தமிழ்நாட்டில் மணல் எடுக்கும் அரசு புவியியல் சுரங்கம் மற்றும் கனிம வளங்கள் துறை சார்ந்த குவாரிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட மணல் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்
(அது தான் உண்மை) புகார் எழுந்தது. நிர்ணயித்த அளவை விட கூடுதலாகவும் மணல் அள்ளப்படுகிறது (அதுவும் உண்மை)எனத் தெரிவித்து அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் நேரடியாக ஏற்கனவே சோதணை நடத்தியிருந்தது. தொடர்பாக பத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை யின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென் அமலாக்கத்துறையின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பொதுத் துறைச் செயலாளரால் வழக்குத் தொடரப்பட்டது அது தள்ளுபடியான நிலையில்
தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் கடுமையான கோபம் கொண்ட து , ஊழலைத் தடுக்க வேண்டிய பணிகளைச் செய்யாமல் ஊழலை ஊக்கப்படுத்துவது போல வழக்குப் போட்டதோடு அல்லாமல் அதில் தமிழ்நாடு அரசே மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது (குற்றமே) எனும் நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் 28.11.2025 ல் நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் சார்பில் யாருமே ஆஜராகவில்லை. அதனால் கோபமடைந்த நீதிபதிகள், ‘பொதுத்துறைச் செயலாளர் மறுநாளான நேற்று ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர். அதன்படி இந்த வழக்கு நேற்று 29.11.2024 மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஸ் தாகூர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரது தரப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவிந்தரனும் ஆஜராகி இருந்தார். அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கு ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தும் ஏன் அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “இந்த வழக்கில் யாரும் ஆஜராகாமல் இருந்து விட்டனர். இது தவறாகி விட்டது. எனவே மன்னிப்புக் கோருகிறோம்” எனத் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், “இதே நிலை தொடர்ந்து நடைபெறுகிறது. அரசுக்கு ஆதரவான வழக்கென்றால் அனைத்து ஆவணங்களையும் உடனே தாக்கல் செய்கிறீர்கள். ஆனால் அரசுக்கு எதிரான வழக்கு என்றால் மேல்முறையீடு செய்து விசாரணையைத் தாமதப்படுத்துகிறீர்கள். இது இனிமேலும் தொடரக் கூடாது என கண்டிப்புக் காட்டினர். அப்போது, “மணல் குவாரி வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம்மாவட்ட ஆட்சியர்கள் ED க்கு தகவல்களை வழங்க கடமைப்பட்டுள்ளனர். நாங்கள் இங்கே ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம். என்ற நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம்:- நீங்கள் (தமிழ்நாடு அரசு) தேவையில்லாத பிரச்சினையை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டீர்கள்” என்று நீதிபதி பேலா எம். திரிவேதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், தமிழ்நாடு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோகத்கி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரிடம் கண்டித்துப் பேசினார். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் தற்போது உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள்:- தேவையில்லாமல் மாவட்ட ஆட்சியர்களை காக்க வைத்துத் துன்புறுத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு விதமான பணிகள் உள்ளன. இவ்வாறு அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதில். வியாழன் அன்று நவம்பர் 28, 2024 ல் தமிழ்நாடு பொதுத் துறைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்த சம்மனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஐந்து ரிட் மனுக்களில், மாநில அரசு சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்று கொந்தளித்தது. சட்டவிரோத ஆற்று மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக பணமோசடி விசாரணை தொடர்பாக ஐந்து மாவட்ட ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை இயக்குனரகம் (ED)நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மற்றும் ED சிறப்பு அரசு வழக்கறிஞர் N. ரமேஷ் ஆகியோர் மாநில அரசின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அமர்வில் கூறினர்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், எனவே அரியலூர், கரூர், வேலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட ஆட்சியர்களை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். சம்மனுக்கு மாவட்டங்கள் பதிலளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க, மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் மாதம் 2024 ல் விசாரணையில் பங்கேற்றனர். எனவே, மாநில அரசு மற்றும் ஆட்சியர்கள் இணைந்து தாக்கல் செய்த ஐந்து ரிட் மனுக்களில் எதுவும் விசாரணைக்கு உகந்ததல்ல, மேலும் அவை பயனற்றவையாக மாறிவிட்டன என்று கூடுதல் ஜொலிஸிடர் ஜெனரல் ஏ ஆர் எல் சுந்தரேசன் கூறினார். எவ்வாறாயினும், ரிட் மனுதாரர்களுக்காக யார் ஆஜராகிறார்கள் என்பதை நீதிபதிகள் அறிய விரும்பிய போது, ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர் வாதிகள் சார்பில், அவர் மற்றொரு வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாகவும், ED சம்மன் தொகுப்பில் எந்த அறிவுறுத்தலும் இல்லை என்றும் கூறினார்.அவரது சமர்ப்பிப்புகளைப் பதிவுசெய்து, எந்த ஒரு சட்ட அலுவலரும் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த பிறகு, வெள்ளிக்கிழமை (நவம்பர் 29, 2024) நீதிமன்றத்தில் ஆஜராகி, மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை விளக்குமாறு பொதுச் செயலாளருக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. விசாரணை தற்போது வேகம் எடுத்துள்ளது.
கருத்துகள்