இலஞ்சம் பெற்ற மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 20 ஆயிரம் அபராதம்.
புதிய மின்சார இணைப்புக்கு லஞ்சம் பெற்ற மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 20 ஆயிரம் அபராதம்.
செங்கல்பட்டு மாவட்டம் புதிய மின்சார இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின்சார வாரியத்தின் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய்.20 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது புதிய கடைக்கு மின்சார இனணப்புக் கோரி கடந்த 28.12.2011 ஆம் தேதியன்று உரிய ஆவணங்களுடன் ஒக்கியம் துரைப்பாக்கம் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்ற போது உதவி மின்சார வாரியத்தின் பொறியாளராகப் பணியாற்றி வந்த பச்சையப்பனிடம் மனுக் கொடுத்துள்ளார்.
அதனை பெற்றுக்கொண்ட பச்சையப்பன் பணம் செலுத்தும் கவுண்டரில் பதிவுக் கட்டணம் ரூபாய்.50 கட்டிவிட்டு, தனக்கு தனியாக ரூபாய்.5 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, 13.1.2012 ஆம் தேதியன்று ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் ரூபாய்.50 மட்டும் கட்டி விட்டு அந்த ரசீதை உதவி மின்சார வாரியத்தின் பொறியாளர் பச்சையப்பனிடம் காண்பித்துள்ளார்.
அதனையடுத்து, பச்சையப்பன் சொன்ன படி எஸ்ட்டிமேட் கட்டணம் ரூபாய்.1,950 ஐ, 18.1.2012 ஆம் தேதியன்று கவுண்டரில் கட்டிவிட்டு மறுநாள் 19.1.2012 ஆம் தேதியன்று பச்சையப்பனை மின்சார வாரியத்தின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து மின்சார இனைப்பு பற்றி கேட்டுள்ளார். அதற்கு பச்சையப்பன் ரூபாய்.5000 எங்கே எனக் கேட்டதாகவும்
அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று மணிகண்டன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பச்சையப்பன் கேட்ட பணம் ரூபாய்.5000 திலிருந்து பாதியாக குறைத்து ரூபாய்.2,500 ஆவது கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன் பச்சையப்பன் மீது கடந்த 19.1.2012 ஆம் தேதியன்று சென்னை நகரப் பிரிவு-1, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைப் பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில், கடந்த 19.1.2012 ஆம் தேதி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பிரிவினர் வழக்குப் பதிவு செய்து 20.1.2012 அன்று பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொண்டு மணிகண்டனிடம் ரூபாய்.2,500 லஞ்சப் பணத்தை தமிழ்நாடு மின்சார வாரிய சென்னை துரைப்பாக்கம் அலுவலகத்தில் உதவி மின்சார வாரியத்தின் பொறியாளர் பச்சையப்பன் பெறும் போது அவரை கையுடன் பிடித்துக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பச்சையப்பன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கினை செங்கல்பட்டு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை குற்றவில் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ குற்றம் சுமத்தப்பட்ட பச்சையப்பன் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டளையும் ரூபாய்.20 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
கருத்துகள்