சமூகத்தில் வழக்கறிஞர்கள், நீதித்துறையின் நம்பிக்கையை கொல்லும் வகையில், ஊழலை ஊக்குவிக்கக்கூடாதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீராம் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், அரசியலமைப்பு தினம், மற்றும் புதிய வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசியது:
சமூகத்தில் வழக்கறிஞர்கள், நீதித்துறையின் நம்பிக்கையைக் கொல்லும் வகையில் ஊழலை ஊக்குவிக்காதீர்கள். கட்சிக்காரர்களின் இரகசியங்கள் நிழலுக்குக் கூடத் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணர்வுகளுக்கு பலியாகாமல் திறம்படச் செயலாற்ற வேண்டும். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது கல்வியை வழங்க அணைவரும் முன்வர வேண்டுமெனத் தெரிவித்தார்.
கருத்துகள்