தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கைடுகள் நியமிக்கப்பட்டதில் மதுரை கோரிப்பாளையம் ரஷீத் உசேன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் இவர் வழிகாட்டி "கைடாக" அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குச் சுற்றுலா பயணிகளுடன் சென்று வருகிறார். ஆனால், இவர் கொடி மரத்தைத் தாண்டி அம்மன் சன்னதி வரை சென்றதாக தற்போது சர்ச்சை எழுந்தது. எனவே, இதனை காவல்துறையினர் விசாரிக்கதா துவங்கினார்கள்.அங்கிருந்த சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கொடி மரத்தைத் தாண்டி செல்வதாக கேமரா பதிவில் இல்லையாம். ஆனால், இனி வரும் காலங்களில் எந்த மதத்தைச் சேர்ந்த வழிகாட்டியாக (கைடாக) இருந்தாலும் கொடி மரத்தைத் தாண்டி சுற்றுலா பயணிகளுடன் செல்லக்கூடாது என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக கைடுகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாகவும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்தது.
இதுகுறித்து கைடுகளுக்குரிய வழிமுறைகளை பின்பற்றும்படி தெரிவித்திருப்பதாக, சுற்றுலாத்துறையும் தெரிவித்துள்ளது.. ஆனாலும், ஹிந்து அமைப்புகள் அதனால் சமாதானம் ஆகவில்லை.. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறார்கள்.
இதுகுறித்து, ஹிந்து முன்னணி மதுரைக் கோட்டச் செயலாளர் அரசுபாண்டி கூறிய போது, ''பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் காவல் துறை பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாககிறது. கைடுகள் விவகாரத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். முறையான விசாரணை செய்து கவனக்குறைவாக இருந்த காவல் பணியாளர், கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும்'' என அறிவித்திருக்கிறார்கள்.
கருத்துகள்