிற்கு உட்பட்டோருக்கு இது உணர்ச்சிப் பிழம்பாக்கும் ஆகச்சிறந்த பேச்சாகவே இருக்கும். இந்தப் பேச்சு மற்றும் உடல்மொழி மொத்தமும்.
திராவிட மாடல் என சொல்லிக் கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி. முகமுடி போட்ட லஞ்ச இலாவண்ய ஊழல் கபடிதாரிகள் தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
முன்னாதாக பிளவு வாதிகளும், ஊழல்வாதிகளும் தான் எங்கள் எதிரி எனப் பேசிய நடிகர் விஜய், நேரடியாகவே, திமுகவைச் சாடினார்.
பாஜகவும், திமுகவும் தான் எங்கள் அரசியல் எதிரிகள்-விஜய் இது பழைய. முன்னாள் முதல்வர்கள் எம் ஜிஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஃபார்முலா
திராவிடம், தமிழ்தேசியம் என குறுக விரும்பவில்லை -.
கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திராவிடமாடல் திமுகவையும் நேரடியாக குறிப்பிட்டது துணிவு. இது விஜய்
"அவர்களை பாசிசம் என்று சொல்லும் நீங்கள் என்ன பாயாசமா?" என்று கேட்டது ஹைலைட்.
கூத்தாடி என்ற விமர்சனத்திற்கு கொடுத்த பதில் நெத்தியடி. என்னை கூத்தாடி விஜய், கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள்.
நம்ம ஊர் வாத்தியார் எம்ஜிஆரையும், ஆந்திரா ஊரு வாத்தியார் என்.டி.ஆரும் கட்சி தொடங்கிய போது அவரையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள்.
இரண்டு அகில இந்திய புகழ்பெற்ற கட்சிகள் உடைப்பு கட்சிகளையும் எரிச்சல் கொள்ள வைத்திருக்கும்.
"கூட்டணி ஆட்சி, அதிகாரப்பகிர்வுக்குதயார்" என்று வெளிப்படையாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க ஆரோக்கியமான அரசியல்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அரசியல் களம் நிறைய கன்டன்ட்டுகளுடன் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.அதிமுகவை நாதகவை தேர்தல் களத்திலிருந்து அகற்றவே நடிகர் விஜய் பாஜக வாலும் த்ராவிடத்தாலும் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.
தவெக யாருடைய வாக்குகளைப் பிரிப்பார்? மதவாத சக்திகளுக்கு எதிரான, ஊழல்வாத திராவிட மாதிரியின் எதிர்ப்பு வாக்குகளை.
அதனால் யாருக்கு இழப்பு?
கூட்டிக் கழித்துப் பாருங்கள். கணக்கு மிகச் சிறப்பானது.
கருத்துகள்