கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் (வயது 65) சாலை விபத்தில் மரணம்
உடன் காரில் பயணித்த மணிமாறன் மகன் ரமேஷ் படுகாயம். திருநெல்வேலியிலிருந்து மதுரை நோக்கி பயணம் செய்த நிலையில். நாலாட்டின் புத்தூர் என்ற இடத்தில் விபத்து நடந்திருக்கிறது.
தினபூமி ஆசிரியர் திருநாவுக்கரசின் இறந்த நிலையில் இறுதி அஞ்சலி செலுத்த, கன்னியாகுமரி சென்று அவரது உடலுக்கு மரியாதை செய்து திரும்பும் வழியில் தினபூமி உரிமையாளர் மணிமாறன் விபத்தில் இறந்துள்ளார்.
ஊடகக் கனவுகளோடு சென்னை வரும் அத்தனை பேரின் கனவுகளையும் நனவாக்கிய மாற்றுக் கருத்தில்லா ஊடகத் தாய்வீடடாக விளங்குகிய தினபூமி நாளிதழ் என்றால் அது பொருத்தமானது.
வேலை இல்லை, ஆள்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லாமல், தெரிந்தே கதவுகளை திறக்காமல்- நுழைவு வழிப்பாதையை அடைத்துக் கொள்ளாமல்; ஒரே 'பீட்' டுக்கு ஐந்து பேரைக் கூட நியமித்து பலரின் பசிக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்த வித்தகர்,
வெறுப்புணர்வு இல்லாத பொதுப்பார்வையில் சொல்வதெனில் தினபூமி நிறுவனம் தான் ஒரு கைகாட்டி கலங்கரை விளக்கு. நான் அங்கு வேலை பார்த்தது இல்லை என்றாலும் இன்று உச்சத்திலிருக்கும் பலருக்கும் அச்சு ஊடகம் என்றால் தினபூமியும் காட்சி ஊடகம் என்றால் இன்று மோசடி வழக்கில் சிறையில் உள்ள தேவநாதன் யாதவ் நடத்திய வின் டி.வி.யும் தான் மூடாத கதவுகளை கொண்டிருந்த நிறுவனங்கள். இவ்விரண்டுமே சென்னையில் அமைந்திருந்ததால் தலைநகர் நோக்கி வந்த விஸூவல் கம்யூனிகேசன் பட்டதாரிகளின் விசுவலை பரந்துபட வைத்தது.
மிகப்பெரிய அளவில் தீபாவளி மலர் பொங்கல் மலர் என ஒவ்வொரு மலரும் ஐந்து வால்யூம் எண்ணிக்கையில் கனக்கும் வாசகர்களின் கைகளில் தினபூமி கொண்டு போய் சேர்த்த ஒரு காலமும் உண்டு. ஆனால் அவரது மரணம் தற்போது ஆசிரியர் மரணம் ஆகிய நிலையில் துக்கம் விசாரிக்க சென்ற வெளியீட்டாளர் பலி என்பது ஏற்க இயலாத நிலை. லாட்டரி மூலம் சிலர் பணம் குவிக்க பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்க காரணம் லாட்டரி ஏஜன்சிகள் அதில் கே. ஏ எஸ் சேகரும் ஒருவர் தான்
கருத்துகள்