முன்னாள் முதல்வர், தற்போது எதிர் கட்சித் தலைவர்
எடப்பாடி (சிலுவம்பாளையம்) கே.பழனிச்சாமி இவர் சாட்சியா? இல்லை குற்றவாளியா? என்பது நீதிமன்றத்தில் விவாதமாகியுள்ளது. எனக்கு மானம் போச்சு மரியாதை மிக மான நஷ்டமாகி விட்டது எனக் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி நீதிமன்றத்திலும் பொதுவெளியிலும் பேசிய தனபால் என்பவர் இழப்பீடு வழங்க வேண்டும் என
முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் ஓட்டுனர் கனகராஜின் சகோதர்ர் தனபால் மீது கோடிகள் கேட்டு வழக்குப் போட்டாரே ? அதில் இடைக்க்லத்தில் அவருக்கு ஆதரவாகத் தீர்வு உத்தரவு பெற்றுள்ள நிலையில் இவருக்குத் தொடர்பே இல்லை என்றால் இவரை நீதிமன்றம் கூண்டில் ஏற்றப்போகும் நிலையில் கேள்விகளைத் தொடுப்பது ஏன்? என்பதே இப்போதைய எழு வினா? ஆக விரைவில் க்ளைமேக்ஸ் வருகிறது என்பது நாம் ஆறிவது மட்டுமல்ல நாடே அறியும் நிலை உருவாகியுள்ளது,
வேஷம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா...!
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா....!
தாய் (ஜெயலலிதா) கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா"...!? என்ற பாடல் ஆஹா. இந்த இப்போது உள்ள நிலையை உணர்த்தும்.
தற்போது வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ள விசாரணை நீதிமன்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம், விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது. காலஞ்சென்ற முன்னாள் முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.23 ஆம் தேதி அன்று ஓம்பகதூர் என்ற கூர்க்கா காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அது தொடர்பாக ஷோலூர் மட்டம் காவல் துறை கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சயான், மனோஜ், தீபு உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி, வி.கே.சசிகலா நடராஜன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்தது. எடப்பாடி கே.பழனிசாமி, வி.கே.சசிகலா நடராஜன் ஆகியோரை விசாரிக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தீபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார், யாருக்குத் தொடர்பிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பதவி வகித்ததால் சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்பும் படி கோர முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது எடப்பாடி கே.பழனிசாமி முன்னாள் முதல்வர் என்பதால் அவரையும், வி.கே.சசிகலா நடராஜனையும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், இந்த வழக்கில் மேல்விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதி, ‘கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி கே.பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது?’ என கேள்வி எழுப்பி, இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தார்.
ஒரு காலத்தில் –சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாத அரசியல் தழைத்தோங்கி இருந்தது. ‘பொது வாழ்வும், அரசியலும் தொண்டாகப் பார்க்கப்பட்ட பொற்காலம்’ ஒன்று நிஜமாகவே இருந்தது என்பதை ஆச்சரியத்தோடு நினைத்துப் பார்க்கும் நிலையில் தான் நாம் இன்று உள்ளோம். இன்றைக்கும் அரசியலில் லட்சியவாத மனிதர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக அரிதாகக் காணப்பட்டாலும், பிழைப்புவாத அரசியலே தற்காலத்தில் தழைத்தோங்கி உள்ளது.
கட்சி விசுவாசத்திற்காக தர்ம நியாயங்களை காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு தொண்டர்களை மயக்கி வைத்துள்ளார்கள், நம் அரசியல் கட்சித் தலைவர்கள்!
எதிர் கருத்தாளர்களை எதிரிகளாக கருதி, வன்மத்தை வெளிப்படுத்துவதே ஒருவர் கட்சிக்கு செய்யும் தொண்டாகிவிட்டது.
ஆன்மீகம் என்பது எப்படிச் சிலருக்கு பிழைப்பாக உள்ளதோ, அதே போல ‘கட்சி’ என்பதும் தற்போது பலருக்கு ஒரு பிழைப்பாகிவிட்டது.
மதத் தலைமை பீடத்தில் உள்ள குரு எப்படி கேள்விக்கு அப்பாற்பட்ட அதிகார மையமமோ, பக்தர்களால் அவரிடம் ”ஏன்?” ”எதற்கு?” என கேள்வி எழுப்ப முடியாதோ.., அதே போல அரசியல் கட்சித் தலைவரும் என்ன செய்தாலும், அந்தக் கட்சியில் உள்ள தொண்டர்களால் கேள்வி கேட்க முடியாது.
”ஏன்? எதற்கு?” என்ற கேள்விகளையோ, ‘இது ஏற்க முடியாதது’, ‘இதில் நியாயமில்லை’, ‘இது தவறு’, என்ற விமர்சனங்களையோ தலைமையைப் பார்த்து ஆன்மீகத்தில் இருப்பவனும் செய்ய முடியாது. கட்சியில் இருப்பவனும் செய்ய முடியாது.
பேசிய கொள்கைக்கும், நடைமுறை செயல்பாட்டுக்கும் தொடர்பே இல்லாமல் போனாலும், ஏன் கொள்கைக்கு எதிராகவே செயல்பட்டாலும், தன் கட்சித் தலைமையை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவனே கட்சியில் தொடர்ந்து இருக்க தகுதியானவனாகிறான்.
‘கொள்கைகள் என்பவை கடைபிடிக்க வேண்டியவை அல்ல, கவர்ச்சியான கோஷத்திற்கானவை. அவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லாதவை! எப்போதும் நடைபிணமாகவே வைத்திருக்க வேண்டியவை’ என்பது இன்றைய பிழைப்புவாத அரசியலின் எழுதப்படாத விதியாகி உள்ளது.
உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டே, அவற்றை கொடுப்பது போல உற்சாகப்படுத்த முடிந்தால் நீ தலைவன்!
தோல்விகளையும், துன்பங்களையும் பெற்றுத் தந்து, வெற்றிக்கு வித்திட்டதாக மக்களை நம்ப வைக்க முடிந்தால் நீ தலைவன்.
அதிகாரத்தில் உட்கார்ந்துவிட்டால் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கவே வேண்டியதில்லை.
தேர்தல் நேரத்தில் காதில் தேன் ஊற்றினால் போதும் சிலருக்கு! முடிவில் தங்களுக்குத் தாங்களே பால் ஊற்றிக்கொள்ளும் மக்கள் அதிகம் வந்த நிலையில்
கரன்ஸியை காட்டினால் போதும் மற்ற சிலருக்கு!
எதிர்கட்சி குறித்த அச்சத்தையும், அவ நம்பிக்கையையும் விதைத்தால் போதும் வேறு சிலருக்கு.
இது தான் சிம்பிளான அரசியல் சூத்திரம்!
அவனவன் பசிக்கு அவனவன் உழைக்கத் தானே போகிறான்! அவனவன் முன்னேற்றத்திற்கு முட்டி மோதி சக்தியுள்ளவன் பிழைத்துக் கொள்வான், சக்தியில்லாதவன் விதியை பழிபோட்டு ஆறுதல் அடைவான். தங்கிவிட்டவனோ கட்சிக் கொள்கைகளை பேசி புளகாங்கிதப்பட்டு கிடைக்கும் ரொட்டித் துண்டுகளை கவ்வி அமைதியாகிவிடுவான்.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற வகையில் கும்பல் கலாச்சாரம், அடையாள அரசியல், கோஷ்டி செயல்பாடுகள், அதிகார ஆசை போன்றவை அவன் ரத்தத்திலும், சித்தத்திலும் கலந்து போய்விட்டன. இதைத் தான் அரசியல் கட்சிகள் அறுவடை செய்கின்றன.
அரசியல் கட்சி என்ற அபீனை கொள்கை பேசியோ, லட்சிய நோக்கங்களை விதைத்தோ, அதிகார மயக்கத்தை ஏற்படுத்தியோ, ஆதாயங்களை தந்தோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கூட்டத்திற்கு கடத்திவிட்டால் நீங்கள் தான் கடவுள்!
இரக்கமுள்ளவனை போல பாவனை காட்டி இரக்கமில்லாமல் வாழும் கலை தெரிந்தவர்களே அரசியல்வாதிகள்!
மந்தை சமூகம், விந்தை மனிதர்கள்! இரக்கமில்லா அரசியல்வாதிகள்!
ஜனநாயகம் என்பது காகிதத்தில் இருந்தால் போதுமானது. மக்களாட்சி என்பது அவனை மனதளவில் நம்ப வைத்துவிட்டால் போதுமானது. அதை உண்மையாகவே நடைமுறையில் காட்ட வேண்டியதில்லை. இது தான் இன்றைய சமூக, அரசியல் யதார்த்தமாகும். மூத்த பத்திரிகையாளர் கருத்துப்படி அரசியல் போதையானது!
வாழ்க ஜனநாயகம்!, வாழ்க மக்களாட்சி!
கருத்துகள்