முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு
கடற்கரை ஸ்தலம் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
கோயிலில் 25 வயதான தெய்வானை எனும் பெயர் சூட்டப்பட்ட பெண் யானை வளர்க்கப்படுகிறது. அன்னதான மண்டபம் அருகிலுள்ள யானைக் கவுனியில் (கூடத்தில்) கட்டப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் நிர்வாக நிதி மட்டுமின்றி, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள யானை பராமரிப்பு உண்டியல்கள் மூலம் கிடைக்கப் பெறும் பக்தர்களின் காணிக்கை மூலமும் தெய்வானை யானை பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 18 ஆம் தேதி) மதியம் சுமார் 3 மணி அளவில் யானை உதவி பாகன் உதயகுமார், யானைக்கு உணவு வழங்கியபோது அவர் அருகில் உதயகுமாரின் உறவினர் நாகர்கோவில் சிசுபாலன் நின்று கொண்டிருந்த போது சிசு பாலன் செல்லுலார் போனில் செல்ஃபி எடுக்க முயல அதில் ஃபிளாஷ் அடிக்கும் போது தெய்வானை யானை மிரண்டு இருவரையும் தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் வனத்துறை அனுமதி பெற்று லீலாபோரா என்பவருக்குச் சொந்தமாகி வளர்த்து வந்த நிலையில் யானைக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ’பிரிரோனா’. அஸ்ஸாமைச் சேர்ந்த இந்த யானையை திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் முதலில் விலைக்கு வாங்கினார்.
அவரிடமிருந்து கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருச்செந்தூர் கோயிலின் அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த தேவதாச சுந்தரம் விலை கொடுத்து வாங்கி, கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
அப்போது தான் ’பிரிரோனா’ என்கிற பெயர், ’தெய்வானை’ என மாற்றம் செய்யப்பட்டது. அப்போது தெய்வானைக்கு 6 வயது. முதலில் திருச்செந்தூரில் இருந்த தெய்வானை யானை பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது தான், உதவி பாகனாக இருந்த காவடி காளிதாஸ் என்ற நபரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் அதிக மன அழுத்தத்தின் காரணமாக திருச்சிராப்பள்ளி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்த போதும் சரண் எனும் நபரைத் தூக்கி வீசியது. இதனால் யானையை மீண்டும் அஸ்ஸாம் மாநிலத்திற்க்கே கொடுத்து விடுமாறு அந்த மாநில அரசின் வனத்துறை கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை, தெய்வானை யானை முறையாகப் பராமரிக்கப்படும் என உத்தரவாதமளித்து யானையை அஸ்ஸாமுக்கு கொடுக்க மறுத்து விட்டது. அந்த தெய்வானை யானை தான் இப்போது திருச்செந்தூரில் பாகனைத் தாக்கியது . மிகுந்த மன அழுத்தத்திலிருந்த இந்த யானையை திருச்சி எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்தபோது சரண் என்பரை தூக்கி வீசித் தாக்கியது.யானைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு முகாமிற்குத் தெய்வானையை அனுப்பி வைக்கலாம் என வனத்துறையினர் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும், இருவரையும் யானை எப்படி, எதனால் தாக்கியது என யானைக்கூடத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்மந்தப்பட்ட துறையின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துச் சொல்ல முடியும்” என்றார். எனவே இனிவரும் காலங்களில் பக்தர்கள் கோயில் யானைக்கு நேரடியாகப் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும்” என, தெய்வானையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் திருக்கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினர். இதனையடுத்து, “பக்தர்கள் யானைக்கு உணவாகக் கொடுக்க விரும்பும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவற்றை தனித்தனிப் பெட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.யானைப் பாகர்கள், அந்த உணவுப் பொருள்களின் நிலையை ஆய்வு செய்து அதில் சுத்தமாக இருப்பதை யானைக்கு வழங்குவார்கள்.” எனத் திருக்கோயில் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் கூறினார். கோவில் யானை என்பது பட்டத்து யானை அது மிதித்து பாகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த நிலையில், கோவில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பரிகார பூஜைகள் அனைத்தும் செய்யப்பட்ட பிறகே கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக கோவில் யானை மரணம் அல்லது கோவில் யானை ஒருவரை கொல்வது என்பது கெட்ட சகுனம் ஆகும்.
கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம் ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் பேட்டி அளித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையுடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை அருகே.. தீக்குளித்த நபர்.. அதிர்ந்த பக்தர்கள்.. என்ன நடந்தது
"திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை அருகே.. தீக்குளித்த நபர்.. அதிர்ந்த பக்தர்கள்.. என்ன நடந்தது "
அவரை காப்பாற்ற வந்த யானைப் பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசு பாலனை கடுமையாக தாக்கியுள்ளது. அப்போதுதான் இந்த மரண சம்பவம் நடந்துள்ளது.
ஆன்மீக சகுனம்: கோயில் யானை மிதித்து பாகன் இருவர் உயிரிழந்த நிலையில், கோயில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பரிகார அனைத்தும் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது ஆன்மீக ரீதியாக என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும்.. இது எதற்கான சகுனம் என்பது ஜோதிடர்கள் கூறுவது என்ன?
பொதுவாக கோவில் யானை மரணம் அல்லது கோவில் யானை ஒருவரை கொல்வது என்பது கெட்ட சகுனம் ஆகும்.
இயற்கை சீற்றங்கள், பாதிப்புகள், மனித சக்திக்கு மீறிய பாதிப்புகளை இது உணர்த்தும்.
ஒழுங்கற்ற நிலை என்பதையே இது காட்டும்.. அதாவது.. உலகில் ஒரு ஒழுங்கு இருக்காது. பெரும்பாலும் இயற்கையில் மாறுபாடு ஏற்படலாம்.. அல்லது மனித இயல்பில் மாறுபாடு அதாவது தீவிரவாத தாக்குதல்கள் போன்றவை ஏற்படலாம்.
விபத்துகள் பெரிதாக நடக்கும்.. ஏன் ஆட்சியாளர்களுக்கும் கூட இதனால் சிக்கல் ஏற்படும்.
கருத்துகள்