புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக பிரமுகரின் வீடுகளில் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை.
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொருளாளர் முருகானந்தம் வீட்டிலும் அவருடைய சகோதரர் பழனிவேல் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அரசு கட்டடங்களில் ஒப்பந்தப் பணி மேற்கொண்டது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 7 வாகனங்களில் 15 அமலாக்கத் துறை அலுவலர்கள் சென்னையிலிருந்து வந்தவர்கள் இன்று காலை 7.30 மணி முதல் புதுக்கோட்டையிலுள்ள முருகானந்தம் வீட்டிலும் கடுக்காகாட்டில் உள்ள முருகானந்தத்தின் சகோதரரும் அதிமுக நிர்வாகியுமான பழனிவேல் வீட்டிலும் ஆலங்குடியில் பழனிவேலுக்குச் சொந்தமான வேறு வீட்டிலும் சோதனைஞ நடத்தப்பட்டது. புதுக்கோட்டை சார்லஸ் நகர் பகுதியில் பழனிவேல் (வயது 50) அதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலாளர். மற்றும் ஒப்பந்ததாரர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வேலுமணி, மற்றும் சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பாஜக முருகானந்தமும் சார்லஸ் நகரில் வசிக்கிறார். இவர் புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை(DRDA)யில் வேலை பார்த்தவர். அதிமுக ஆட்சியில் இவர் விருப்ப ஓய்வு பெற்று விட்டு தம்பியுடன் சேர்ந்து ஒப்பந்தப் பணி செய்து வந்தார். அப்போது இவர்கள் மஞ வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக கூறப்படுகிறது. DRDA வில் வேலை பார்த்ததால் முருகானந்தம் தமிழ்நாடு முழுவதும் உள்ள DRDA அலுவலர்களிடம் நெருக்கமாக இருந்து ஒப்பந்ததாரர்கள் பெற்றுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் முருகானந்தம் மட்டும் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு பாஜக மாவட்ட பொருளாளர் பதவியும் வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடந்தது.
முருகானந்தத்தின் சொந்த ஊர் கறம்பக்குடி அருகிலுள்ள கருக்காகாடு. அங்குள்ள வீட்டுக்கு வந்த வருமான வரி அலுவலர்கள் சோதனையை விரைவில் முடித்துவிட்டுக் கிளம்பியதாகவும் அப்போது கூறப்பட்ட
நிலையில் இன்று முருகானந்தம், பழனிவேல் ஆகிய இருவர் வீடுகளிலும் அமலாக்கத்துறை யினர் (ED) சோதனை நடந்துவது குறிப்பிடத்தக்கது 20 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள முருகானந்தம், பழனிவேல் ஆகியோர் வீடுகளிலும், கருக்காகாடு, மற்றும் ஆலங்குடி ஆகிய இடங்களிலும் இந்த சோதனையை நடத்தினார்கள். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகத் தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அது தொடர்பாக இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வேலுமணி, சேலம் இளங்கோவன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக ஆவணங்கள் கிடைக்கிறதா என்ற அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அரசியல் அறிந்த பலர் பரபரப்புடன் பேசும் நிலையில் அமலாக்கத் துறை வழங்கும் தகவல் தான் அதை உறுதிப்படுத்தும்.
கருத்துகள்