சென்னையில் நடந்த பிராமணர்கள் பாதுகாப்பு மாநாட்டில்
இந்தக் கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பிராமணர்களை இழிவுபடுத்தும் திமுகவினர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பாஜகவில் இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மகளும், லதா ரஜினிகாந்த் சகோதரி மகளுமான மதுவந்தி, அமரன் திரைப்படத்தில் அவ்வளவு பெரிய ராணுவ வீரரை பிராமணர் என காட்டுவதற்கு உங்களுக்கு என்ன கேடு வந்துவிட்டது? என கேள்வி எழுப்பினார்.மேலும் இக்கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலடியாக அதே ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பாக 'திராவிடர் எழுச்சி- வருணாசிரம- மனு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னையில் ஒரே நாளில் பிராமணர்கள் மற்றும் திராவிடர் கழகத்தின் போராட்டம் நடத்தியதால் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மககள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும் போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால் தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியலை. எனவும் திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க. ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்றும் பேசினார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரப்பிரதேசம் , தெலுங்கானா மாநிலத்திலும் சர்ச்சையானது வெடித்தது. அதைத் தொடர்ந்து தமது பேச்சு குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தாம் அந்தப்புரம் குறித்து பேசவே இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். மேலும் ஆந்திரா அரசியலில் ஈடுபடுவே; தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ள தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் பிராமணர் அல்லாதவர்கள் தகுதி அடிப்படையில் அரசு பதவிக்கு வந்ததால் லஞ்சம் வாங்குகின்றனர் என்றும் நடிகை ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்ததும் தற்போது சர்ச்சையானது. இவர் மீது தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு, தெலுங்கு மொழி பேசும் மக்களை இழிவாகப் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தனர். மேலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் நடிகை கஸ்தூரியை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல சென்னையிலும் நடிகை கஸ்தூரி மீது தமிழர் முன்னேற்றப் படை தலைவர் எனக் கூறி வீரலட்சுமி என்பவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் மதுரையிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இவர் நடிகை என்ற நிலை கடந்து சமீப காலமாக பல வகையான அறிவற்ற விவாதங்கள் முன்வைத்து வருகிறார் இவருக்கு பின் புலமாக மயிலாப்பூர் பகுதி பிரபல நபர் ஒருவர் உள்ளார், அவர் சிலரை தியானம் செய்ய வைத்து பல கட்சிகளும் சில மடமும் தனது கண் அசைவில் நடப்பதாக பேசும் தற்பெருமை கொண்ட நபராவார்.
நடிகை கஸ்தூரியின் கடந்த கால நிலை என்ன அவருக்கு யாரிடம் இருந்து பணம் எப்படி வந்தது என்பது எல்லாம் இங்கு உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் மதுரை தஞ்சாவூர் என 400 ஆண்டு காலம் அரசாட்சி செய்த இனம் குறித்து இவர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பேசியதை வழக்கறிஞர் கே எஸ் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது மன்னிப்புக் கோரினார்
இது அல்லாது இவருக்கு எந்த அரசியல் ஞானம் இல்லாமல் அதிகப்பிரசங்கி போல பேசுவது தவறு என உணர வேண்டும் அதற்கு பல இடங்களில் நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும் அதுவே இவர் திருந்த வாய்ப்பாக அமையும்.
கருத்துகள்