தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் மக்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டுமென தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தல்.
மேலும் புகார் மனு கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும். கோரிக்கை ஏற்பது சாத்தியமில்லை எனக் கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவருக்கு ஒரு மாதத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வும் காணப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு. தலைமை செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில் அரசு அலுவலகங்களில் மக்களிடம் இருந்து பெறப்படும் குறைதீர் புகார் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.
மக்களிடமிருந்து புகார் கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் நிவர்த்தி செய்ய வேண்டும்.புகார் மனுக்களின் மீதான முன்னேற்றம் குறித்து அவசியம். அவர்களுக்குத் தெரிவிப்பது நல்லது.
மேலும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டால் அதுகுறித்து புகார் கொடுத்த மக்களிடம் விளக்கம் தர வேண்டும். எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கக் கோரிக்கை சாத்தியமில்லை என கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்கப்படலாம்.
அரசுத் துறைகளில் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் இதை கவனமாகப் பின்பற்றி மாதந்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும். என தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ உத்தரவிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்ன வென்றால் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் இருந்து இவர் அலுவலகத்திற்கு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு அனுப்பி வைத்தது குறித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தலைமைச் செயலாளர் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது குறித்து யாரிடம் முறையிடுவது என அந்த மக்கள் மத்தியில் எழுவினா விடைதான் தெரியவில்லை.
கருத்துகள்