"ஐ யம் சாரி ஐயப்பா.நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என கடந்த 2019 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் ஒன்று கிருஸ்தவ மதம் சார்ந்த பெண் பாடகி பாடிய நிலையில் தற்போது வரை அது
பல கோடிக்கணக்கான ஹிந்து மக்கள் வணங்கும் சபரிமலை ஐயப்பன் குறித்து கானா பாட்டை பாடியதை இதுவரை தடுக்கத் தவறிய நிலையில் பாடகி இசைவாணி என்று பெண் இவர் சென்னை இராயபுரம் பகுதியில் வசிக்கும் நபர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மக்கள் அதிகம் விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் காலமிது, அவ்வாறு இருக்க திட்டமிட்டு
ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக நீலம் பன்னாட்டு மையம் என்ற ஒரு அமைப்பு அந்த பாடகி பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமாக்களில் ஜாதிய அடிப்படையிலும் பொய்யான வரலாற்றுத் திரிபுகள் உருவாக்க ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதமுமாக பேசி வருபவர் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித். இவரது நீலம் பண்பாட்டு மையத்தில் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழு ஒன்றுள்ளது.
இதில் கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட மாற்று மதம் சார்ந்த கானா பாடகர்களும் பாடல்களை பாடி வருகின்றனர்.இந்த நிலையில் முன்பு பிக்பாஸ் என்ற கலாச்சார சீரழிவுப் போட்டியில் பங்கேற்ற கானா பாடகி இசைவாணி என்பவர் 2019 ஆம் ஆண்டில் நடந்த இசை நிகழ்ச்சியில், 'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என ஒரு பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடலை இப்போது சிலர் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றியதால், சர்ச்சையாகிகிறது.
அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் 11 வயது முதல் 55 வயது வரை செல்வதில்லை. இதை விமர்சித்து அவர் பாடலை பாடியுள்ளார் கிறுஸ்துவ மதம் பின்பற்றும் பெண்ணான இசைவாணி, சிலுவை அணிந்த படி இந்தியாவில் அதிகப் பெரும்பான்மையானோர் கொண்ட ஹிந்து மக்கள் வழிபடும் கடவுள் பற்றி பாடியது சரியா என்பதையும்,தனது மதத்தை விமர்சித்து அவர் அப்படி பாடுவாரா என்றும் ஹிந்து மதம் பற்றி மட்டும் எது வேண்டுமானாலும் பேசலாம், பாடலாம் என்று நினைத்து, மாற்று மதத்தினரை புண்படுத்துகிறார் என்பது அவர் பாடிய போது தெளிவாகவே தெரிந்தது இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இசைவாணி கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். அவர் வழிபடும் இயேசுவைப் புகழ்ந்து அவர் பாடல் பாடியுள்ளதோடு, மேடையில் நாங்கள் வழிபடும் கடவுள் சபரிமலை ஐயப்பனை இழிவுப்படுத்திப் பாடியுள்ளார்.
அவர் மீது உரிய சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பா ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.நடிகை கஸ்துாரி பேசிய விவகாரத்தில் விரட்டி தெலுங்கானா சென்று கைது செய்த தமிழ்நாடு காவல் துறை, இசைவாணி விவகாரத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்? ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா என ஹிந்து மதத்தின் முக்கிய தலைவர்கள் கண்டணம் தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றி சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன
. நீலம் பண்பாட்டு மையம் சார்பில், ‛மார்க்கழியில் மக்களிசை’ (இதுவும் ஹிந்து வழிபாட்டு முறை குறித்து விமர்சனம் செய்த நிகழ்வு தான் )என்ற பெயரில் சமீபத்தில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியில் அவர் இந்தப் பாடலை மீண்டும் பாடினார். தற்போது சபரிமலைக்கு பக்தர்கள் ஒரு மண்டலம் விரதமிருந்து வரும் காலம் என்பதால் இந்தப் பாடல் சர்ச்சையாகியுள்ளது.
அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆகம விதிப்படி பெண்கள் செல்லக் கூடாது. இது ஹிந்து மக்கள் பாரம்பரிய ஐதீகம் இதில் வேண்டுமென்றே ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட நபர்களால் சர்ச்சையாகும் நிலையில் அவர் அதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் இந்தப் பாடல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகவும், ஐயப்பன் ஆலயம் மற்றும் விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்யும் நோக்கத்துடனும் வரிகள் இருப்பதாக கூறப்படுகிறது
இதுதொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பா பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் மீது சரியான நடவடிக்கை இல்லை எனில் சென்னை உயர்நீதிமன்றம் மூலம் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க அந்த அமைப்பு தயாராக உள்ளது. கானாபாடகி இசைவாணி மற்றும் ப.ரஞ்சித் மீதான இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே தான் இசைவாணி சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் கணத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா பாடகி இசைவாணியின் செல்போனைத் தொடர்பு கொண்டு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து தான் இந்தப் பாதுகாப்பு மனுவும் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாநில ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்த ஆட்சியைப் பொறுத்தவரை எல்லாருக்கும் எல்லாம் என்று முதல்வர் ஆட்சி செய்கிறார். ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரை இழிவுப்படுத்துவதை நிச்சயம் முதல்வர் அனுமதிக்கமாட்டார்கள். இந்த விவகாரத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டம் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை இந்த ஆட்சி எடுக்கும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைத்தூக்க முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்’’ எனத் தெரிவித்தார்.கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்குமென பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி தெரிவித்தார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில், மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மதுரை அண்ணாநகர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
வழக்கறிஞர் வணங்காமுடி கூறுகையில், ''இசைவாணி மீது கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் புகார் அளித்து வருகிறோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதித்துறையை நாடுவோம். ஹிந்து மதக் கடவுள்களைத் திட்டமிட்டு கடவுள் மறுப்பாளர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர். இதை ஒரு சதியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தை , கட்சி சும்மா விடாது,'' என்றார். அதேபோல கானாபாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மையம் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர். இந்தப் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், எங்கள் கட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறினார்.
கருத்துகள்