முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநரிடம் இராஜினாமா கடிதத்தை வழங்கினார்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள்


தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோருடன் மும்பை ராஜ்பவனில் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து. முதல்வர் தனது பதவியையும், தனது அமைச்சரவையையும் ராஜினாமா செய்வதை ஆளுநரிடம் கடிதமாக ஒப்படைத்தார்.  இனி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்வானவுடன் புதிய அரசு நாளை அமையும் எனத் தெரிகிறது. மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.


ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் பெரிய சரிவை சந்தித்தன. அப்படி இருக்க இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி இந்த அளவுக்கு  வெற்றி பெற்றது எனும் கேள்வி எழுந்தது. தேர்தல் வெற்றிக்கு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டம் தான் முக்கியமான காரணமென்று பேசப்பட்டது.





அப்படி இருந்தும் அதற்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சி கடந்த 5 மாதத்தில் ஆற்றிய பணிகள் தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது" நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க பாரதிய ஜனதா கட்சி  வேலையைத் துவங்கியது. பாரதிய ஜனதா கட்சி தனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தலில் பணியாற்றும் படி கேட்டுக்கொண்டது.இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் 35 கிளை அமைப்புகளான ஹிந்து அமைப்புகள் தேர்தலுக்காக தீவிரப்பணியாற்றின." 

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பேசும் போது ''சட்டமன்றத் தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு எங்கள் தொண்டர்களை ஒவ்வொரு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் படி கேட்டுக்கொண்டோம். மக்களவைத் தேர்தலில் ஜாதி மற்றும் மதம் மக்களை எவ்வாறு பிரித்தன என்பதைத் தெரிந்து கொண்டோம்'' என்றார்.அதோடு வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொண்டு விவசாயிகள் விளைவிக்கும் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்க மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசு ஏற்பாடு செய்தது. மகாராஷ்டிராவில் வெங்காயம் பிரதான விவசாயமாகும் மேலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு ஜாதித் தலைவர்களை சந்தித்து அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததோடு, ஹிந்துத்துவா கொள்கையை முழு வேகத்தில் மக்களிடம் கொண்டு சென்றது. ஒன்றுபட்டு இருந்தால் பாதுகாப்பு என்றும் பிரிந்திருந்தால் ஆபத்து என்றும் மக்களிடம் பிரசாரம் செய்தனர். இதுவும் பெரும்பான்மை இந்துக்களிடம் எடுபட்டது. ஆனால் மஹாவிகாஷ் அகாடி ஹரிஜனங்கள், முஸ்லிம்கள், கும்பி இன மக்களிடம் மட்டும் அதிக கவனம் செலுத்தி விட்டு பெரும்பான்மையான இதர பிற்படுத்தப்பட்ட மக்களைக் கண்டுகொள்ளத் தவறிவிட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை


பாரதிய ஜனதா கட்சி தன்வசப்படுத்திக்கொண்டது. விதர்பாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவார் என்ற நம்பிக்கையில் விதர்பா பகுதி மக்கள் அதிக அளவு பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தனர். அதோடு அதிருப்தி வேட்பாளர்களிடம் பேசி அவர்களை திரும்பப் பெறச் செய்ததில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. ஆனால் மகாவிகாஷ் அகாடியில் 17 தொகுதியில் அதிருப்தி வேட்பாளர்கள் அல்லது நட்பு ரீதியிலான போட்டி இருந்தது.

இது போன்ற காரணங்களால் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் பாரதிய ஜனதா கட்சிக்கு  இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் மேற்கு மஹாராஷ்டிராவில் வெற்றி பெற்ற அஜித் பவாரும் தனது செல்வாக்கை நிரூபித்திருக்கின்றார். வழக்கமாக தேர்தல் முடிவுக்கு பிறகு சரத் பவார் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். முதல் முறையாக இத்தேர்தல் முடிவுகள் சரத் பவாரை வீட்டிற்குள் முடக்கிப்போட்டிருக்கிறது. இந்த வெற்றியின் பின்னணியில் இராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பங்கையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.முழக்கங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்ப்பது






ஒரு மாதத்திற்கு முன்பு, மஹாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது.

பாரதிய ஜனதா கட்சி, அதன் நட்சத்திரப் பிரசாரகர்களில் ஒருவரான உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை களமிறக்கியது, மேலும் அவர் 'நாம் பிளவுபட்டால், வீழ்வோம்' என்ற சர்ச்சைக்குரிய முழக்கத்தையும் கொடுத்தார்.

இந்த முழக்கங்களுடன் கூடிய சுவரொட்டிகள் மும்பையிலும் வேறு சில நகரங்களிலும் ஒரே இரவில் ஒட்டப்பட்டன, மேலும் மாநிலத்தின் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இதை 'வகுப்புவாத சிந்தனை மற்றும் மக்களின் உணர்வுகளைத் தூண்டக்கூடிய’ நடவடிக்கை என்று குறிப்பிட்டன.




இந்த முழக்கம் சர்ச்சையாகி மூன்று நாட்களுக்குப் பிறகு, நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத் தலைமையகத்தில் அது பற்றி விவாதிக்கப்பட்டது.

அங்கு எடுக்கப்பட்ட முடிவு தெளிவாக இருந்தது. மஹாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி எந்த வகையிலும் ஆட்சியை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு.


இதுகுறித்து பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, "சில அரசியல் சக்திகள், ஜாதி மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் இந்துக்களைப் பிரிக்க முயற்சி செய்வார்கள். நாம் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதாது, அதை எதிர்த்துபா போராடவும் வேண்டும். என்ன நடந்தாலும் நாம் பிரிந்துவிடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்றார்.மஹாராஷ்டிரா துணை முதல்வரும் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தேர்தலுக்கு முன்பு, "வாக்கு ஜிகாதிகள் மற்றும் அராஜகவாதிகளை எதிர்த்துப் போராட நாங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உதவியைப் பெற்றுள்ளோம்" என்று கூறியிருந்தார்.




தேவேந்திர பட்னாவிஸ் ‘ஆர்எஸ்எஸ் கோட்டை’ என விவரிக்கப்படும் நாக்பூரைச் சேர்ந்தவர்.அவருடைய தந்தை கங்காதர் பட்னாவிஸ் ஒரு தன்னார்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமேலவை உறுப்பினராகவும் (MLC) இருந்தவர். முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, கங்காதரை தனது 'அரசியல் குரு' என்று விவரித்துள்ளார்.

ஹரியாணாவில் செய்தது போலவே மஹாராஷ்டிரா தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி ஒரு விஷயத்தைச் செய்தது. ஹரியாணாவில் தேர்தல் பொறுப்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பிலிருந்து வந்த தர்மேந்திர பிரதானிடம் ஒப்படைக்கப்பட்டது.


அதேபோல மஹாராஷ்டிராவின் தேர்தல் பொறுப்பு, முன்னாள் அமைச்சர்கள் பூபேந்திர யாதவ் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மஹாராஷ்டிரா போன்ற ஒரு வளமான மற்றும் மிகப்பெரிய மாநிலத்தில் பிரசாரங்களை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் பூபேந்திர யாதவ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு உள்ளது” என்று கூறுகிறார்.பூபேந்திர யாதவ் ஒரு வழக்கறிஞர், ‘ஆர்எஸ்எஸ் வழக்கறிஞர்கள் பிரிவு’ என அழைக்கப்படும்


அகில இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். பூபேந்திர யாதவுக்கு முதல்முறையாக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பிற்குள் ஒரு பதவியை வழங்கியவர் நிதின்கட்கரி தான் என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.”நிதின் கட்கரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், 2010-ஆம் ஆண்டு பூபேந்திர யாதவுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.”  இது தவிர, ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் முன்னாள் மேற்கு பிராந்திய தலைவர் அதுல் லிமாயேவிடம், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் பி.எல்.சந்தோஷ் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டது. அதாவது பாரதிய ஜனதா கட்சி  மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஒருங்கிணைப்பாளராக செயல்பட அவரிடம் கோரப்பட்டது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவரும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மிகவும் நெருக்கமானவருமான நிதின் கட்கரியின் வீட்டுக்குச் சென்று தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து பெற்றார்.

ஆனால், 2014, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில், நிதின் கட்கரிக்கு குறைவான பொறுப்புகளே வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை மகாராஷ்டிராவில் அவரின் தேவை மிக அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் அவர் 70 க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளை நடத்தினார்.

"பாஜகவுக்கு மிக முக்கியமான பங்கிருக்கும் வகையில், எல்லோரும் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்பதே மூத்த ஆர்எஸ்எஸ்-பாஜக வாக்காளருக்கான செய்தியாக இருந்தது. அதன் காரணமாக தனித்த கட்சியாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்களிப்பை முந்திய ஆர் எஸ் எஸ் செயல்திட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வலுவான நிலையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...