அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு
நடவடிக்கை. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது
தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.வீரமணி பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. நாட்டிலேயே முதன்முறையாக
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 A பிரிவின் படி கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கே.சி.வீரமணி மீது ராமமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்தார் ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது
உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கே.சி.வீரமணி தனது பிரமாணப் பத்திரத்தில் பல பரிவர்த்தனைகளை மறைத்திருப்பதையும், வருமான வரிக் கணக்கில் முரண்பாடுகள் உள்ளதையும் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
கவனக்குறைவால் பிரமாண பத்திரத்தில் தவறு நேர்ந்துவிட்டதாக கேசி வீரமணி சமாளித்து அளித்த காலதாமத விளக்கத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. கேசி வீரமணி பொய்யான தகவல்களை தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதாக திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 A பிரிவின் கீழ், கேசி வீரமணி மீது தேர்தல் அலுவலர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 A பிரிவின் கீழ் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு 6 மாத காலம் சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஜோலார்பேட்டையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.வீரமணி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் க.தேவராஜியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகிருக்கும் ரூபாய் .300 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் 90 சென்ட் பரப்பளவில் உள்ள காலி நிலம் யாருக்கு என்பதில் மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி இருவருமே அந்த நிலத்தைக் கைப்பற்ற முயல்வதால் விவகாரம் முற்றியிருக்கிறது!அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “எனது நண்பர் பிரம்மனந்தாவும், சேகர் ரெட்டியும் சேர்ந்து 7 ஏக்கருக்கு அளவுள்ள அந்த நிலத்தை வாங்கினர். இதில், 70 சதவீதம் பிரம்மானந்தாவுக்கும், 30 சதவீதம் சேகர் ரெட்டிக்கும் சொந்தமானது. அந்த இடத்தில் சேகர் ரெட்டியின் உறவினர் ரிஷிகுமார் கடந்த 5 ஆண்டுகளாக பார்க்கில் பாயின்ட் நடத்தி வருகிறார். ரிஷிகுமார் என்னுடைய கட்சிக்காரர் தான்.
அவர் கட்சி விஷயமாகவும் தொழில் விஷயமாகவும் என்னுடன் அடிக்கடி பேசுவார்.அதற்கெல்லாம் எல்லா ரெக்கார்டும் என்னிடம் இருக்கிறது. தற்போது, அந்த இடத்தை மொத்தமாக அபகரிக்க சேகர் ரெட்டி நினைக்கிறார். பிரம்மானந்தாவிடம் இருந்து அந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்க சேகர் ரெட்டி முயற்சிக்கிறார்.
அந்த இடம் தொடர்பாக எனது வீட்டில் பிரம்மானந்தா இன்று (வியாழக்கிழமை) காலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய செல்போனில் இருந்து ரிஷிகுமாருக்கு தொடர்புகொண்டு பிரம்மானந்தாவுடன் பேசும்படி கூறினேன். அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும் படி அவர்தான் ரிஷிகுமாரிடம் பேசினார். எனக் கூறினார்.முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் 125 A (BNS) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த விசாரணை திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் மகாலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதித்துறை நடுவர், நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கே.சி.வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவருக்கு 2 நாட்களுக்குள் சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது. அதற்கு முன்னர் 654 மடங்கு சொத்து குவிப்பு செய்த வழக்கில்
2 ஆண்டுகளுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வேலூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 21 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதையடுத்து, அவர் கடந்த 01-04-2016 ஆம் தேதி முதல் 31-03-2021 ஆம் தேதி வரை வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கிற்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்