மெட்ராஸ் மாகாண கால ஒப்படைவு நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்த சி.எஸ்.ஐ., திருச்சபை நிர்வாகிகள் மீது சி.பி.ஐ.வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் சுதந்திர காலத்திற்கு முன் இருந்த பிரித்தானிய அரசின் ஒப்படைவு நிலத்தை மோசடி செய்த சி.எஸ்.ஐ., மதுரை- ராமநாதபுரம் திருமண்டல சபை நிர்வாகிகள் சிலர் மீது சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் தேவசகாயம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மாநில அரசின் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குனர், மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர், தல்லாகுளம் காவல் ஆய்வாளர்,
சர்ச் ஆஃப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷன் (சிஎஸ்ஐடிஏ),
சிஎஸ்ஐ மதுரை-ராம்நாடு மறைமாவட்டம், ஷ்ரேயன்ஸ் அறக்கட்டளை,
IIFL Realty Limited, சி.பெர்னாண்டாஸ் ரெத்தினராஜா., எல்.ஜான்சன்.,
மாநில நில நிர்வாக ஆணையர், ஆகியோரை எதிர் தரப்பினராகச் சேர்க்கப்பட்டு தாக்கல் செய்த பொதுநல வழக்கு. WP(MD)10037/2024 ன் படி
மதுரை தல்லாகுளம் பகுதியில் 31.10 ஏக்கர் நிலத்தை 1912 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிருஸ்தவ மிஷனரியின் 'அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர்ஸ் பார் பாரின் மிஷன்ஸ் (ABCFM) வசம் அப்போது நம் நாட்டை ஆட்சி செய்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி சார்ந்த மெட்ராஸ் மாகாண நிர்வாகத்தால் அனுபந்தம் விரைவு நிபந்தனைகளுடன் ஒப்படைவு செய்யப்பட்ட அந்த நிலத்தை தொண்டு நிறுவன நோக்கம் மற்றும் விதிமுறைகள் படி ஆதரவற்ற பெண்களுக்கான தொழில் மையம் அமைக்கப் பயன்படுத்த வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறி
சி.எஸ்.ஐ., மதுரை- இராமநாதபுரம் திருமண்டலத்தின் ஆயர் நிர்வாகம் மூலம் மோசடியாக நிலம் வெளியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனையில் பெரிய தொகை முறைகேடுகள் நடந்துள்ளது. இந்தச்சட்டவிரோதமான நடவடிக்கைக்கு பல அரசு உயர் அலுவலர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணை கோரி CBI,க்கு 2020 ஆம் ஆண்டில் நான் புகார் அனுப்பினேன். அதன் அடிப்படையில் அவர்கள் எனது மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த வழக்கில் பெரிய அளவில் மோசடிகள், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளது. சர்ச்சிற்குச் சொந்தமான சொத்தினை அபகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்விக்கு உட்படுத்திய நபர்களின் குரலை அதன் நிர்வாகிகள் முடக்கியதால், சர்ச் குரலற்றதாகி விட்டது. சர்ச் உறுப்பினர் என்ற முறையில் மனுதாரர் மாநில காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சில காரணங்களால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. CBI க்கும் புகார் அனுப்பினார். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. அந்தச் சொத்தானது தற்போது வரை அரசின் சொத்தாகவே உள்ளது. அதை விற்க சர்ச் நிர்வாகத்திற்கு அதிகாரமில்லை.
முன்பு வீடுகளிலிருந்து தேவாலயங்களுக்கு நிதி சென்றது. தற்போது மனசாட்சியுள்ளவர்கள் சர்ச் நிர்வாகத்தின் நாற்காலியை அலங்கரிக்கவில்லை. பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக சர்ச் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் நிர்வாகிகளால் மோசடி செய்யப்படுகின்றன. சொத்துக்களை பராமரிக்க பிஷப் மற்றும் பிற நிர்வாகிகள் கடமைப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, தற்போது இந்தியா முழுவதும், சர்ச் சொத்துக்கள் அதன் நிர்வாகிகளால் சரியாக நிர்வகிக்கப்படுவதில்லை. இதுபோன்ற சில மோசடிகள், தமிழ்நாட்டின் ஒரு பகுதியிலுள்ள சர்ச்சிற்கு சொந்தமான சொத்துக்கள் விற்கப்பட்டது பற்றி சாமுவேல்ராஜ் எழுதிய 'சிலுவையில் அறையப்பட்ட தலித் கிறிஸ்தவர்கள்' எனும் புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஜோசப் ஞானசீலன் முத்துராஜ் எழுதிய,'சர்ச்சுகளுக்கான கார்ப்பரேட் கவர்னன்ஸ்' தலைப்பில் சர்ச் நிர்வாகிகள் செய்த பல தவறான செயல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. உயர்ந்த நோக்கத்திற்காகநிலம் ஒப்படைவு செய்யப்பட்டது. அந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தவில்லை. எதற்காக இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டது, சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன என்பது பற்றி திருச்சபையின் நிர்வாகிகள் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் அந்த நிலத்தை ஏதோ சுயநலத்திற்காக பயன் படுத்தினர். ஒவ்வொரு மதமும் தொண்டு செய்வதை நோக்கமாகக் கொண்டது. எங்கெல்லாம் அவல நிலை இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுளால் அனுப்பிய நபர்கள் வந்து தொண்டு செய்வார்கள் என்பது அனைத்து மதத்தினரின் நம்பிக்கை. அந்த நபர்கள் தற்போது தங்கள் சொந்த மதம், நம்பிக்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சி.எஸ்.ஐ.டி.ஏ., மற்றும் சி.எஸ்.ஐ., மதுரை-ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் நேர்மையற்ற நோக்கில் பல அரசு அலுவலர்களின் உடந்தையுடன் சுதந்திர காலத்திற்கு முன் இருந்த பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிர்வாக அரசின் காலத்தில் கொடுத்த ஒப்படைவு நிலத்தை சட்டவிரோதமாக மூன்றாவது நபர்களுக்கு விற்றுள்ளனர். ரூபாய்.22 கோடி மதிப்பிலான சொத்திற்கு விதிகளை மீறி ரூபாய்.91 லட்சத்து 43 ஆயிரத்து 472 க்கு மட்டுமே ரொக்கமாக ரசீதை பெற்றுள்ளனர். மீதம் கணக்கில் வராத கருப்புப் பணம் கணக்கில் வரவில்லை எந்த வித உரிமையும் இல்லாமல் ரூபாய்.1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 472க்கு அரசின் சொத்து சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் காவல் துறையினர் விசாரணையில் ஆர்வம் செலுத்தவில்லை.குற்றச்சாட்டிற்கு தகுந்த முகாந்திரம் உள்ளது. மோசடி பரிவர்த்தனையில் தொடர்புடைய ஊழல் செய்த நபர்கள் மீது டில்லி சி.பி.ஐ., மற்றும் சென்னை சி.பி.ஐ., இணை இயக்குனர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். என உத்தரவிட்டார்.
கருத்துகள்