தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பணியிடை நீக்கம். பேராசிரியர், உதவிப் பேராசிரியர் என 40 பணியிடங்களை நியமிக்க பணம் லஞ்சமாக வாங்கியதாக பதிவான புகார்.
துணை வேந்தர் திருவள்ளுவனின் பதவிக் காலம் 2024 டிசம்பர் 12 ஆம் தேதி தான் நிறைவடைகிறது இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் நடவடிக்கை.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களுக்கு உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் இருந்து துணை வேந்தரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
முறையான பதிலைத் தராமல் காலம் கடத்திய துணை வேந்தர் திருவள்ளுவனின் பணி ஓய்வு பெறும் காலம் நிறைவடைய உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புகார் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்