கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கண்ணன், (வயது 30); வக்கீல். கொலை. மூத்த வழக்கறிஞர்
சத்தியநாராயணன் ஜூனியராக உள்ளார் கண்ணன். இவர் நேற்று மதியம் நீதிமன்றத்தில் வேலை முடிந்து அவரது அலுவலகம் திரும்பி கொண்டிருந்தார் நீதிமன்றத்தில் வாசலுக்கு வந்த போது, பின்னால் வந்த வாலிபர், அரிவாளால் கண்ணனை வெட்டினார். கீழே விழுந்தவரை விடாமல் தலை, கழுத்து, தொடை என அரக்கத்தனமாக யாரையும் கண்டு கொள்ளாமல் வெட்டினார்.
கண்ணன் இரத்த வெள்ளத்தில் துடித்த போது, அந்த கொலை வெறி பிடித்த நபர் நிதானமாகப் பார்வையிட்டு, மீண்டும் கழுத்திலும், முகத்திலும் வெட்டினார். சுற்றிலும் பலரும் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை, அவர் கண்டுகொள்ளவில்லை.கண்ணன் அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து, உயிர் போயிருக்கும் என்ற எண்ணத்துடன் நீதிமன்றத்தில் உள்ள வளாகத்துக்குள் நடந்து சென்று, அங்கிருந்த காவல் துறையினரிடம் சரணடைந்தார். வக்கீல் கண்ணனை காவலர்கள் துாக்கிச் சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்; அவர் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த நிலையில் கண்ணன் வக்கீலை வெட்டியவர் ஆனந்தகுமார் வக்கீல் குமாஸ்தா, (வயது 39) அவர் மனைவி வக்கீல். கண்ணனும் வக்கீல் இருவரும் பேசிப் பழகியது ஆனந்தகுமாருக்கு பிடிக்கவில்லை; அவர் கண்டித்தும் கண்ணன் கேட்கவில்லை. சமீபத்தில் இது மோதலாக நடந்த நிலையில் ஆனந்தகுமார் முன்னர் அடித்ததில், கண்ணன் சில பற்களை மட்டுமே இழந்தார். ஆனாலும், அவர் பழக்கத்தை விடவில்லை.
அந்தக் கோபத்தில் தான், நேற்று கண்ணனை கொலைவெறித் தாக்குதல் நடத்திய மற்றொரு வழக்கறிஞர் உதவியாளர் ஆனந்தன் என்பவரிடம் காவல்துறை விசாரணை அப்போது வந்த உண்மைத் தகவல்:- ஓசூரில் மிகவும் பிரபலமான சீனியர் வழக்கறிஞர் சத்திய நாராயணன், அவருக்கு ஜூனியராக இருப்பவர் வழக்கறிஞர் கண்ணன். இவர் போயர் (கல் உடைப்பவர்) சமூகத்தைச் சேர்ந்தவர். திருமணமாகாதவர் ரங்கசாமி பிள்ளை தெருவில் தனியாக வசித்து வருகிறார்.
அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாமல்பேட்டையில் குமாஸ்தா ஆனந்தன் வசித்து வருகிறார். இவரது மனைவி, வழக்கறிஞர் சத்யவதி இருவரும் பலிஜா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரே நீதிமன்றத்தில் பணிபுரியும் ஆனந்தனுக்கும், சத்யவதிக்கும் திருமணமாகி ஒருவருட காலமாகிறது. இந்த நிலையில், வக்கீல் கண்ணன் வக்கீல் சத்யவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இதனையறிந்த ஆனந்தன், தனது மனைவி சத்யவதியைக் கண்டித்தபோது, 'கண்ணன் தான் எனக்கு தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்' என முறையிட்டுள்ளார்.
இதைக் கேட்டுக்கொண்ட குமாஸ்தா ஆனந்தன், வழக்கறிஞர் கண்ணனை பலமுறை கண்டித்துள்ளார். எனினும் கண்ணன் தொல்லைகள் தருவது தொடர்ந்தது.
அதனால் கோபமான ஆனந்தன் கடந்த சில நாட்களாக வக்கீல் கண்ணனைக் கொலை செய்யத் திட்டமிட்டு வந்தார். ஆனால் அதற்கான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையவில்லை.
இந்தநிலையில் இன்று பணிக்கு வந்த வக்கீல் கண்ணன் எப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருவார் என தனியார் குமாஸ்தா ஆனந்தன் காத்திருந்தார்.
மதியம் 12.45 மணியளவில் பணி முடிந்து அலுவலகத்திற்கு வந்த வக்கீல் கண்ணனை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காத்திருந்தார்.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் அவரை வழி மறித்து. வாக்குவாதம் செய்த நிலையில், ஒருகட்டத்தில் தான் பதுக்கி வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி முகத்தைச் சிதைத்தார் ஆனந்தன்.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் துடித்த நிலையில் கண்ணனை அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதும் அவர் மரணமடைந்தார்
இதற்கிடையே வக்கீல் கண்ணனை வெட்டிக் கொலை செய்த குமாஸ்தா ஆனந்தன் ஓசூர் நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் உதவியுடன் சரணடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, நீதிமன்றத்தில் சரணடைந்த வழக்கறிஞர் குமாஸ்தா ஆனந்தன் என்பவரை காவல்துறையினர் காவலில் எடுத்தது நகர காவல் துறை. இந்த நிலையில் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்; கைத்துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல ஊர்களில், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தனிப்பட்ட இரண்டு நபர்கள் விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ள நிலையில் இதில் வக்கீல் செய்த தவறுக்காக தனியார் குமாஸ்தா செய்த கொலை என்பதே உண்மை நிலை.தமிழ்நாடு
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் குறித்து பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. இருந்தாலும்
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதில் தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர் கதையாகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, உள்துறைச் செயலாளர், டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மீதான தக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பரிந்துரை கேட்கப்பட்டது.
மேலும், ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்