தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு ஐ.ஏ.எஸ் கால்நடைப் பராமரிப்புத் துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் என்ற பெருமையை பெற்றார் அர்ச்சனா பட்நாயக். தற்போது இவர் MSME துறையின் செயலாளராக உள்ளார். மாநிலத்தின் பொதுத் தேர்தலாகிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 324 ன்படியும் மேலும் நாடாளுமன்றத்தில் 1950 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மக்கள் பிரநிதித்துவச் சட்டம், 1951,[1] ன் படி குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் சட்டம்,1952 ஏற்படுத்தப் பட்டதாகும்.
மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.ஒ.- மா.த.தே.அ) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி மாநிலங்களில் நடைபெறுகின்ற தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் அலுவலர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.
தற்பொது வரை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் அலுவலராக இருந்த. சத்யபிரதா சாஹூ, இ.ஆ.ப, மாறுதல் செய்து தற்போது அர்ச்சனா பட்நாயக் இ ஆ ப நியமிக்கப்பட்டார்.
கருத்துகள்