முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாட்டரி மார்டீனுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED) மே மாதம் 1 ஆம் தேதி,1956 ஆம் ஆண்டில்,  இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறைக்குள் "அமலாக்கப் பிரிவு" நிறுவப்பட்டது.


இது அந்நிய செலாவணி ஒழுங்கு முறைச் சட்டம், 1947 (FERA 47) ன் கீழ் பரிமாற்றக் கட்டுப்பாட்டு சட்டங்களின் மீறல்களைக் கையாள உருவாக்கப்பட்டது. ED ன் முதன்மைக் கட்டளைகள் இரண்டு முக்கிய சட்டங்களைச் செயல்படுத்துவதாகும்: பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (FEMA) . கூடுதலாக, தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 (FEOA) ஐ செயல்படுத்தும் பணியைக் கொண்டது , அமலாக்கத்துறை இயக்குநரகம்

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்குகிறது , மேலும் நாட்டில் பொருளாதாரக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும் பொருளாதாரச் சட்டங்களை அமல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 

கோயம்புத்தூர் லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டின் ஒட்டு மொத்த தமிழ்நாடு அரசியலையும் லாட்டரி சீட்டுப் பணத்தில் கட்டிப் போட வேண்டும் என நினைத்தார். வில்லனாக பாஜக தற்போது களத்தில் இறங்கியுள்ளது தெரிகிறது.  ஆதவ் அர்ஜுன ரெட்டி வீட்டில் அமலாக்கதுறை இன்று அதிகாலை கதவைத் தட்டியது இது இரண்டாவது முறை!  ஏன்?விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தற்போது துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

கோயம்புத்தூர் லாட்டரி சீட்டு மார்ட்டின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது   கோயம்புத்தூர் துடியலூர் வெள்ளாங்கிணறு பகுதியில் உள்ள லாட்டரி சீட்டு அதிபர் மார்டின் வீட்டிற்கு இன்று அதிகாலை இரண்டு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் மூன்று வாகனங்களில் வந்து லாட்டரி மார்டின் குழும அலுவலகங்களுக்குள் நுழைந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் அங்கும் சோதனை நடத்தி வருகின்றனர். லாட்டரி மார்ட்டினுக்குச் சொந்தமான ஹோமியோபதி கல்லூரியிலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். கோயம்புத்தூரில் மூன்று இடங்களில் சோதனை நடத்தப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை லாட்டரி மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. அப்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அமலாக்கத்துறையினர் லாட்டரி மார்ட்டின் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்



சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாரெட்டியின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆதவ் அர்ஜுனா ரெட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், துணைப் பொதுச்செயலாளராக உள்ளார் . அலுவலர்கள் சோதனை நடத்தி வருவதால் , ஹோமியோபதி மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்துக்குச் செல்ல முடியாமல் வாயிலிலேயே நின்றனர். ஹோமியோபதி கல்லூரி வாயிலில் மத்திய தொழிற்படைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2012-ஆம் ஆண்டு சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் வீட்டில் மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் முழுவதும் லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகராஷ்ட்டிராவில் லாட்டரிச் சீட்டு விற்பனை செய்ததன் மூலமாகத் திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலமளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.



அமலாக்கத்துறையும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. பிறகு இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்தது.



வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரும், அமலாக்கத்துறையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்ட நிலையில் தான் தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலங்களில் அமலாக்கத்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையினர் நடவடிக்கைக்குப் பின்னர் தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் அரசியல் கட்சிகளுக்கு ரூபாய் 1,368 கோடியை நன்கொடையாகக் கொடுத்துள்ளார். ஆனால்  அந்தக் கால கட்டத்தில் அவருடைய நிறுவனத்தின் தாக்கல் செய்த கணக்கு நிகர லாபமே 215 கோடி தான். நிறுவனத்தின் நிகர மதிப்பு  இவ்வாறு இருக்க ரூபாய்  1,089 கோடி தான் மொத்த வரவு செலவு . ஆனால் அதை விட அதிகமாக அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளார்.

இந்த நன்கொடையை வாங்கி வைத்துள்ள அந்த அரசியல் கட்சிகள் எத்தனை லஞ்ச லாவண்யங்கள் நிறைந்த ஊழல் கட்சியாக இருக்க வேண்டும்..! அது எந்தக் கட்சி என்று மக்கள் அறியாமல் இருக்கும் நிலை.  அதிகாரபூர்வமாக ₹ 1368 கோடிகள் நன்கொடை மட்டுமே என்றால் அரசியல்வாதிகளும் உயர் அலுவலர்களுக்கும்  இதை விட பல மடங்கு பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருக்கும். என்பதே பலர் கூறும் வாதம்.

அப்படி என்றால் எத்தனை மடங்கு பணத்தை அப்பாவிப் பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு பணம் லாட்டரிச் சீட்டு மூலம் கொள்ளை அடித்திருப்பார்கள் ? நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளும் மறைமுகக் கொள்ளைக்காரர்கள் தானே.  கோயம்புத்தூர் வசிப்பவர்கள், அல்லது கோயம்புத்தூருக்குப் புதிதாக வருபவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடம் அல்லது டீக்கடை நடத்தி வரும் நபர்களிடம் ஒரே ஒரு கேள்வியைக் கேளுங்கள் “யாருங்க இந்த மார்ட்டின்?” கதை கதையாகச் சத்தமில்லாமல் சொல்வார்கள். பெரும்பாலும் அனைவருமே சொல்வது “அவரு லாட்டரி சீட்டு வித்துட்டு ஆறாம் நம்பர்ல இருந்தாருங்க, சின்ன தட்டி போர்டு, அதன் மீது சில அலுமினியக் கிளிப் வெச்சு லாட்டரி சின்னதா வித்தவருங்க, இப்போ கோயமுத்தூரே அவருதுங்க” யார்? எங்கிருந்து வந்தார்? முழு விவரம் ஜான் டியாகோ மார்ட்டின். இந்தப் பெயரை விட 'லாட்டரி மார்ட்டின்' என்றே பிரபலமாக அழைக்கப் படுகிறார்.

மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் மியான்மார் எனும் பர்மாவில் ஜாண்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத மோகம் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது. பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலைத் துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருகிறார். மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின். அப்போதிருந்த, முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையில் அரசாங்கம் லாட்டரிகளை முழுவதும் தடை செய்தது, மார்ட்டினுக்குப் பின்னடைவு என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது. ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய் அளவில் கள்ள லாட்டரிகளை விற்பனை செய்ததாக மக்கள் மத்தியில் பேச்சு உண்டு. அந்த லாபத்தைக் கொண்டு ஊரெல்லாம் சொத்துக்கள் வாங்கினாலும் அந்தப் பேராசை ஆட்டுவித்தது மார்ட்டினை. 1990 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் லாட்டரி தடை செய்யப் படாமல் இருந்த பொழுது, சேலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மார்டினிடம் இருந்து மொத்தமாக லாட்டரிச் சீட்டுகளை வாங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு லாட்டரிச் சீட்டுக்ளை வாங்குவதற்கு உத்தரவாதமாக ஒரு பெரும் தொகையை மார்ட்டின் கேட்கிறார்.

பாலாஜியிடம் பெரும் தொகை இல்லாததால், சேலம் அக்ரஹாரம், எண் 42 ல் உள்ள கட்டிடத்திற்கு பொது அதிகார ஆவணம் எழுதித் தருகிறார்கள். இவரைப் போலவே லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருந்த பாலாஜியின் தங்கையின் கணவரும் அவரது சொத்துக்கான பொது அதிகார ஆவணம் எழுதித் தருகின்றனர். இதெல்லாம் நடந்தது 2000 ம் ஆண்டு. இதற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு லாட்டரிகளைத் தடை செய்ததால், பாலாஜி தனது வியாபாரத்தை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றிக் கொள்கிறார். மார்ட்டினுக்கு கொடுக்க வேண்டிய அத்தனை நிலுவைகளையும் கொடுத்த பின், தான் அளித்த பவர் ஆப் அட்டர்னி பத்திரத்தை திருப்பித் தருமாறு கேட்கிறார். மார்ட்டின் 'இதோ, அதோ' என்று இழுத்தடிக்கிறார்.அவரிடம் எப்படி இந்தப் பத்திரத்தை வாங்குவது என்று பாலாஜி விழித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் திடீரென 13.10.2010 அன்று, ஆயுதங்கள் கொண்ட ஒரு கும்பல், யுனிவர்சல் செல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் நுழைந்து, அடாவடியாக அந்த நிறுவனத்தைக் காலி செய்தது.  அது குறித்து பாலாஜி விபரங்களை விசாரித்தால், 2009 ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாய்க்கு மார்ட்டின் அந்தச் சொத்தை சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அடுத்த நடவடிக்கையை பாலாஜி எடுப்பதற்குள் சரசரவென்று காட்சிகள் அரங்கேறின. பெரிய திரையை போட்டு மூடி, கட்டிடம் இடிக்கப் படத் தொடங்கியது. அதிர்ந்து போன பாலாஜி, சேலம் மாவட்ட சிவில் கோர்ட்டில் தடையாணை கேட்டு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். சேலம் மாநகரக் காவல்துறை ஆணையாளரிடமும், நகரக் காவல் நிலையத்திலும் புகார் ஒன்றைக் கொடுக்கிறார். அப்போது அரசுக்கு நெருக்கமான லாட்டரி மார்ட்டின் மீது முதல் தகவல் அறிக்கை தர சேலம் மாநகர காவல் ஆணையர் எந்த நடவடிக்கையும் இல்லாததால், வேறு வழியின்றி பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். சென்னை உயர்நீதிமன்றம், லாட்டரி மார்ட்டின் மீதும், அந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை திறம்பட வாதாடி பரிசு சீட்டு விற்ற மார்ட்டினுக்கு பொங்கல் பரிசாகவே  வழங்கிய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன். மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம். மார்ட்டினின் செல்வாக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி  நாளிதழ். தமிழ்நாட்டில் தீக்கதிர் போல . 2005 ஆம் ஆண்டு மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்று. விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனது, தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது. மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற நாம் ஏற்கனவே பார்த்த ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழ்நாட்டில் மார்ட்டினின் சட்டவிரோத லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன. இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை மோசடி செய்து விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாசுக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வரிடம் நெருக்கமாக இருக்கிறார். பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார். பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு. தொடர்ந்து சோதனைகள் நடந்தது, மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் முடங்குகிறது. பணம் நஷ்டமாகிறது. அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகள் தமது தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கின்றன. மார்ட்டின் முதலில் அணுகியது, பெங்களூருவில் இருக்கும் ஒரு முக்கிய பெண் நபர் நட்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை, அப்போது தான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்புக் கிடைக்கிறது. பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார். மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் திரைப்பட ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, முதல்வர் கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானது தான் இளைஞன் திரைப்படம், டாக்டர் கலைஞர் தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கை,  தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்குக் கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப்பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்' என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் இது எல்லாம் கடந்த கால நிகழ்வுகள் ஆனால் தற்போது 

லாட்டரி மார்டீன் இடங்களில் ED சோதனை!

லாட்டரி மார்டீன் இங்கே இருக்கும் சில தேசவிரோத பிரிவினைவாத சக்திகளுக்கு கொடுக்கும் நிதி ஆதரவு எதனால் என்பதை NIA விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை வைக்கும் நிலையில். 

டேனியல் காந்தி என்ற திருமுருகன் காந்தி ஆரம்பித்து பலர் நமது நாட்டிற்கும், நாட்டின் ராணுவத்திற்கும் எதிராகப் பேசி வருவதற்கு மார்டீன் கோடிகளைக் கொட்டுவது ஏன் என்று காரணம் அமலாக்கத்துறை நன்கு அறியும் ?

மார்டீன் மகனுக்கு நெருக்கமான நிறுவனத்தின் கீழ் சுமார் 300 மேற்பட்ட டாக்ஸிகள் சென்னையில் மட்டும் ஓட்டும் பின்னணியில் இருக்கும் மர்மம் தேடி ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...