முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவிளையாடல் 33 வது படலம் கார்த்திகைப் பெண்களுக்கு குரு பகவான் அஷ்ட சித்து உபதேசம்

"ஐந்துமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்,                            வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்                ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்                                         முருகா என்றோதுவார் முன்",   

ஆறுமுகமான தமிழ்க் கடவுள் அழகன்  முருகப்பெருமான்.  ‘மலை சார்ந்த குறிஞ்சி நிலக் கடவுள்’, செந்நிற மேனியன், சூரியனுக்கு ஒப்பானவன் எனப் போற்றப்படுகிறார்.                    சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் கார்த்திகை நட்சத்திரத்தை எளிதாக அடையாளம் காணலாம்.  ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பே கார்த்திகை நட்சத்திரம் .சிவன் நெற்றியில் உதித்த தீப்பிழம்புகளை சரவணப் பொய்கையில் சேர்த்தார். ஆறு தீப்பிழம்புகளும் ஆறு குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் வளர்த்தனர். அந்தப் பெண்கள் சரவண பொய்கைக்கு வருகை தந்த சிவபெருமானையும்பார்வதி தேவியையும் வணங்கிய போது சிவபெருமான் அவர்கள் கேட்ட அஷ்ட சித்து வரமளித்தார். அது.                “அனி மாதி சித்திகளானவை கூறில் அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை.  இணுகாத வேகார் பரகாய மேவல். அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே" -திருமூலரின் திருமந்திர-668 வது பாடல்.    அதாவது                   


அணிமா (அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்). மகிமா (மலையைப் போல் பெரிதாதல்). இலகிமா (காற்றைப் போல் இலேசாய் இருத்தல்). கரிமா  (கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்). பிராத்தி (எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்). பிராகாமியம் (உடல் கூடு விட்டுக் வேறு உடல் கூடு பாய்தல்) ஈசத்துவம்  (நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்). வசித்துவம் (அனைத்தையும் வசப்படுத்தல்). இவைதான் அஷ்ட சித்துக்கள்.      "வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே.              செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை".   முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். இவர்கள், பார்வதியின் அம்சம் என்று ஒரு சாராரும், சப்தரிஷிகள் எனப்படும் ஆங்கிரஸ், கிருது, மரீசி, புலஹர், புலஸ்தியர், அத்ரி மற்றும் வசிஷ்டர் ஆகியோரில், வசிஷ்டர் மனைவி அருந்ததி நீங்கலாக, மற்றவர்களின் துணைவியர் என்று, மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை, ஆறு ரிஷி பத்தினிகளுக்கும் அளித்தார்,


சிவன். அப்போது இவர்களுக்கு, நிதர்த்தினி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா மற்றும் துலா என்ற பெயர்கள் ஏற்பட்டன.முருகனையே வளர்க்கும் பேறு பெற்ற இவர்களை, வான மண்டலத்தில் நட்சத்திரமாக ஒளிரும் வாய்ப்பளித்தார், சிவன். இந்த நிகழ்வு ஆடி கிருத்திகையன்று நிகழ்ந்ததால், இந்த நாள் முருகனுக்குரிய விசேஷ நாளாயிற்று. மேலும் முருகனுக்கு, கார்த்திகேயன் என்ற பெயரும் ஏற்பட்டது.  பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக உள்ளது அதில் 33 வது படலம் அஷ்ட சித்து உபதேசித்த படலமாகும். திருக்கைலாயமலையில் ஆலமர நிழலில் சிவனும் உமையம்மையார் இருக்க பூதத் தலைவர்களுக்கும் ஜனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்களுக்கும் சிவ நெறிகளையும் தருமங்களையும் உபதேசித்துக் கொண்டிருந்த போது முருகனை வளர்த்த  பெண்கள் அறுவரும் அடக்கமாக விபூதியும் ருத்திராட்சிதமும் அணிந்து  இறைவனிடம் "எமக்கு அட்டமாசித்திகளை அறிவித்தருள்க" என வேண்டினார்.

இறைவனும் அவர்களுக்கு அவற்றை உபதேசிக்க அவர்கள் உடனே அவற்றை மறந்தனர். மறதி அவர்களுக்கு இழப்பைத் தந்தது. சிவனார் கோபித்துப் பொறுப்பற்ற நீங்கள் பட்டமங்கை எனும் ஊரில் பாறாங்கல்லாகக் கிடக்கக்கடவது என சபித்தார். "விமோசனம்"  கேட்டார்கள். ஆயிரம் ஆண்டுகள் அங்கே கல்லாகக் கிடந்த பின் அங்கு குருவாக சோம சுந்தரக் கடவுளாக யாம் வருவோம். அட்டமாசித்திகளின் பெயர்களும் அவற்றின் விவரமும் அங்கு மீண்டும் கூறுவோம்" என அருளினார்.


அவ்வாறே அவ்வியக்கியர் அனைவரும் பட்ட மங்கையில் கெட்டொழிந்த கற்களாய்க் கிடந்தனர். ஆயிரம் வருடம் அகன்ற பின் சோம சுந்தரர் குரு தெட்சிணாமூர்த்தியாக அங்கு வந்து அவர்களை எழுப்பினர்; அதில் காளி வடிவாக இருந்த பார்வதியும் அழகு வடிவம் பெற்ற பின்னர் எழுந்த கன்னியர் அறுவரும் உமையம்பிகையும் குருவருளைப் பெற வணங்கினர்.  சிரமேற் கரம் வைத்த குருவான ஈசன் அட்டமாசித்திகள் உபதேசித்து அருளினார். இறைவனை அறிந்த யோகியர்கள் இந்தச் சித்திகளை அறிவார்கள்; ஆனால் செயல்படுத்த மாட்டார்கள்; இவை நாடிய பொருளைத் தரும்; தேடிய தகவல்களைத் தரும்; எனினும் அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டுச் சித்திகளை அடைய உத்தம யோகியர்கள் விரும்பமாட்டார்கள்; அதை விட உயர்ந்த மனநிலையில் வாழவேண்டுவார்கள் என அறிவித்தார்.

ஈசன் வழங்கிய சித்திகளைப்பற்றி அறிந்தவர்கள் உமா பார்வதியை மனத்தில் தியானித்து அதன் பயனாக அட்டமாசித்திகளை நன்கு பயின்று விண்வழியே சென்று தாம் உறையும் திருக்கைலாய மலையை அடைந்தனர். தட்சிணாயண காலமான, சூரியனின் தெற்கு நோக்கிய பயண காலத்தின் துவக்க மாதமான, ஆடியில் வரும் கார்த்திகை, இதே காலத்தில் வரும் கார்த்திகை மாத திருக்கார்த்திகை, உத்ராயண காலமான, சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் துவக்க மாதமான, தை மாத கார்த்திகை ஆகியவை விசேஷம் "குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர்தடிந்தாய்! புன்தலைய பூதப்பொரு படையாய் - என்றும்  இளையாய்! அழகியாய்! ஏறுஊர்ந்தான் ஏறே!இளையாய்! என் உள்ளத்து உறை." 

"குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்.  மெய்விடா வீரன்கை வேல்!" - 

 "வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும். துளைத்தவேல் உண்டே துணை." -

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும் கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட தனி வேலை வாங்கத் தகும்." 

"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும். வேலப்பா! செந்தில் வாழ்வே!" - -(நேரிசை வெண்பா). திருமுருகாற்றுப்படை"பட்டமங்கையில் பாங்காயிருந்து அட்டமாசித்தி அருளிய அதுவும்" - மாணிக்கவாசகர்   கீர்த்தித்திருவகவல் . கார்த்திகை பெண்களை வணங்கும் குருஸ்தலம்  இந்த ஸ்தலம் தேவர்களுக்கு அடைக்கலம் தந்த கடம்பவன முனிவர் வசித்த க்ஷேத்திரம் அய்யனார் உருவில் பூதகணங்கள் உடன் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...