தமிழ்நாடு முன்னாள் உள்ளாட்சித் தேர்தல் ஆணையரும், தமிழ்நாடு முன்னாள் உள்துறைச் செயலாளரும், இராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான,
இராமநாதபுரம் மாவட்டம் ஆம்பக்குடி கே.மலைச்சாமி. ஐ.ஏ.எஸ். இயற்கை எய்தினார் இன்று மதியம் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கவிருக்கிறதுகருப்பையா தேவர் மலைச்சாமி (ஓய்வு) இ ஆ ப அலுவலர் தமிழகத்தின் உள்துறைச் செயலாளர், மாநிலத்தின் தேர்தல் ஆணையர் பொறுப்புகளை வகித்தவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அதிமுகவில் இணைந்தார். 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் வேட்பாளர் பவானி ராஜேந்திரனை விட சுமார் ஆறாயிரத்து அறுநூறு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு உறுப்பினராவார் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளரான செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். மறைந்த முன்னாள் சபாநாயகர் திருநெல்வேலி செல்லப் பாண்டியனின் மருமகன் ஆவார். வாழ்க்கை வரலாறு பகுதியில் மலைச்சாமி ஐ.ஏ.எஸ். (ஓய்வு) எழுதிய வரிகள்..
"மனம் விட்டு ஒன்றை நான் சொல்கிறேன். நான் என் வாழ்க்கையில் இந்த வினாடிவரை நேர்மையாக இருப்பதற்கு என் மனைவியின் இயல்பு ஒரு காரணம். பேராசை இன்மையே அந்த இயல்பு.
பல உயர் அதிகாரிகள் நேர்மைப் பாதையில் இருந்து விலகிப் போவதற்கு அவர்களின் மனைவிமார்கள் தான் காரணம் என்பதற்கு நான் நன்கறிவேன், அவர்களின் பேராசை, பிறரோடு ஒப்பிடுதல் போன்றவை எந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களை வழி தவறிப் போக வைக்கிறது, நெறி பிறழ வைக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
நான் கொடுத்து வைத்தவன். நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதில் என்னைப்போலவே என் மனைவியும் தெளிவாக இருந்தாள்; இருக்கிறாள்."
-கே.மலைச்சாமி. என தனது தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் எழுதிய சுயசரிதையில் ‘நதி போல ஓடிக் கொண்டிரு...’ என்ற பாடல் வரி எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சென்னைக்கு வந்து என்னென்னவோ ஆசைப்பட்டு... ஆசைப்பட்டது கிடைக்காத போது மனம் உடைந்து போகாமல், கிடைத்ததன் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு, ஆட்சிப் பணியில் ஈடுபட்டு, பாரம்பரியம் மிக்கதொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை வாழ்க்கைத் துணைவியாக அடைந்து, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உறுப்பினராகப் பணியாற்றி - நதி போலத்தான் நான் ஓடியிருக்கிறேன். என் வாழ்க்கை அனுபவங்கள் ஒரு புத்தகமாக வாருங்கள் வாசிக்கலாம்," என முன்னுரை எழுதினார் இன்று முடிவுரை எழுதாமல் விடைபெற்றார்.
கருத்துகள்