இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹுமானுக்கு எதிராகப் பரவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைத் தடுக்க வழக்கறிஞர் அறிவிப்பு
இசையமைப்பாளர் ஏ.ஆர் .ரஹுமான் இது இயற்பெயரான அல்லா இரக்கா இரஹுமான்,
என்பதன் சுருக்கம் 1967 ஆம் ஆண்டில் சென்னையில் பிறந்தார், இந்தியத் திரைப்பட புகழ் பெற்ற இசையமைப்பாளராக உருவாகும் முன். மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தில் அறிமுகமானார்.
உண்மை பெயர் அருணாசலம் சேகர் திலீப்குமார் தாயார் கஸ்தூரி. அக்கா ஏ. ஆர். ரைஹானா. அக்காமகன் ஜி. வி. பிரகாஷ்குமார் (நடிகர்). தங்கை பாத்திமா, இஷ்ரத் மற்றும் சகலை ரஹ்மான் (நடிகர்). இசைப் பயணத்தை 1985 ஆம் ஆண்டில் துவங்கிய குடும்பம் இசை சார்ந்தது.தந்தை ஆர். கே. சேகர் மதம் மாறிய இஸ்லாமியர், மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றியவர். சிறு வயதில் தந்தையை இழந்தார். குடும்பத்தில் வருமானமில்லாத நிலையில் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்ட வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசையை கற்றார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்றக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார்.
டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர் உள்ளிட்ட பல கலை வல்லுநர் 2009 ஆம் ஆண்டு 81 ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மேடையில் தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என இவர் அடிக்கடி உச்சரிக்கும் மதம் சார்ந்தே பாடினார் இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மேற்கத்திய இசையைப் பயின்றவர். 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூஷன் விருது . பெற்றவர்
ஆசியாவின் மொசார்ட் என அழைக்கப்படுகிறார் இவரது மனைவி சமீபத்தில் விவாகரத்து கோரிய ஷெரினா பானு எனும் சாய்ரா பானு இவர்களுக்கு காதிஜா, கீமா ரஹ்மான்யா, அமீன் என மூன்று பிள்ளைகள். முத்து திரைப்படம் ஜப்பானில் வெற்றி பெற்றதால் புகழ் உலகமெங்கும் பரவியது. 2012 ஆம் ஆண்டில் இவர் வாங்கிய ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 30ஆண்டுகளை நெருங்கும் நேரத்தில், சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
பின்பு ஏ.ஆர் ரஹ்மானும், “எங்களது திருமணப் பந்தம் 30 வயது எட்டுமென்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகச் சென்றுவிட்டது” என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோகினி டே என்பவர் அவரது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார்..
இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் பிரிவையும் இவரது பிரிவையும் தொடர் படுத்தி பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இதையடுத்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், அதற்கும் எங்கள் கட்சிக்காரருக்கும் எந்த சம்மதமும் இல்லை என விளக்கமளித்தார். அதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், தனது தந்தை பிரிவு குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்திருந்தநிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் அவரது திருமண பிரிவு குறித்து அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதை நீக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மானின் வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டிஸில், “ஏ.ஆர்.ரஹ்மான் திருமணப் பிரிவு குறித்த உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் கட்டுரைகள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
அதனால் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளையும் சில கற்பனையில் அளித்த பேட்டிகளையும் நீக்க வேண்டும்” என சம்மந்தப்பட்ட யூட்யூப் பதிவர்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு சம்மந்தப்பட்ட வீடியோக்கள், பதிவுகளை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்