வேதாரண்யத்தில் பழமையான பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பழமையான பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
வேதாரண்யத்தில்கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகியான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வேதாரண்யத்தில் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகியான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘வேதாரண்யத்தில் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அந்த நிலம் தேவைப்படும் நிலையில், அந்த நிலத்தை பேருந்து நிலையம் அமைப்பதற்கு நில எடுப்புச் சட்டத்தின் படி கையகப்படுத்தியிருப்பது தவறானது. எனவே, எங்களது பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கத் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பான உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு அக்டோபர் மாதம்.26 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், மரியா க்ளேட் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்தனர். கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் என்பது சர்தார் வேதரத்தினம் பிள்ளை (25 பிப்ரவரி 1897 – 24 ஆகஸ்டு 1961) இந்திய விடுதலை இயக்க வீரரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தியாகியும், வள்ளலுமாவார். 14 ஆண்டுகள் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டானிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசின் உத்தரவை மீறி, மூதறிஞர் இராஜாஜி தலைமையில் 30 ஏப்ரல் 1930 ஆம் தேதியன்று நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை பெருமளவில் உதவியதால் ஆறு மாத காலம் சிறை தண்டனைக்கு ஆளானார்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் சர்தார் வேதரத்தினம் பிள்ளை ஆற்றிய அளப்பரிய பங்கினைப் பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் (தலைவர்) எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.
1946- ஆம் ஆண்டில் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்யா குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை துவங்கி ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கிப் பராமரித்து வருகிறது. மகாத்மா காந்தி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் தியாகி வேதரத்னம் பிள்ளை. இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த பிப்ரவரி 25, 1998 ஆம் நாள் அன்று இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலையும் மற்றும் அஞ்சல் உறையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியது. இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில், நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஏ.என். சிவராமன், ஜி.இராமசந்திரன், துரைச்சாமி, கல்கி சதாசிவம், கோயம்புத்தூர் இராஜூ, ஜி.கே. சுந்தரம், ஓ.வி. அழகேசன், முன்னாள் குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன், மட்டப்பாறை வெங்கட்ட ராமையா முதலிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சர்தார் வேதரத்தினம் பிள்ளை போராட்டக் குழுவினர்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவினார். இந்தப் போராட்டத்தின் விளைவாக சர்தார் வேதரத்தினம் பிள்ளை, மூதறிஞர் இராஜாஜி உள்ளிட்ட பலர் கைதாகி ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அனுபவித்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் கஸ்தூரிபா காந்தியின் நினைவாக சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களால் துவங்கப்பட்ட கன்யா குருகுலம், நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 3000 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடைக்கலம் தந்து தொண்டு செய்கிறது. கே.ஜி.கே.ஜி.யில் தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அன்னபூர்ணாலயத்தின் சேவைகள் நாடறியும். KGKG 1946 ஆம் ஆண்டு பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் அவர்களால் நிறுவப்பட்டது, அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 3000 க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதில் முன்னணியில் உள்ளது. இலவச உணவு மற்றும் தங்குமிடத்தை விரிவுபடுத்துவதைத் தவிர, இது கைதிகளுக்கு முறையான மற்றும் தொழில் பயிற்சியும் அளிக்கிறது மற்றும் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியவுடன் அவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களை வழங்குகிறது. கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் பின்வரும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் : 09442438344, 96655564000, 6363356884. தொலைநகல்: 04369252527. இணையதளம்: gurukulam.org ஆகும்.
புதிய பேருந்து நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கையகப்படுத்திய பிறகு, நிலம் அரசிடம் உள்ளதா என்பதை உற்றுநோக்க வேண்டும்; அதன்பிறகு யாரேனும் உடைமைகளை வைத்திருப்பது இருந்து அது அத்துமீறல் ஆகும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால், சம்பந்தப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவது பிரிவின் அடிப்படையில் காலாவதியானது என ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 ன் படி நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையின் 24(2).ன்படி வேதாரண்யம் புதிய பேருந்து நிலையத்திற்காக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நியாயமாக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 4(1) அறிவிப்பு.வெளியிடப்பட்டிருந்தால் அது சட்டபூர்வமாகவே செல்லும் இருந்த போதிலும் தற்போது இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பதே இதன் பொது நீதியாகும்.
கருத்துகள்