இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் பத்தாயிரம் அபராதம்
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்ட சரவணக்குமார் என்ற அப்துல்லாவிற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
மதுரையில் வசித்தவர் மீது 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவுக் காவல் துறைக்கு மாற்றப்பட்டதன் தொடர்ச்சியாக
இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளவழகன், சரவண குமார் என்ற அப்துல்லாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
அதையடுத்து தேசிய புலனாய்வு சிறப்புப் பிரிவுக் காவல்துறையினர் சரவணக்குமார் என்ற அப்துல்லாவை பலத்த காவல் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கூட்டிச் சென்றனர்.
கருத்துகள்