"பஞ்சவனென்னும் பெயர்நிறீயும் வைத்து வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில் வகுத்தும் உளமிக்க மதியதனால் ஒண் தமிழும் வடமொழியும் பழுதறத்தான் ஆராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர் மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும். விசயனை வசுசாபம் நீக்கியும் வேந்தழிச்சுரம் இது பெரியமனச் சங்கப் போக்கியும் |....|மஹாபரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்".. சின்னமனூர் செப்பேடு சாசனமாகும்.". " மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று இன்னும் கூட யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை"
சரியாக 713 வருடங்களுக்கு முன்பு 3 ஏப்ரல் 1311 ஆம் தேதியன்று தான் படையெடுத்து வந்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி அலியான சேனாதிபதி மாலிகாபூர் மதுரையை நோக்கி வர அன்றைய பாண்டிய நாட்டில் (தமிழ்நாடு) நுழைந்தான். ஆனால் அவன் அடித்துச் சென்றது பொன்னும் பொருளும் தான் 96 ஆயிரம் மணங்கு (ஒரு யானை சுமை ஒரு மணங்கு) கொள்ளையடித்துச் சென்றான். அது நமது வளங்கள் என்றால், இப்போது கொள்ளை போகுதே இயற்கை வளம் இதுவும் அதுபோல் தானே !?
அந்த நாட்கள் தான் தற்போது மக்கள் அறியாத கொடுங்கனவாக மாறிய நிகழ்வு. தலைமுறை பல கடந்த மறவாத நிகழ்வுகள் கொண்ட மக்கள் வாழும் பகுதி அழகர் மலை மேலூர் சுற்று வட்டாரங்கள் உள்ளடங்கிய பகுதி, தமிழ்நாட்டின் முதல் உயிர்ப்பன்மைமிக்க பாரம்பரிய ஸ்தலமான அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015.51 ஹெக்டேர் பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள டங்க்ஸ்டன் கனிமத் தொகுதியை அகர்வாலின் வேதாந்தா நிறுவனத்தின் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஏலத்தில் எடுத்துள்ள மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 2015.51 ஹெக்டேர் தொகுதியானது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய ஸ்தலமாக(பயோடைவர்சிட்டி ஹெரிடேஜ் சைட்) அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதியாகும்.
இப்பகுதியின் சூழல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கருதி 21.11.2022 அன்று அரசாணை எண் GO (MS). No.201 தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
அந்த அரசாணையில் இப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அமைவுகள், தமிழி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக்கோயில்கள் இருப்பதாகவும், அரிட்டாபட்டி உயிர்ப்பன்மைமிக்க பாரம்பரிய தலமானது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட 250 பறவைகளும், அழுங்கு, மலைப்பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள உயிர்ப்பன்மைமிக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட புல எண் 379/1, 379/2 ஆகிய பகுதிகளையும் செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நடுவளவு, தெற்கு வளவு, செட்டியபட்டி, சண்முகநாதபுரம், அரிட்டாபட்டி, கூலானிப்பட்டி, எட்டிமங்கலம் மேற்கு, நாயக்கர்பட்டி, மாங்குளம் கிழக்கு ஆகிய கிராமங்களின் வீடுகள், நிலங்களைக் கொண்ட 2015.51 எக்டர் பரப்பளவிலான பகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது.
உயிர்ப்பன்மையமிக்க பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாய் மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை / ஓவா மலை, தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளும் இந்த கனிமத் தொகுதிக்குள் வருகின்றன. கனிமத் தொகுதிக்குள் வரும் பெருமாள்மலையில் புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டுப் பூனை, மரநாய் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.
2018-2019 காலத்தில் இந்திய புவியியல் நிறுவனம் தமிழ்நாடு – புதுச்சேரி அலகினால் மேலூர் தாலுக்காவில் உள்ள மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வள்ளலாப்பட்டி, சில்லிப்பியபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் கனிமவளம் மற்றும் கனிமமயமாக்கல் தொடர்பான ஆய்வுகள் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகள், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, மதுரை மாவட்டம் – பிளாக்-1 – நாயக்கர்பட்டி.) இந்த ஆய்வின் அடிப்படையில்தான் இந்த ஏல நடவடிக்கை நடந்து முடிந்துள்ளது.இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு இக்கனிமத் தொகுதி வழங்கப்பட்ட உத்தரவை மத்திய சுரங்கங்கள் அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கான எந்த அனுமதியோ, இசைவாணையோ வழங்கக் கூடாதென
வலியுறுத்துகிறோம். என பல இயற்கை ஆர்வலர்கள் மக்கள் பிரதிநிதிகள் சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்த நிலையில், அரசே! அரிட்டாபட்டியை அழிக்காதே! என்பது அவர்களின் கோஷம். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டியை சீரழிக்கும் வகையிலான இத்திட்டத்திற்குமத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கண்டிக்கத் தக்கது என இயற்கை ஆர்வலர்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில்.
அரிட்டாப் பட்டி பாதுகாக்கப் பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டா பட்டி , மீனாட்சி புரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரைக் கோவில்கள் ஆகியவையும் உள்ளன.
அரிட்டாப் பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப் பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப் பட்டு விடும். இது குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கு தெரியும் என்ற போதிலும். பல்லுயிர் வாழிடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல். டங்ஸ்டன் ஆலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை நியாயப் படுத்த முடியாது.
எங்கெல்லாம் சுரங்கங்கள் அமைக்கப் படுகின்றனவோ, அங்கெல்லாம் சுற்றுச் சூழல் சீரழிகின்றன என்பது தான் வரலாறு சொல்லும் பாடம் ஆகும். அந்தப் பாடத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். அரிட்டாப்பட்டி மற்றும் அதைச் சுற்றி யுள்ள பல்லுயிர் வாழிடத் தலங்கள் ஈடு இணையற்றவை. அவற்றை எதற்காகவும் தியாகம் செய்ய முடியாது. எனவே, அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப் பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அரிட்டாப் பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்பதால், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் விண்ணப்பித்தாலும் டங்ஸ்டன் சுரங்கத்தை அங்கு அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை போன்ற இயற்கை ஆர்வலர்களின் வேண்டுகோள் ஆகும்.
ஏற்கனவே பல இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுத்த பி ஆர் பி மற்றும் மு. க. அழகிரி போன்ற பல கிரானைட் மணல் என இயற்கை வளங்களை 30 ஆண்டு காலம் கொள்ளை இட்டுச் சென்றது நம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அப் பகுதியில் வாழும் மக்கள் அது குறித்த முன் அறிவு எச்சரிக்கை இல்லாமல் தங்கள் பகுதி இயற்கை வளங்களை அடுத்த தலைமுறை அறியாமல் அழிவுக்கு வழி வகுத்தது தற்போது தான் அவர்கள் உணரும் நிலை, இது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போலானது, அற்பப் பணத்தை வாங்கிக்கொண்டு சொற்பமாக விலைபோன சில மக்கள் இருந்த காரணத்தால் பல கனிம வளங்கள் மூலம் அப் பகுதியில் சில கொள்ளைக்காரர்கள் குபேரராக மாறியதையும் காணும் நிலையில் தற்போது வந்த ஆபத்து அந்த மக்கள் உணரவில்லை என்பது தான் தற்போது நிலை. இதுகுறித்து கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி தருகிறது. அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தமிழகத்தின் வளங்கள், வரலாற்றை ஒருசேர அழிக்கும் முயற்சி.” என மத்திய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரிட்டாபட்டி பகுதியில் சுரங்கம் அமைக்க ஏலம்: மத்திய அரசுக்கு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம், “கீழடி அகழாய்வுக்கு அனுமதி கேட்டபோது தராத மத்திய அரசு அரிட்டாபட்டியை அழிக்க அனுமதி. அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனம் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தமிழகத்தின் வளங்கள், வரலாற்றை ஒருசேர அழிக்கும் முயற்சி.” என மத்திய அரசு உத்தரவுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர்மலைக்கு அருகே 2015.51 ஹெக்டேரில் (சுமார் 5 ஆயிரம் ஏக்கர்) டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது வேதாந்தா நிறுவனம்.
கருத்துகள்