எடப்பாடி கே.பழனிச்சாமி செய்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை
டிசம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்தார் என புகார்கள் வந்தன தஞ்சாவூர், கோயம்புத்தூர், சிவகங்கை பகுதிகளுக்கான நெடுஞ்சாலை துறை டெண்டரில் சட்ட விதிகளை மீறி 692 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பை எடப்பாடி கே பழனிசாமி ஏற்படுத்தியதாக
அவருக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி புகார் அளித்தது.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, எடப்பாடி கே.பழனிசாமி குறித்து பேசுவதற்கு அறப்போர் இயக்கத்துக்கு அப்போது தடை விதித்து உத்தரவிட்டார். இது ஊழல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் செயல் போல உள்ளது என்பதால் அந்த உத்தரவை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி குறித்து பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என அறப்போர் இயக்கத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி முன் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம், அளித்த வர் அவருக்கு ஆதரவாக சில ஆதாரங்களை அளித்தார்.
அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எடப்பாடி கே.பழனிச்சாமி டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.வழக்கமாக அவதூறு வழக்கு தொடுப்பவர்கள் எதை அவதூறு என்று சொல்கிறார்களோ அந்த ஒரு விஷயத்தை எதிர்தரப்பு பேச தடை கேட்பார்கள். ஆனால் எடப்பாடி கே பழனிச்சாமி தன்னைப் பற்றியே பேச கூடாது என்று தடை கேட்க அந்த நீதிபதியும் அறப்போர் இரண்டு நாட்களாக வழக்கின் ஆதாரங்கள் குறித்து பேசிய எதையும் தீர்ப்பில் குறிப்பிடாமல் இனி எடப்பாடி கே பழனிச்சாமி பற்றியே அறப்போர் பேச கூடாது என்று தடை விதிக்கிறார். எப்படி அப்படி ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டது, அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது. ஒரு வேளை தன்னை பற்றி பேசுவதையே அவதூறு என்று எடப்பாடி கே பழனிச்சாமி நினைக்கிறாரோ என்னமோ தெரியவில்லை.
அந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்பொழுது நான் தான் வழக்கை தொடுத்திருக்கிறேன் என்று இன்று நீதிமன்றம் வந்து எடப்பாடி கே பழனிச்சாமி சாட்சி அளித்திருக்கிறார். இனி வழக்கு விசாரணை துவங்கும். அறப்போர் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை முன்வைத்து வழக்கை சந்திப்பார்கள். எடப்பாடி கே பழனிச்சாமிக்கு இனி 1.1 கோடி கிடைக்குமா அல்லது ஆதாரங்களில் உண்மை இருக்கிறது என்று தீர்ப்பு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது போலவே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு நிலையும் அமையும்
கருத்துகள்