முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்ரீஹரிகோட்டவில் துருவா ஸ்பேஸ் பிஎஸ்எல்வி-சி55 இன்று விண்வெளியில் ஏவப்படுகிறது

துருவா ஸ்பேஸ் பிஎஸ்எல்வி-சி55 இல் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை வரிசைப்படுத்தல் மற்றும் சுற்றுப்பாதை இணைப்பை வெற்றிகரமாக நிலைநிறுத்துகிறது பிஎஸ்எல்வி ஏவுகணை வாகனத்துடன் இணக்கமான செயற்கைக்கோள் வரிசைப்படுத்தல் அமைப்புகளை இந்நிறுவனம் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. துருவா ஸ்பேஸ் தனது '3U மற்றும் 6U செயற்கைக்கோள் ஆர்பிட்டல் டிப்ளோயர்ஸ்' மற்றும் 'ஆர்பிட்டல் லிங்க்' ஆகியவற்றின் வெற்றிகரமான சோதனை மற்றும் விண்வெளி தகுதியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி-சி 55 பயணத்தில் புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து துருவ செயற்கைக் கோள் ஏவு வாகனம் (பிஎஸ்எல்வி)-சி 59 / புரோபா-3 விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. , இன்று புதன்கிழமை ஆந்திரப் பிரதேசம். ஸ்ரீஹரிகோட்டவிலுள்ள  இந்த பணியானது போலார் சாட்டிலைட் லான்ச் வெஹிக்கிள் (பிஎஸ்எல்வி)-சி59 தோராயமாக 550 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும். அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையில் செலுதப்பட உள்ளது,  PROBA-3 பணி என்பது ஐ...

ஓரிஸ் குழும நிறுவனங்களின் பெயரில் ரூபாய் .31.22 கோடி மதிப்பிலான சொத்துக்களை ED முடக்கியது

ஓரிஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய லாக்கர்களில் இருந்து மீட்கப்பட்ட பல ஆவணங்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் கைப்பற்றியது. மேலும், ஓரிஸ் குழும நிறுவனங்களின் பெயரில் ரூபாய் .31.22 கோடி மதிப்பிலான பல்வேறு நிலையான வைப்புக்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் முடக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஊக்குவிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் லாக்கர்கள் முடக்கப்பட்டு, ஓரிஸ் குழுமத்தின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்களில் ஒருவரின் இல்லத்திலிருந்து மெர்சிடிஸ், போர்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற நான்கு சொகுசுக் கார்களையும் பறிமுதல் செய்தனர். இரகசியமான லாக்கர்களில் இருந்து பல ஆவணங்களை அமலாக்கத்துறை இயக்குனரகம் கைப்பற்றியுள்ளது.      பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002ன் விதிகளின் கீழ் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று டெல்லி, NCR பகுதியிலுள்ள 14 இடங்களில் ஓரிஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது. விஜய...

அரசு பணம் கையாடல் செய்ததில் சுற்றுலா சென்றவரை சிறை செல்ல வைத்த நீதிமன்றம்

தேனி NTR நகரில் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளரான முருகானந்தம்(வயது 56) பொய்யான கணக்கைக் காட்டி ரூபாய்.1 கோடியே 16 லட்சம் கையாடல் செய்த. பணத்தில் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதோடு, குடும்பத்தோடு சுற்றுலாவும் சென்று செலவு செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கழிவுநீர் அகற்றும் கோட்டத்தின் தலைமை அலுவலகத்தின் உத்தரவில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலர் வரதராஜன் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி, ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, 26 ஆம் தேதிகளில் ஆய்வு செய்ததில், அங்குள்ள குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய முருகானந்தம் என்பவர் (திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர்) , பொய்யான கணக்கைக் காட்டி ரூபாய்.1 கோடியே 16 லட்சம் வரை கையாடல் செய்திருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்ததையடுத்து முருகானந்தம் பணியிட...

ஜாமீனில் வெளி வந்த மறுநாளே அமைச்சராகப் பொறுப்பேற்றது ஏன்? என செந்தில் பாலாஜிக்கு நீதிபதி ஓஹா கண்டனம்

ஜாமீனில் வெளி வந்த மறுநாளே அமைச்சராகப் பொறுப்பேற்றது ஏன்? என செந்தில் பாலாஜிக்கு நீதிபதி ஓஹா கண்டனம் பல வழக்குகள் நிலுவையில் உள்ள போது எவ்வாறு அமைச்சராகப் பொறுப்பேற்க முடியுமென சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓஹா கேள்வி எழுப்பினார். சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி அண்மையில்  வெளியே ஜாமீனில் வந்ததும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றப்பட்டது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கெனவே வகித்த பதவியான மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையே திரும்ப வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எதிர்த்து வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவானது நீதிபதி அபே ஓஹா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஓஹா, "மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயமுள்ளது. பல வழக்குகள் நிலுவையிலுள்ள போது அமைச்சராக எப்படிப் பொறுப்பேற்க முடியும்? நாங்கள் ஜாமீன் கொடுத்த அடுத்த நாளே நீங்கள் ...

2024 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

2024 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, 33 முன்மாதிரியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய விருதுகளை நாளை புதுதில்லியில் இந்திய குடியரசுத் தலைவர் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 16 மாற்றும் முயற்சிகளை அரசாங்கம் வெளியிட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை (DEPwD), சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்பதற்கான மதிப்புமிக்க தேசிய விருதுகளை புதுதில்லியில் நாளை, 2024 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தவுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர், ஸ்ரீமதி. திரௌபதி முர்மு, இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பிற்காக 33 முன்மாதிரியான தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருதுகளை வழங்குவார். இந்த நிகழ்வில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித...

ரியாத்தில், பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா மாநாட்டில் (UNCCD) ​​ஸ்ரீ பூபேந்தர் யாதவ் இந்தியாவின் அறிக்கையை வழங்கினார்

சவூதி அரேபியாவின் ரியாத்தில், பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐநா மாநாட்டின் CoP16 இல், வறட்சி தாங்கும் தன்மை குறித்த மந்திரி உரையாடலின் போது, ​​ஸ்ரீ பூபேந்தர் யாதவ் இந்தியாவின் அறிக்கையை வழங்கினார். மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர், ஸ்ரீ பூபேந்தர் யாதவ், இன்று சவுதி அரேபியாவின் ரியாத்தில், பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா மாநாட்டின் (UNCCD) வறட்சி மீள்தன்மை குறித்த அமைச்சர்களின் உரையாடலின் போது இந்தியாவின் அறிக்கையை வழங்கினார். நிலச் சீரழிவு மற்றும் பாலைவனமாக்கலுக்கு எதிரான இந்தியாவின் அசாதாரண பயணத்தை அமைச்சர் விவரித்தார், இவை UNCCDயின் ஒட்டுமொத்த நோக்கங்களுடன் இணைந்துள்ளன. அவர் கூறினார், “எங்கள் பயணம் அர்ப்பணிப்பு, புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியின் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. CoP 5 இல் நிலச் சீரழிவை ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக உலகளவில் அங்கீகரிப்பதில் இருந்து, CoP 10 இல் சமூகத்தால் இயக்கப்படும் நில மறுசீரமைப்பை வலியுறுத்துவது வரை, அதன் பிறகு CoP 14 இல் நிலம் மறுசீரமைப்பை ஒரு முக்கியமான காலநிலை மாற்ற உத்தியாக அங்கீகரிப்பது, சீரழிந்த நிலங்...

இலஞ்சம் பெற்ற மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 20 ஆயிரம் அபராதம்.

புதிய மின்சார இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 20 ஆயிரம் அபராதம். செங்கல்பட்டு மாவட்டம் புதிய மின்சார இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின்சார வாரியத்தின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய்.20 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது புதிய கடைக்கு மின்சார இனணப்புக் கோரி கடந்த 28.12.2011 ஆம் தேதியன்று உரிய ஆவணங்களுடன் ஒக்கியம் துரைப்பாக்கம் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்ற போது உதவி மின்சார வாரியத்தின் பொறியாளராகப் பணியாற்றி வந்த பச்சையப்பனிடம் மனுக் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட பச்சையப்பன் பணம் செலுத்தும் கவுண்டரில் பதிவுக் கட்டணம் ரூபாய்.50 கட்டிவிட்டு, தனக்கு தனியாக ரூபாய்.5 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 13.1.2012 ஆம் தேதியன்று ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ரூபாய்.50 மட்டும் கட்டி விட்டு அந்த ரசீதை உதவி மின்சார வாரியத்தின...

மின்சார இணைப்பை இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் மற்றும் மின் கம்பியாளர் கைது

மின்சார இணைப்பை இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் மற்றும் மின் கம்பியாளர் கைது,  காஞ்சிபுரம் மாவட்டம்  தாமல் அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் பிரபாகர் (வயது 28). இவர் தன் இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த மின்சார இணைப்பை இடமாற்றம் செய்ய முடிவு செய்தார்.  அதற்காக தாமல் மின்சார வாரிய இளநிலைப் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் அசோக்ராஜ் என்பவரைத் தொடர்பு கொண்டு. ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு இடமாற்றம் செய்ய 1550.00 ரூபாய் கட்டணமும் செலுத்தும் படி கூறியுள்ளார். அதன் பிறகு  ஆன்லைனில் பணத்தைக் கட்டி விட்டு அசோக் ராஜை தொடர்பு கொண்ட பிரபாகரிடம் , மீட்டர் மற்றும் டேரிப் கட்டண விகிதம் மாற்றித் தருவதற்கு ரூபாய் நாலாயிரம் ரூபாய் பணத்தை கம்பியாளர் சாந்தமூர்த்தியிடம் கொடுக்குமாறு அசோக்ராஜ் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத, பிரபாகர், அது குறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் அரசு சாட்சிகள் வரவழைத்து பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை ப...

புயல் பாதிப்பு மலைச் சரிவுகளில் உயிரிழந்த மக்கள்

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவால் பாறைகள் உருண்டதில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கு மேல் சிக்கித் தவித்த 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சிறுவன் உள்ளிட்ட மூவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளிக்கின்றத. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த கட்சிகளின் தலைவர்கள் கருத்து இது- பாமக:- "அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதத்தில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சூழல்களில் துரிதமாக செயல்பட்ட, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டியது அவசியம்" என தெரிவிக்கப்பட்டது. பஞ்ச பூத ஸ்தலம்  மலையே அக்னிக்  கடவுளாக வணங்குமிடம் திருவண்ணாமலை. 2662 அடி உயரம்முள்ள மலையின் சுற்றளவு 14.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த மலையே  அண்ணாமலையாக நினைத்து பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கார்த்திகை தீபத்தன்று மலை உச்சிக்கு சென...