மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டுத் திருமணத்தை சமூக ஊடகங்களில் ஏகடியம் மற்றும் ஏகத்துவம் பேசும் நபர்களுக்கு.
ஒரு உண்மை புரியவில்லை பொதுவாக வெளியில் தமிழ் பேசினாலும் வீட்டில் தாய்மொழி தெலுங்கு பேசும் நாயக்கர்கள் அதன் உட்பிரிவு கம்மவர்கள் ஹிந்து மதத்தில் ஸ்ரீ வைணவ சாம்பிரதாயத்தைப் பின்பற்றுவர்கள்.அதனால பிராமணர்களான அய்யங்கார், வைணவப் பட்டாச்சாரியார்களை வைத்துத் தான் குல வழக்கப்படி
நேரம், காலம், நல்ல சுப முகூர்த்தம் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள். அது தான் அவர்கள் சார்ந்துள்ள சமூக மரபு. திருமணப் பத்திரிகை கூட மிக சாதாரண அழைப்பிதழ் அதுவும் மஞ்சள் நிறத்தில் அழைப்பிதழ் அடித்து, ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய வாரணமாயிரம் பாடலான மத்தளம் கொட்ட என்று தொடங்கும் வாரணமாயிரம் பாடலை பத்திரிகை துடக்கத்தில்
சைவ மதம் பின்பற்றும் நபர்கள் துவங்கும் போது உ சிவமயம் போடுவது போலவே இருக்கும். இது தான் நாயக்கர்களில் கம்மவார் சமூகத்தின் பாரம்பரியத் திருமண முறை. இதில் வைணவப் பிராமணப் பெரியவர்கள் நடத்தினால், சில முற்போக்கு வாதிகள் எனக் கூறி வாழும் பிற்போக்கு வாதிகள் கிண்டலும் கேலியும் பேசுவது ஏற்கத்தக்கதல்ல. வைகோ சுமார் 50 ஆண்டு கால சமூக அரசியல் தொடர்பு உடையவர்கள். அவரோடு பல காலம் சேர்ந்து பயணித்த திமுக மற்றும் மதிமுக வினர் உண்டு. இருந்தாலும் சமூகம் சார்ந்த மரபுகளைக் கேலியும் கிண்டலும் செய்வது ஏற்றுகொள்ள முடியவில்லை. எதுவும் மரபுகள் சாராமல் வாழும் சிலர் இது குறித்து கேலி செய்து வருவது ஏற்புடையதல்ல, ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கு என தனி குடும்பப் பொறுப்பு உண்டு என்பதை கிண்டல் செய்யும் நபர்கள் அறிய வேண்டிய ஒன்று. சாமி இல்லை. கடவுள் இல்லை என்பது அவர்களின் சுய விருப்பம். ஆனால் அடுத்த நபர்கள் சார்ந்த மரபு, மதம், பண்பாடு, கலாச்சாரம் என்பது அவரவர் தனி உரிமை. அதைக் கேலியும், கிண்டலும் செய்வது ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாகரிக உலகில் காட்டுமிராண்டிகளைப் போல நடந்து கொண்டு தனி மனித உரிமை விஷயத்தில் தலையிடும் நபர்களின் விமர்சனங்கள் முற்றிலும் புறம்தள்ள வேண்டிய ஒன்றாகும். தமிழகத்தில் தற்போது மக்களின் மனங்களில் நஞ்சு கலக்கும் முயற்சியை முளையிலே கிள்ளி எறியவேண்டும். இல்லையேல் மரபு மற்றும் தேச நலனுக்கு எதிராக கொண்டு போய்விட்டு விடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படுத்துவார்கள் என்று ஐயம் அடைகிறேன். நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள். என்பதே பொது நீதி அடுத்த நபர்கள் உள் விவகாரங்களில் தலையிட்டு சில ஊடகங்களும் மற்றும் சமூக ஊடகங்களும் விஷமம் கக்குவது. நல்லதல்ல.
என்பதோடு மற்றும் நடிகர் முன்னாள் அமைச்சர் நெப்போலியன் மூத்த மகன் மாற்றுத்திறனாளியான தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பல திரையுலகப் பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள். திருமணம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிறது. மூத்த மகன் தனுஷ்க்கு திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சார்ந்த ஒரு பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது பின்னர் திருமணம் ஜப்பான் நாட்டில் நடக்கிறது, நடிகர் நெப்போலியன் அமைச்சர் கே என் நேருவின் நெருங்கிய உறவினர், முன்னாள் மத்திய இணை அமைச்சர். அதன் பின்னர் அரசியலில் ஓய்வு பெற்று மகன் காரணமாக வெளிநாட்டில் வசித்து வரும் காரணம் வேறு எனக் கூறப்படும் நிலையில் அவர் இந்திய நாட்டின் பழைய நண்பர்கள் அனைவரையும் திருமண விழாவுக்கு அழைத்துள்ளார்
அதில் கலந்து கொள்வதற்காக அவருடன் 21 வயது முதல் பழகிய நடிகர் இயக்குநர் பாண்டியராஜன், நடிகை குஷ்பூ, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, நடிகை மீனா, கலா நடன இயக்குனர் போன்ற பிரபலங்கள் ஜப்பானுக்கு இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டனர்.
அதுபோல இன்னும் அதிகமான பிரபலங்கள் வருவார்கள் என்றும் தெரிகிறது. திருமணத்தையொட்டிய நிகழ்வுகள் இரண்டு நாட்கள் முன்பே தொடங்கி விட்டது. திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு அங்கு விழா நடைபெறுகிறதாம். அதற்குப் பிறகு மொத்த குடும்பத்தினரும் நண்பர்களும் சிங்கப்பூர் உட்பட சில நாடுகளைச் சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் ஜப்பானுக்கு வந்து அங்கிருந்து தான் அமெரிக்காவிற்கு மீண்டும் கப்பல் வழியாகச் செல்ல இருக்கிறார்களாம்.
இவரும் தெலுங்கு தாய் மொழி பேசும் ரெட்டியார் சமூகம் சார்ந்த தமிழ்நாடு சார்ந்த நபர், தற்போது அயல் நாட்டில் வசித்தாலும் பல விழாக்கள் பழைய நண்பர்கள் என நினைவில் இருக்கும் காரணம் இவர் சில முக்கிய பிரமுகர்களின் பினாமி என பலரும் பேசும் நிலை உள்ளது.
அமெரிக்காவில் வாழ்ந்தால் தான் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகனைப் பாதுகாக்க முடியும் என்பது ஒரு காரணம், இந்தியாவில் இருந்தாலும் உயர் மருத்துவம் உண்டு.ஆக இந்த இரண்டு பிரபல அரசியல் வாதிகள் வீட்டுத் திருமண நிகழ்வு பேசும் காரணம் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் நிலைப்பாடும் அவர்கள் சார்ந்துள்ள சமூக நிலைப்பாடும் இரு வேறுபட்ட நிலையில் உள்ளது தான் காரணமாகிறது.
கருத்துகள்