டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மன்மோகனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்த கொலிஜியம் பரிந்துரை
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மன்மோகனை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்த கொலிஜியம் பரிந்துரை செய்தது
இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நடந்த கொலீஜியம் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் இம் முடிவை எடுத்துள்ளது.
நீதிபதி மன்மோகன் செப்டம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டு முதல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றுகிறார். அதற்கு முன்பு, செப்டம்பர் மாதம் 2023 ஆம் ஆண்டு முதல் அதன் தற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.
அவர் டிசம்பர் மாதம்17 ஆம் தேதி, 1962 ஆம் ஆண்டில் பிறந்தவர், 1987 ஆம் ஆண்டில் டெல்லியின் கேம்பஸ் லா சென்டரில் LL.B முடித்து அதே ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
2003 ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
மார்ச் மாதம்13 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர், டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி, 2009 ஆம் ஆண்டில் நிரந்தரமானார்.
உச்சநீதிமன்றம் தற்போது 32 நீதிபதிகளுடன் செயல்படுகிறது, அதன் அனுமதிக்கப்பட்ட பலம் 34, காலியிடமான 2 பதவி இன்னும் ஒன்று உள்ளது.
கருத்துகள்