சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், ரூபாய்.8.38 கோடி பறிமுதல்
ஓபிஜி குழுமத்தில் ED நடத்திய சோதனையில் ரூ.8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டன
நவம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அதிரடி சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. இதில் ஓபிஜி குழும அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர்களின் வீட்டிலிருந்து ரூபாய்.8.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகளை மீறியது தொடர்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒபிஜி மற்றும் பி விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சோலார் தகடுகள், காற்றாலை மின் உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களை தயாரித்து வெளி மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அங்கு
ED, Chennai Zonal Office has conducted search operations on 11/11/2024 and 12/11/2024 against the OPG Group, Chennai, for violations of the Foreign Exchange Management Act (FEMA), 1999, and Foreign Direct Investment (FDI) regulations. ED has seized approximately Rs. 8.38 Crore in Indian currency from both the office premises of M/s OPG Group and the residential premises of its Directors. எனத் தெரிவித்துள்ள நிலையில், இந்த நிறுவனங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாக இந்த நிறுவனத்தின் மீது பலவிதமான புகார் எழுந்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அவுவலர்கள் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சோழர் நடத்தினர். சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு,
ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீடு, தேனாம்பேட்டை கே.பி. தாஸ் சாலையிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு, சைதாப்பேட்டை சின்னமலை எல்டிஜி சாலையில் உள்ள தனியார் நிறுவனம், செங்கல்பட்டில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள காயலார்மேடு பகுதியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். சென்னை உட்பட தமிழகத்தில் அந்த தனியார் விண்ட் எனர்ஜி நிறுவனம் செயல்படும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் பற்றிய தகவலை அமலாக்கத்துறை சார்பில் இன்று வெளியிட்டது. ஓ.பி.ஜி குழுமத்தின் அலுவலக வளாகங்கள் மற்றும் அதன் இயக்குநர்களின் குடியிருப்பு வளாகங்கள் இரண்டிலிருந்தும் சுமார் 8.38 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்