சென்னை கிண்டி அரசு பலநோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில்
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சையில் இருப்பவருக்கு சரியாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை
என அந்தப் பெண்ணின் மகன் விக்னேஷ்வரன் என்பவர் மருத்துவமனையில் நாளடைவில் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று 13.நவம்பர்.2024 காலை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகநாதன் பணியிலிருந்தபோது டாக்டரிடம் விக்னேஷ்வரன் என்பவர், `என்னுடைய அம்மாவுக்கு ஏன் இன்னும் குணமாகவில்லை. ஹாஸ்பிட்டலில் சரியாகவே சிகிச்சை அளிப்பதில்லை’ எனந் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் அங்கிருந்தவர்கள் விக்னேஷ்வரனை சமரசப்படுத்த முயன்றனர். அதைக் கடந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜி ஜெகநாதனைக் குத்தியதில் நிலை குலைந்தவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். டாக்டரைக் குத்தி விட்டு தப்பியோட முயன்ற விக்னேஷ்வரனை
அங்கிருந்தவர்கள் துரத்திப் பிடித்த பின்னர் உதைத்தனர். படுகாயமடைந்த டாக்டரை மீட்டு அவருக்கு முதலுதவிச் அளிக்கப்பட்டு அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு இணை இணை ஆணையர் சிபிச்சக்கரவர்த்தி தலைமையில் காவலர்கள் வந்து விக்னேஷ்வரனை காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர்.
தொடர்ந்து என்ன நடந்தது என அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த டாக்டரிடம் நலம் விசாரித்தார். அதோடு டாக்டரை கத்தியால் குத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்தச் சூழலில் அரசு மருத்துவர்கள், பணியின் போது தங்களுக்கு பாதுகாப்பில்லை என வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், ``கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அரசு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்" என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.டாக்டர் சிவபாலன் இளங்கோவன் கருத்து படி டாக்டர். பாலாஜி மிகவும் நேர்மையான மருத்துவர். ஓமாந்தூரார் பல்நோக்கு அரசினர் மருத்துவமனையில் அவர் பணி புரிந்தபோது, அங்கு அவர் மட்டுமே ஒரே ஒரு Medical Oncologist. சரியாக காலை 8 மணிக்கு வந்துவிடுவார், மாலை செல்வதற்குள் குறைந்தது நூறு நோயாளிகள் வரை பார்த்திருப்பார். ஒரே நாளில் எண்பதில் இருந்து நூறு நோயாளிகள் அதுவும் Oncology ல் பார்ப்பது அத்தனை எளிதானதல்ல. ஒரே ஒரு மருத்துவர் என்பதால் விடுப்பும் எடுக்க மாட்டார், அத்தனை பொறுப்பான மருத்துவர். என்கிறார்.
மருத்துவத் துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் மக்களும் இதை அறியாமல் மருத்துவர்கள் மீதே கோபப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மருத்துவத்துறையின் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி எச்சரிக்கையாக இந்தச் சம்பவத்தை பார்க்க வேண்டும். சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு மருத்துவத்துறையின் போதாமைகளை சரி செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மருத்துவர்களும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு பணியாளர்கள் என்பதை உணரவேண்டும்.மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை ஆணையர் அருண் ஆய்வு செய்த பிறகு செயதியாறர்களிடம் தெரிவித்ததாவது:- டாக்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கவில்லை. முதல்முறையாகத்தான் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் நிலவும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. டாக்டர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்வோம். சென்னையில் உள்ள நான்கு மருத்துவமனைகளிலும் தனித்தனி காவல் நிலையங்கள் உள்ளன.
டாக்டரை கத்தியால் குத்திய நபரின் தாயார் ஆறு மாதங்களாக இங்கு தான் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் செய்த நபர் தினமும் இங்கு வந்து சென்றார். நேற்று கூட டாக்டரிடம் பேசியுள்ளார். நடந்தது கொலை முயற்சி. இவ்வாறு அருண் கூறினார். இதில் யாரும் பேசாத சில உண்மைகள் உண்டு ஆனால் சில பத்திரிகைகள் பேசத் தயங்கும் நிலையில் சி மூத்த பத்திரிகையாளர்கள் சமூக சூழலியல் குறித்து பேசும் நிலை உள்ளது. நோயாளியை மன உளைச்சலாக்கி அந்த இளைஞனின் கையில் கத்தி பிடிக்க இந்த டாக்டரும் ஒரு வகையில் காரணம் என்று தோன்றுகிறது . பணம் பேரம் நடந்த நிகழ்வுகள் ஒரு புறம் நோயாளியிடம் அன்பாக பேச வேண்டும் . நோட்டை தூக்கி மூஞ்சியில் அடித்தால் என்ன செய்வது. மருத்துவர் பணி அரசு பணி மக்கள் பணி மருத்துவம் செய்த மருத்துவர் பாலாஜி மேல் அப்படி என்ன கோவம்?.. 7 முறை கத்தியால் குத்தியது ஏன்?. என்ற எழு வினா ஒரு புறம் சிகிச்சையின் போது என்ன டாக்டர் என்ன செய்தார்? - மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் தற்போது பரபரப்பு பேட்டியை காணமுடிகிறது குற்றம் செய்த விக்னேஷின் தாய் பிரேமா கூறுகையில்,
அரசு மருத்துவமனையில் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை. மூன்று லட்சம் பேரம் பேசினார் மருத்துவர் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் போடப்பட்ட நான்கு ஊசி காரணமாக எனது உடல்நிலை மிக மோசமாக மாறியது. அரசு மருத்துவமனையில் தொடர்ந்து எங்களை அலைக்கழிக்க வைத்தார்கள். அரசு மருத்துவர்கள் எங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், தரக்குறைவாகப் பேசினார்கள். இதனால் விரக்தி அடைந்து எனது மகன் இவ்வாறு செய்திருப்பார்” என அவரது தாயார் பரபரப்புக் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். மருத்துவர் தரப்பில் மட்டுமே நியாயம் பேசும் ஊடகங்கள் அவர்கள் தவறுகள் குறித்தும் பேச வேண்டிய நேரமிது என்பதை சமுக கடமையுடன் அணுகவேண்டும்.
கருத்துகள்