முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துறவறம் துறந்த சைவ ஆதீனம் பதவியை விட்டு விலக இனி நிர்பந்தம் கூடும்

தமிழ்நாட்டில் போலிச் சாமியார் அன்னபூரணி மூன்று நான்கு திருமணம் செய்தால் யாரும் கவலைப்படப்போவதே இல்லை



ஆனால் உண்மையில் இல்லறத்தில் இருந்து துறவு பூண்டு மடாதிபதிகள் திருமணம் செய்வது ஹிந்து மத தர்மத்தின் படி தவறான நிகழ்வு அவர் சன்யாசம் பெற்ற சத்தியம் மீறிய நிகழ்வாகும். "அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்." ..இது வள்ளுவர் வாக்கு

தமிழ்நாட்டில்  சைவ மடங்களில் இருக்கும் ஆதீன கர்த்தாக்களும் வைணவ ஜீயர்களும் மிகவும் ஒழுக்கமாகத் தங்கள் வாழ்வைப் பேண வேண்டும் என்பது தான் அவர்களின் இறையருள்.

அதற்காகத்தான் அவர்களுக்காக அத்தகைய தலைமைப் பீடங்கள் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவ  மதத்தில் வாட்டி கணில் போப்பையும் அப்படித்தான் பார்ப்பார்கள்! பெரும்பாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது ஆகம விதி! இதில் வைஷ்ணவ ஜீயர்கள் ஒருவேளை திருமணமாகினாலும் கூட இருக்கும் வேலையை விட்டு‌ விட்டு ஜீயராக மாறினால் பின்னர் குடும்பத்திற்கும் செல்ல மாட்டார்கள். அவர்கள் வழிமுறைகள் இப்படியான பாரம்பரியம் உண்டு.

ஆனால் சைவ ஆதீனங்களில் உள்ள மடாதிபதிகள் திருமணம் செய்யக்கூடாது! ஒருவேளை திருமணம் செய்து கொண்டு விட்டால் அந்த ஆதீனத் தலைமைப் பீடத்திலிருந்து வெளியேற வேண்டும்! அதுதான் நடைமுறை! அதை விட்டுவிட்டு ஊருக்கு உபதேசமும் செய்து  கொண்டு ஆசிகளையும் வழங்கிக் கொண்டு திருமணமும் செய்து கொள்வோம் என்று சொல்வது மத அடிப்படை ஆச்சாரங்களுக்கு எதிரானது! அது தூய்மையானது அல்ல!  பக்தி மார்க்கத்திற்கு ஆரோக்கியமானதுமல்ல !புனிதமுமல்ல!


திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் போன்றவர்களுடைய வரலாறுகள்  பெரிது !  முன்னாள் திருவாடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி திருவண்ணாமலை பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான ஆதீன மடாலயம் ஆகியவர்களோடு பல விஷயங்களைக் கலந்து பேசலாம்! வீர சைவமோ சைவ ஆதீனங்களான அது திருவாடுதுறை ஆதீனமோ, தருமபுர ஆதீனமோ, இல்லை காஞ்சிபுரம் துணை ஆதீனமோ, சூரிய நாராயண கோவில் ஆதீனமோ, கோயம்புத்தூர் போரூர் ஆதீனமோ, குன்றக்குடி ஆதீனமோ, கோவிலூர் நகரத்தார் ஆதீனமோ இவை யாவும் மேற்சொன்ன ஆகம விதிமுறைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடித்து வந்தவவை தான்.


ஆதீனம் மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள், திருமணம் செய்த பெங்களூர் ஹேமாஸ்ரீ மடத்தின் ரூபாய் 1500 கோடி சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்யத் திட்டமிட்டுள்ளதாக சூரியனார் கோயில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் தெரிவித்துள்ளார்.சூரியனார் கோயில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் கூறுகையில்,  பெங்களூர் சென்று அங்கு ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி பதிவு திருமணம் நடந்துள்ளது.

எனினும் .தற்போது சூரியனார் கோயில் மடாதிபதி, ஆதீனமாக இருந்து கொண்டே பக்தையை திருமணம் செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர்களது திருமணம் குறித்து சூரியனார் கோயில் காரிய ஆதீனம் சுவாமிநாத சுவாமிகள் கூறுகையில், துறவறத்தில் உள்ளவர்கள் இல்லறம் நோக்கிச் செல்வது ஏற்புடையதல்ல, பெங்களூர் பெண் மீது திருவிடைமருதூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

பெங்களூரைச் சேர்ந்த ஹேமா ஸ்ரீ சூரியனார் கோவில் ஆதீன மடத்தின் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்துள்ளார்.

இன்று சைவ ஆதீனங்களைக் கேவலப்படுத்தும் வகையில் நடிகைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி போய் ஈக்வைடா போல கைலாசா என்னும் இடத்தில் தனி நாடு என்று சொல்லிக் கொண்டு ஏமாற்றித் திரியும் அல்லது தலைமறைலாகவோ அல்லது காலமாகியோ போன நித்தியானந்தா போன்றோ, போலியான அண்ணபூரணி போலவோ உருவாக்கப்பட்டதல்ல இந்த ஆதீனங்கள். அதற்கென ஒரு தனித்துவமான வரலாறு உண்டு.

இந்துக்களின் எட்டு உப பிரிவுகளில் சாக்கிய காணாபத்திய வழிகளை விட இருபெரும் பிரிவுகள் சைவம் வைஷ்ணவம் இரண்டிலும் தலைமைப் பண்புள்ள வைணவ ஜீயர்களும், சைவ  மடாதிபதிகளும் அருள் வழங்கக் கூடிய புனிதர்களாக எதிலும் பற்றற்று உலக தேச சேமங்களுக்காக பிரார்த்தனை செய்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான்ஆகம நேறியாகும் என்பதே நாம் சொல்ல வருவது! கௌமாரம் சார்ந்த மடம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர்  அருகில் தமிழ்நாட்டில் உள்ள நால்வரால் துவங்கிய மற்றும் சேதுபதி உள்ளிட்ட மன்னர்கள் உதவியில் துவங்கி சமயத் திருப்பணி நடந்து வரும் 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் உள்ளது.



2022-ஆம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமஹா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (வயது 47) என்ற பெண்ணை கடந்த  அக்டோபர் மாதம் 10- ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வெளியாகி அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறித்து சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ பதிவு செய்து  வெளியிட்டுள்ளதில் அவர் கூறியுள்ளதாவது:-

"நான் கர்நாடகா மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய அவரை டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக ஹேமாஸ்ரீயை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன். நான் எதையும் மறைக்கவில்லை.

இதற்கு முன்பு சூரியனார் கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர். (ஆனால் இவர் போல ஆதீனம் ஆன பிறகு திருமணம் செய்தவர்கள் அல்ல)  கர்நாடகாவில் வீரசைவ மடம், வைணவ மடம், பண்டிட் ரவிசங்கர் ஜி மடம், ராஜராஜேஸ்வரி பீடம் போன்ற மடங்கள் உள்ளன. ஆனால் சைவ மடம் அங்கு இல்லை. இதனால் சைவ மடம் கட்டுவதற்கான ஏற்பாட்டை செய்தோம். இதற்கு பிடரி நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ வழங்கினார். மடம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. சூரியனார்கோவில் ஆதீனத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை (என இவராகக் கூறுகிறார்) இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.                                                   -விளம்பரம்-                  ‌    

                          -விளம்பரம்-                        இந்த நிலையில் காவி வஸ்திரம் வாங்கி துறவு பூண்டதன் விளைவாக ஆதீனகர்த்தராக பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும், 54 வயதாகும் சூரியனார் கோவில் ஆதீனம் திடீரென திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதற்கு தீர்வு  மூத்த ஆதினங்கள் ஒன்று கூடி இவரை மடத்திலிருந்து விலக்கி வைத்து புதிய ஆதீனம் தேர்வு செய்து நல்ல முடிவு காண வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.                வீர சைவர் என்றால் தமிழ்நாட்டில் ஆண்டிப்பண்டாரங்கள், இதில் பூக்கட்டும் பண்டாரம் மற்றும் கிராமக் கோவிலில் சங்கு சிகண்டி அடித்து வழிபாடு செய்யும் தனிக் குடும்பமாக வாழும் பண்டாரங்களும் உண்டு அதில் கர்நாடகாவில் அதிகமாக வாழும் சிவ லிங்கம் வழிபாடு செய்யும் லிங்காயத்துக்கள்     ஆகிய பிரிவு சில சைவ மடத்திற்கும்  மற்றும் சைவ வெள்ளாளர் (பிள்ளை) மரபில் வந்த மதுரை திருஞானசம்பந்தர் மடம் உள்ளிட்ட பிள்ளை ஆதீனமும் இறு வேறாக உண்டு ஆனால் இரண்டும் சிவநெறி கலந்த சைவ வழிபாடு தான் நோக்கம். சூரியனார் கோவிலுக்கு ஓர் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனம் சிவக்கொழுந்து தேசிகர் என்னும் பண்டார சிவாக்கிர யோகியால் தோற்றுவிக்கப்பட்டது. இவருக்கு முன்னரும் இந்தக் கோவிலுக்குப் பரம்பரை உண்டு. 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பண்டார சன்னிதி பரம்பரை இன்றும் தொடர்கிறது. சைவ சித்தாந்தப் பரம்பரைகள் இரண்டு. ஒன்று தருமபுர ஆதீனப் பரம்பரை. மற்றொன்று இந்தச் சிவாக்கிர யோகிகள் பண்டாரம் வழி பரம்பரை. சிவாக்கிர யோகிகள் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழிலும் வடமொழியிலும் நூல்கள் பல இயற்றியவர். இந்தச் சிறப்புப் பற்றி இவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களை இவரது பெயரால் பரம்பரை எனக் குறிப்பிடலாயினர். இவருக்குச் சிவக்கொழுந்து சிவாசாரியார் என்ற பெயருமுண்டு. இவர் மட்டுமே சைவ வெள்ளாளர் மரபில் வந்தவர். இந்தப் பரம்பரைக்கு திருக்கயிலாய பரம்பரை - தரும்புர ஆதீனப் பரம்பரையும் இப்பெயரால் குறிப்பிடப்படும். கந்தனிடம் உபதேசம் பெற்றதால் 'கந்த பரம்பரை' வாமதேவர் மூலம் நிலவுலகில் தோன்றியமையால் வாமதேவ பரம்பரை, சதாசிவம் பரம்பரை - சதாசிவ சிவாசியார் உபதேசத்தால் பெற்ற பெயர் .இரண்டு பரம்பரைக்கும் உபதேசம் பெற்ற சந்தான வரிசை வேறு. இவர்கள் வாழையடி வாழையாக அவரவர் குருவிடம் ஞான உபதேசம் பெற்றவர்கள்.துறவறம் பூண்டவர் குறித்து சங்க காலக் கவிதை இது 

எட்டுத்தொகை நூல்களாக உள்ள புறநானூற்றில் 185 லிருந்து 195 வரையிலான பாடல்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தங்களைத் தேடுகிற தத்துவப் பாடல்களாகும். இவை அனைத்தும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையில் அமைந்துள்ளது. ‘எரிந்து இலங்கு சடைமுடி முனிவர்/புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று’ என்று பொருண்மொழிக் காஞ்சிக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பொருள் தருகிறது. இப்பகுதியிலேயே எல்லாரும் அறிந்த ஔவையின் பின்வரும் பாடல் இடம்பெறுகிறது. ‘நாடா கொன்றோ காடா கொன்றோ/அவலா கொன்றோ மிசையா கொன்றோ/எவ்வழி நல்லவர் ஆடவர்/அவ்வழி நல்லை வாழிய நிலனே’.                                                               -விளம்பரம்-                              

                             -விளம்பரம்-

இந்தப் பாடலும்  தத்துவக் கருத்தை கூறுகிறது: ‘தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி/வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்/நடுநாள் யாமத்தும் பகலும்/துஞ்சான்/கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்/உண்பது நாழி உடுப்பவை இரண்டே/பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே/செல்வத்துப் பயனே ஈதல்/துய்ப்பேம் எனினே தப்புந பலவே’. இதன் விளக்கம், தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதல் அன்றித் தமக்கே உரித்தாக ஆட்சிசெய்து வெண்கொற்றக் குடையால் நிழல்செய்த அரசர்க்கும் இடையாமத்தும் நாள்யாமத்தும் துயிலாது விரைந்த வேகம் கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழித் தானியமே. உடுக்கப்படுபவை அரையாடை, மேலாடை என இரண்டே. இவை போலப் பிற தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். ஆதலால், செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தைத் தானே நுகர்வோம் என்று கருதினால், அது பல தவறான வழிகளிலே இட்டுச்செல்லும். என்பதே



இதில் பொது நீதி யாதெனில்:- அரண்மனையான வீட்டை வெறுத்து ஆசை துறந்து வெளியேறி துறவறம் போன சித்தார்த்தன் மீண்டும் மக்களின் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தான் புத்தனாக.  வேண்டாமென்று வாழ்வில் உதறி நடப்பதை காலம் ஏதோவோர் வழியில் ஏதோவோர் ரூபத்தில் திருப்பித் தந்தே தீரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...