முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய உணர்வு கொண்ட ராணுவ மாவீரர் கதை ‘அமரன் விமர்சனம்

தேசிய உணர்வு கொண்ட ராணுவ மாவீரர் கதை ‘அமரன்’


பார்த்த கையோடு பரத்வாஜ் ரங்கனுடனான ராஜ்குமார் பெரியசாமியின் உரையாடலும் பார்த்தேன். இந்திய அரசின் 'கவுன்ட்டர் இன்சர்ஜன்சி, கவுன்ட்டர் டெரரிசம்’ தனது படத்திற்கான அரசியல் பின்னணி என்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. அவர் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்சனை அவரது மனைவி ஹிந்து ரெபக்கா வர்கீசின் பார்வையின் வழி கதை சொல்கிறார். மனேராதியமான காதலும் உக்கிரமான வன்முறையுமான கலவை தான் அமரன்.


ஹாலிவுட் யுத்தப் படங்களால் இயக்குனர் ஆதர்ஷம் பெற்றிருக்கிறார். மார்ட்டின் ஸ்கோர்சிசே, டெரன்ஸ் மாலிக், ஸபீல்பெர்க் போன்றவர்களை மேற்கோள் காட்டுகிறார். யுத்தம் தொடர்பான அற்புதமான படங்களை எடுத்த ஆலிவர் ஸ்டோன், கொப்பாலோ, சோடர்பர்க் போன்றவர்களிலிருந்து தேர இவருக்கு ஏதுமில்லை. யுத்தத்தில் இரு தரப்புகள் உண்டு. பெரும் ஆயுதங்களுடன் போரிடும் அரசுத் தரப்பு. சமபலமற்ற நிலையில் போரிடும் ஆயுத இயக்கங்கள். இதில் இடம் பெறுபவர்களின் வாழ்வில் உயிரீகமும் அரசியலும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது.

இதில் தொழில்நுட்ப அழகு, செய்நேர்த்தி, நடிகர் நடிகையரின் நடிப்பு பற்றிப் பேசுவதற்கு எத்தனையோ திரை விமர்சனம் செய்ய பலரும் இருக்கிறார்கள். நாம் வரலாறும்  அரசியலும் பற்றி மட்டுமே பேசுவோம். நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பிலிம் மேக்கர் கமல்ஹாசன், மற்றும் அவரது அண்ணன் மருமகன் மணிரத்னம் எடுத்த இஸ்லாமியர்கள் குறித்த படங்களின் தொடர்ச்சி தான் அமரன்.

ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம் சிந்தனைப்பள்ளி சார்ந்த ராஜ்குமார் பெரியசாமியிடம் யுத்தபூமி குறித்த மேதைமை கொண்ட ஒரு படத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசு தரப்பில் நின்று போரைப் பற்றி மட்டுமே பேசும் படம் அமரன்.   


ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை இயக்க; கமலஹாசன் தயாரித்திருக்கிறார். இதுவரை நடிப்பை வெளிப்படுத்தாத சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதைநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு கதை நாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமியின் மேக்கிங் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது.  இந்திய ராணுவத்தில் மேஜர் பணியாற்றி சண்டையின் போது வீர மரணமடைந்த

தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. அதன் காரணமாகவும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஹைப் எகிறியது. படமானது பான் இந்தியா அளவில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருக்கிறார்கள்.



முக்கியமாக சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு கொண்டாடப்படுகிறது. அதிலும் சாய் பல்லவி மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்து விட்டார். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  நல்லாதரவு

கிடைத்திருக்கிறநிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அமரன் படம் குறித்து செய்தி  விமர்சனம் அவரது எக்ஸ் தளத்தில், "நான் ராணுவத்துக்குச் செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள். என்னுடைய எட்டாம் வகுப்பில் நான் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றேன். இருந்தாலும் பயம் காரணமாக அதில் சேர்ந்து படிக்கவில்லை. இப்போது அமரன் படம் பார்த்து, நான் செய்தது தவறு என உணர்கிறேன். அந்தப் பள்ளியில் நான் படித்திருக்க வேண்டும். மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை ஒரு வீர காவியம். சிவகார்த்திகேயன் அதை முழுமையாக்கியிருக்கிறார். சாய் பல்லவி போன்று படத்தின் தொடக்கத்தில் நானும் அழுதேன். கடைசியில் அவர் தனது அழுகையை கட்டுப்படுத்தியது போல் நானும் செய்தேன். இயக்குநர் எல்லாத் துறையிலும் சிறப்பு செய்திருக்கிறார். அவரைக் கொண்டாட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.                         


.        இந்திய இராணுவத்தின் ராஜ்புத் படைப்பிரிவின் ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜன், தனது அணியின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்த அச்சமற்ற தலைவராக நினைவு கூறப்படுகிறார். ஜம்மு காஷ்மீரில் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் என்ற உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் மேஜர். தமிழ்நாட்டின் சென்னையில் ஏப்ரல் மாதம் 12, ஆம் தேதி 1983 ஆம் ஆண்டில் பிறந்த முகுந்த் வரதராஜன், சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புகளையும் வலுவான கடமை உணர்வையும் வெளிப்படுத்தினார். 2014 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது அவரது இறுதி தியாகத்திற்குப் பிறகு அவரது துணிச்சலும் அவரது நாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் அவரை ஒரு பிரியமான நபராக ஆக்கியது. முகுந்த் தனது நீண்ட கால காதலியான ஹிந்து ரெபேக்கா வர்கீஸை 2009 ஆம் ஆண்டில் மணந்தார், ஒரே மகளான. அர்ஷியா முகுந்த், 2011 ஆம் ஆண்டில் பிறந்த நிலையில்.

முகுந்த் வரதராஜன் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் வணிகவியல் இளங்கலைப் படிப்பையும், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பத்திரிகையில் டிப்ளமோவையும் முடித்தார்.                   






  ஒரு இராணுவக் குடும்பத்தில் கேரளா கிறிஸ்துவரான இந்து ரெபேக்கா வர்கீஸ் கல்லூரிப் படிப்பிற்காகச் சென்னை வந்தார். அதே கல்லூரியில் தான் முகுந்த் படித்தார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்த நிலையில், 2009 ஆம் ஆண்டு அவர்களுக்குத் திருமணம் நடந்தது 2011 ஆம் ஆண்டு அர்ஷியா முகுந்த் என்ற பெண் குழந்தை பிறந்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் தியாகத்திற்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டதை இந்து ரெபேக்கா அப்போது குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக் கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்  உடனிருந்தார்.ரெபேக்கா வர்கீஸ் இப்போது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஸ்டன்ஸ்ல் வசித்து வருகிறார். அமரன் படத்தில் அவர் ஆசிரியை  பயிற்சி பெறுவது போல காட்டப்பட்டுள்ளது இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் ஆசிரியராக பணியாற்றுகிறார். தாத்தா மற்றும் இரண்டு மாமாக்கள் இராணுவத்தில் பணியாற்றினர். இது இராணுவத்தில் அவர் சேரவும் தனது நாட்டிற்காக போராடவும் அவரைத் தூண்டியது. கல்வியை முடித்த பிறகு, மேஜர் முகுந்த் சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) சேர்ந்தார் , அங்கு அவர் தனது இராணுவப் பயிற்சியை முடித்தார். இந்திய இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டவர், 22 ராஜ்புத் படைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.


பின்னர், அவர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடுமையான பணிகளுக்காகவே அறியப்பட்ட இந்திய இராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான ராஷ்ட்ரிய ரைபிள்ஸில் சேர்ந்தார், அங்கு அதிகாரிகள் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு சவாலான சூழ்நிலையில் செயல்படுகிறார்கள். ஆயுதப் படைகளில் அவரது வாழ்க்கை, பின்னடைவு, தைரியம் மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்டது. இது தற்போது மேஜர் முகுந்தாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்தில் சில உண்மை விபரங்கள் ஏன்  இல்லை என்பது இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே வெளிச்சம். நிஜ வாழ்க்கையில் மேஜர் முகுந்த் ஒரு ஹிந்து தமிழ் பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை மறைத்து தெலுங்கு பேசும் ஒரு சமூக நபராக திரையில் காட்ட என்ன அவசியம் ? படத்தின் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான பிராமணர் ஐயங்கார் சமூகம் சார்ந்த நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு பிரமாண சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை அவரது சொந்த அடையாளத்துடன் காண்பிப்பதில் ஏதேனும் பிரச்சினையா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.


தற்போது இந்திய நாட்டில் இராணுவம் குறித்து தெளிவான பார்வை ஒவ்வொரு மாணவருக்கும் தேவை






அதுவே நம் தேசத்தின் பற்று உறவை வளர்க்கும் காரணியாகும். சைனிக் பள்ளி மீதான மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை மக்கள் உணரும் விதமாக படம் அமைவதே வெற்றி பெறக் காரணமாக அமைந்தது.                                        கடந்த செப்டம்பர் மாதம். 8 ஆம் தேதி சென்னையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA)-யில்  நடைபெற்ற கண்கவர் பயிற்சி  நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில், 39 பெண் ராணுவ அதிகாரிகள் உட்பட 258 ராணுவ அதிகாரிகள்  இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவு களில் இணைந்தனர்.  பயிற்சி அகாடமியின் புகழ்மிக்க பரமேஸ்வரன் அணிவகுப்பு மைதானத்தில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில் ராணுவத்  துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணியன் முக்கிய விருந்தினராகப் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஓராண்டு காலம் கடுமையான பயிற்சியின் நிறைவாக இவர்கள் ராணுவத்தில் அதிகாரிகளாக இணைகின்றனர். நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து பெண் ராணுவ அதிகாரிகள் உட்பட 10 பேர்  தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். அவர்கள் பிற நாடுகளுடனான இந்தியாவின் நடப்புறவைப் பிரதிபலிக்கின்றனர். மேலும், இந்திய ராணுவத்தின் தளராத நம்பிக்கை கொண்ட எதிர்காலத் தலைவர்களாக பரிமளித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...