இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு கொண்டு சென்ற யானை முத்துராஜாவுக்கு அதன் இரண்டு தந்தங்களை வெட்டுமாறு மருத்துவர்கள் ஆலோசனை
இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு கொண்டு சென்ற யானை முத்துராஜா அதன் இரண்டு தந்தங்களை
வெட்டுமாறு லாம்பாங் மாகாணத்திலுள்ள தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தாய்லாந்து ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.வெளிநாடு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா எனும் யானையின் வெட்டப்படவுள்ள இரண்டு தந்தங்களின் எடையும் அதிகமாக இருந்ததால் முத்துராஜா கழுத்தை கீழே இறக்கியபடி நடந்து செல்வதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். நிலம் தொடும் வரை தந்தங்கள் வளர்ந்திருப்பதால், முத்துராஜா தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது, எனவே நீளத்தைக் குறைக்க முத்துராஜா நிற்கும் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் தெரிகிறது.
காயமடைந்த முத்துராஜா சிகிச்சைக்காக 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது இறந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொலவடை வர யானைகளின் தந்தம் தான் அதற்குக் காரணம். விலங்ககளில் மிகப்பெரிய உயிரினம் யானை. பார்க்க மட்டும் பிரம்மாண்டமானவை இல்லை. அவை செய்யும் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மாண்டமானவை.யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவை. அதேநேரம் மனிதனை போல் தன் மீது சுயபற்று உள்ள விலங்கு. தன் உடலின்மீது அதீத அக்கறை கொண்ட யானை தனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும். உடலில் சின்ன காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்க்கும். யானையை பாகன்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென்றால், அதைவிட பலசாலி போல் பாகனங்கள் காட்டிக்கொள்ள வேண்டும். மிகவும் முரட்டுத்தமானவனாக காட்டிக்கொண்டால் தான் பாகன்களிடம் அடங்கிப் போகும். மனிதர்களால் அதிகம் கொல்லப்படும் விலங்குகளில் யானை தான் முக்கியமான இடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுவதாக ஒரு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான வர்த்தகம் சுமார் 19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் தான் ஏராளமான யானைகள் இருக்கின்றன. அங்கு தான் யானைகள் கொல்லப்படுவதும் அதிக அளவு நடைபெறுகிறது. யானைகளின் தந்தங்கள், தோல்களும் அங்கு வேட்டையாடப்படுகின்றன. இந்தியாவிலும் அவ்வப்போது யானைகள் வேட்டையாடப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.அதே நேரம் உலகச் சந்தையில் யானைத் தந்தத்துக்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு இருக்கிறது. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்கு தந்தங்கள் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மௌஸ் உள்ளது. இதற்காகவும், பாரம்பர்ய மருத்துவப் பொருள்களுக்காகவும் யானைகள் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வேட்டையாடப்படுகின்றன.
கருத்துகள்