மத்திய அரசின் சார்பில், ஒவ்வோரு வருடமும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருது சாகித்ய அகாதமி விருது
மற்றும் பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படும். நாட்டிலுள்ள 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் வெளியானது. 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதியன்று வ.உ.சிதம்பரம் பிள்ளை. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக, மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் விரிவாக ஆராயும் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய
`திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908' என்ற புத்தகத்துக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படது.சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908-ஆம் ஆண்டில் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908'" ஆகும் இதற்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்தார்.
கருத்துகள்