பிரபல நடிகர் டில்லி கணேஷ் காலமானார்
1990 முதல் நமக்கு நெரடியாக அந்தி மாலை நேரம் தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை ஹோட்டல் யாத்காரில் சந்தித்து பல நேரம் பேசிக் கொண்டிருந்த காலம் நினைவில் வருகிறது நடிகர் டில்லி கணேஷ். 80 வது பிறந்த தினத்தைக் கடந்து நம்மை விட்டு 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை. பிரிந்துள்ளார். 1980 ஆம் ஆண்டு முதன்முதலாக அவர் நடித்த "மாரியம்மன் திருவிழா" எனும் திரைப்படம் வெளிவந்தது அதுமுதல் பட்டினப் பிரவேசம் அவரைப் பிரபலமாக்கியது சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்றிரவு வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரிழப்பாகும. சென்னை இராமாவரத்தில் உள்ள அவர் இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராமபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு 11.30 மணியளவில் உயிர் பிரிந்தது. கடந்த 1944 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படம் இரண்டாவது படம் நல்ல பெயர் கொடுத்தது. தக்ஷின பாரத நாடக சபா எனும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த போது டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன்
1964 முதல் 1974 வரை இந்திய ராணுவ வான் படையில் பணியாற்றிய நிலையில். குணச்சித்திர வேடம், வில்லன் வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். டெல்லி கணேஷ் உயிரிழப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.குணச்சித்திர வேடங்களில் மட்டுமின்றி நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தனி முத்திரை பதித்தவர் டெல்லி கணேஷ். அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் டெல்லி கணேஷ், கமல்ஹாசனும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் படியுள்ளது.
கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் சத்யராஜ் என தற்போதுள்ள இளம் நடிகர்கள் வரை பல முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார். சென்னை இராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் உடலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கருத்துகள்