புதுக்கோட்டை நகரில் 16.11.2024 இன்று காமராஜபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியின்
தலைமை ஆசிரியை சி.விஜயலெட்சுமி தலைமையில் மாணவர்களுக்கு சூழல் அறிதல் பயணம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்வில் அழிவு நிலையில் உள்ள அரிய வகை மரங்கள் குறித்து மாணவர்கள் கண்டறிதல் என்ற நோக்கத்தில் மாணவ மாணவிகள் புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியிலுள்ள மரம் அறக்கட்டளை நாற்றுப்பண்ணைக்கு நேரில் அழைத்துச்சென்று பார்வையிடச்செய்து அறியவகை மரங்களின் பெயர்கள், மற்றும் அவற்றின் மருத்துவக் குணங்கள், அதன் தாவரவியல் அறிவியல் பெயர்கள் அவற்றின் பயன்பாடுகளைப் பற்றி அறியச் செய்தார்கள். பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் விளக்கமாக பல்வேறு கேள்விகளைக். மரம் அறக்கட்டளை நிறுவனர் பசுமை நாயகர் மரம் இராஜாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். பின்னர் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் குழுவாகப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். மரங்களை வளர்த்தெடுப்போம். பாதுகாப்போம். மற்றவர்களுக்கும். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புதுக்கோட்டையை பசுமைக்கோட்டையாக்கும் முயற்சியில் எங்களையும் ஈடுபடுத்திக்கொள்வோம்மரம் வளர்ப்பதை மாணவர்கள் இயக்கமாக்குவோம். என்று உறுதி ஏற்று சூளுரைத்தனர்.
கருத்துகள்